Home

வவுணதீவில் நடைபெற்ற குற்றச்செயல்களைக்கும்  முன்னாள் போராளிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்கின்றார் அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகளின் ஒன்றியத்தின் இணைப்பாளர் வடிவேல் சசிதரன்

வவுணதீவில் நடைபெற்ற குற்றச்செயல்களைக்கும் முன்னாள் போராளிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்கின்றார் அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகளின் ஒன்றியத்தின் இணைப்பாளர் வடிவேல் சசிதரன்

(டினேஸ்) இன்று 20 ஆம் திகதி அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துருந்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்………………… முன்னாள் போராளிகள் 30 வருட காலமாக பல துன்பங்களை அனுபவித்து வந்துள்ளனர் அந்தவகையில் அவர்கள் யுத்தம் முற்றும்பெற்றதன் பின்னர் வாழ்வாதார வசதிகள் இன்றி இன்னும் பல சொல்லொனாத் துயரங்களை அனுபவித்து வந்துள்ளனர். இவ்வாரான சந்தர்ப்பங்களில் முன்னாள் போராளிகளை அப்பட்டமான பொய்களை சுமத்தி கைது செய்வதும் அவர்களை சிறைக்குள் தள்ளுவதும் மிகவும் வருத்தத்திற்கு […]

சற்றுமுன்னர் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் வீழ்ந்து 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் தற்கொலை  (டினேஸ்)

சற்றுமுன்னர் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் வீழ்ந்து 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் தற்கொலை (டினேஸ்)

காத்தாங்குடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்தில் சற்றுமுன்னர் 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டதாக காத்தாங்குடி பொலீஸார் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக மேலும் விசாரிக்கையில் குடும்பத் தகராறு காரணமாக விரக்தியடைந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர் கூறியதாக தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்ட நபரது சடலம் மீட்பது தொடர்பாக கடற்படையினர் மற்றும் பிரதேசவாசியினர் மீனவர்கள் என பலரும் தேடிவருவதாக காத்தாங்குடி பொலீஸார் தெரிவித்திருந்தனர்.

குடும்ப தகராறு காரணமாக 36 வயது மதிக்கத்தக்க மூன்று பிள்ளைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை மட்டக்களப்பு தேத்தாத்தீவில் சம்பவம்

குடும்ப தகராறு காரணமாக 36 வயது மதிக்கத்தக்க மூன்று பிள்ளைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை மட்டக்களப்பு தேத்தாத்தீவில் சம்பவம்

(டினேஸ்) களுவாஞ்சிக்குடி பொலீஸ் பிரிவிக்குட்பட்ட பிரதான வீதி தேத்தாத்தீவு பகுதியைச் சேர்ந்த செல்வரட்ணம் ஶ்ரீகலா என்ற 36 வயது மதிக்கத்தக்க மூன்று பிள்ளைகளின் தாயாரே இன்று காலை தனது அவரது இல்லத்தில் உள்ள கடையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலீஸார் தெரிவித்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் வினவியபோது….

மட்டக்களப்பு மாநகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்…

மட்டக்களப்பு மாநகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மட்டக்களப்பு மாநகரசபையின் 2019ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்றைய தினம் 23 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது. மாநகரசபையின் வரவுசெலவுத் திட்டத்திற்கான விசேட அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவான் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது மாநகரசபையின் 20 வட்டாரங்களுக்குமான அபிவிருத்திகள் தொடர்பில் மாநகர முதல்வரினால் விளக்கம் அளிக்கப்பட்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

இரவு பகல் பாராது அஜந்தனின் மனைவி கைக்குழந்தையுடன் உண்ணாவிரத போராட்டத்தில்     (டினேஸ்)

இரவு பகல் பாராது அஜந்தனின் மனைவி கைக்குழந்தையுடன் உண்ணாவிரத போராட்டத்தில் (டினேஸ்)

வவுணதீவில் இரு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவனை விடுதலை செய்யுமாறு கோரி, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன், கைது செய்யப்பட்டவரின் மனைவி உண்ணாவிரத போராட்டத்தை இன்று 17 காலை ஆரம்பித்திருந்தார் இந்த உண்ணாவிரதப் போராட்டமானது கடந்த 30ஆம் திகதி வவுணதீவில் இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள அஜந்தன் எனப்படும் சி.இராஜகுமாரனின் மனைவி மற்றும் பிள்ளைகளே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் வீழ்ந்து 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் தற்கொலை  (டினேஸ்)

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் வீழ்ந்து 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் தற்கொலை (டினேஸ்)

காத்தாங்குடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்தில் சற்றுமுன்னர் 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டதாக காத்தாங்குடி பொலீஸார் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக மேலும் விசாரிக்கையில் குடும்பத் தகராறு காரணமாக விரக்தியடைந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர் கூறியதாக தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்ட நபரது சடலம் மீட்பது தொடர்பாக கடற்படையினர் மற்றும் பிரதேசவாசியினர் மீனவர்கள் என பலரும் தேடிவருவதாக காத்தாங்குடி பொலீஸார் தெரிவித்திருந்தனர்.

முன்னாள் போராளியின் விடுதலையை வலியுறுத்தி அவரது குடும்பத்தார் சாகும்வரையிலான உண்ணாவிரதம் போராட்டம்  (டினேஸ்)

முன்னாள் போராளியின் விடுதலையை வலியுறுத்தி அவரது குடும்பத்தார் சாகும்வரையிலான உண்ணாவிரதம் போராட்டம் (டினேஸ்)

வவுணதீவு பொலீஸார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பிரதான சந்தேகம் நபராக கைதி செய்யப்பட்ட அஜந்தன் என்பவரை விடுதலை செய்ய வேண்டி அவரது மனைவி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளார். இந்த குழந்தைகளின் தந்தை ஒரு முன்னால் போராளி அண்மையில் நடந்தேறிய இரு பொலிசாரின் கொலைக்கு இவரை சந்தேகபட்டு சிறையில் இருக்கின்றார்.

முதியோர் சிறுவர்களை கௌரவித்துப் பாராட்டிய புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையம்

முதியோர் சிறுவர்களை கௌரவித்துப் பாராட்டிய புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டு அதன் கன்னி முயற்சி நிகழ்வாகிய முதியோர் சிறுவர் பாராட்டு விழா நேற்று மாலை மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரி மண்டபத்தில் சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.அருமைத்துரை அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இரண்டாவது குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த ஒன்பது தாய்மார்களுக்கு தலா ரூபா 10000.00 வழங்கி வைப்பு

இரண்டாவது குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த ஒன்பது தாய்மார்களுக்கு தலா ரூபா 10000.00 வழங்கி வைப்பு

இரண்டாவது குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த ஒன்பது தாய்மார்களுக்கு தலா ரூபா 10,000.00 வழங்கி வைக்கப்பட்டதுடன் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட 63 குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகளும் வழங்கி வைக்கும் நிகழ்வு 16 ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) மகிழவட்டவான் கிராமத்தில் இடம்பெற்றது.

கிழக்குமாகாண புதிய இராணுவக் கட்டளைத் தளபதி – மட்டு. அரசாங்க அதிபர் சந்திப்பு

கிழக்குமாகாண புதிய இராணுவக் கட்டளைத் தளபதி – மட்டு. அரசாங்க அதிபர் சந்திப்பு

கிழக்கு மாகாணத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவக்கட்டளைத்தளபதிக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாருக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை முற்பகல் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கே.பி.அருண ஜசேகர, இராணுவத்தினர் வசமுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை கட்டங் கட்டமாக விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். இச் சந்திப்பிலேயே கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.பி.அருண ஜசேகர தெரிவித்துள்ளார்.

தமிழ்த்;;;;;;;;;;;;;;;;;; தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய  வேண்டும்?  – தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்

தமிழ்த்;;;;;;;;;;;;;;;;;; தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்? – தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்

அரசியல் ஒரு சமூக விஞ்ஞானம். அதில் அறிவுபூர்மான அணுகு முறைகளும் பரிசோதனை முயற்சிகளும் தேவை. இன்று நாட்டில் எழுந்துள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும் என்பதையிட்டு இப்பத்தியின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பெற்ற விடயத்தை அடிப்படையாக வைத்துச் சில ஆலோசனைகளைத் தமிழர்களுடைய அரசியல் அரங்கில் முன் வைக்க விரும்புகின்றேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மகிந்தராஜபக்ச அவர்களைப் பிரதமராக நியமித்தது சரியா? பிழையா? என்ற அரசியலமைப்பு வியாக்கியானங்களுக்குள் செல்லாமல்ரூபவ் சரி எது? பிழை எது? […]

இறுதிக்கட்ட யுத்தத்தில் அரசாங்கத்திடம் சரணடைந்த போராளிகளையும் அரசியல் கைதிகளையும் மஹிந்த  அரசாங்கமே விடுதலை செய்தது என்கின்றார் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி  (டினேஸ்)

சம காலத்தில் நிலவிவரும் அரசியல் மாற்றம் தொடர்பான 02 வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்க காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறுகையில் கடந்த 2009 ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பத்தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் அரச தரப்பினரிடமே சரணடைந்தனர் அவர்களை எதுவித நிபந்தனைகளுமின்றி அன்றைய காலத்திலிருந்த மஹிந்த அரசாங்கமே விடுத்து சமூகமயப்படுத்தியது.

கிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்

கிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இன வீதாசாரம் குறைந்து கொண்டே செல்கின்றது. அரசியல் கொள்கை பாரம்பரியம் பேசிக் கொண்டு காலத்தினை இழுத்தடித்தால் கிழக்கில் தமிழர் மாற்று சமுகங்களிடம் அரசியல் அடிமையாகும் நிலை தோன்றிவிடும் என முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார். கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்;டார். அவர் மேலும் […]

மாவட்ட விளையாட்டு விழா – 2018

மாவட்ட விளையாட்டு விழா – 2018

மாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும் ஜுன் 30ஆம் திகதி மற்றும் ஜுலை 01ஆம் திகதியும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது. சனிக்கிழமை தடகளப் போட்டிகள் நடைபெற்றுஇ ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ:வுகள் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடக்க நிகழ்வுகள்இ ஒலிம்பிக் தீபமேற்றல்இ காலை 09 மணிக்கு நடைபெற்றுஇ இறு தி நிகழ:வுகள் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளதுஇ பிரதி அமைச்சர்கள்இ கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களும் இ பிரதம அதிதியாக மாகாண […]

மட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்

மட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரான நேசகுமாரன் விமலராஜுக்கு 22.05.2018 அன்று அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்ட சேவை இடைநிறுத்தத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றானது மேற்படி வேலையிலிருந்து இடைநிறுத்தியதை வன்மையாக கண்டித்துடன் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடை நிறுத்தியதை மீளப் பெறப்பட்டதுடன் தன்னுடைய இடமாற்றம் தொடர்பான வழக்கும் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் மீளப் பெறப்பட்டது.

சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .

சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .

புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்களை சேகரித்து வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் முயற்சியில் இம்மாவட்டத்திலுள்ள பிரதேச செயலங்கள் மூலம் பிரதேச செயலாளர்களின் பங்களிப்பில் இந்த நிவாரணபொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க ஊடகப்பிரிவுத்தகவல் தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)

மட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)

மட்டக்களப்பு மனிதநேய அமைப்புகளின் ஒன்றியத்தின் (CHA) மாவட்ட அலுவலராக பணியாற்றிவந்த சொலமன் பசில் சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப்பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு விபுலானந்தா இசை, நடனக் கல்லூரியில் கடந்த வாரத்தில் நடைபெற்ற இவ்வைபவமானது யுத்தகாலத்தில் சமாதானத்தை வலியுறுத்தி, மூவினமக்களையும், குழுக்களையும் அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூகங்களை ஒருங்கிணைப்பதிலும் மனித நேய பணியிலும் ஈடுபட்டிருந்தமைக்காக இக்கௌரவப் பட்டம் வழங்கப்பட்டதுடன், புத்தகமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் – கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.

மட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் – கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக கடமையாற்றிய இரா.நெடுஞ்செழியன் கிழக்கு மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக கௌரவ முதலமைச்சர் செயலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

முதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் அவசியத்தினை கருத்திற் கொண்டு விண்ணப்பித்த 45 வயதிற்கு உட்பட்ட அனைவரும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 5,000 பட்டதாரிகள் 2018ம் ஆண்டு ஜுலை மாதத்திலும், 15,000 பட்டதாரிகளை 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு

பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறிஇ 97 வாக்குகளைப் பெற்று பிரதிச் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளைஇ 53 வாக்குகளைப் பெற்றார். ஆனந்த குமாரசிறியின் பெயரைஇ ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான புத்திக பத்திரண முன்மொழிந்தார்.

கடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் !

கடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் !

கடமை நேரத்தில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் நோயாளிக்கு மருந்துகட்டும்போது வலிதாங்கமுடியாமல் அந்தநோயாளி தாக்கியதாகக் கூறப்படுகின்றது. பலரும் பார்த்திருக்கத்தக்கதாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாதிய தொழிற்சங்கமும் சம்பந்தப்பட்டது. வைத்தியசாலை நிருவாகம் எடுத்த நடவடிக்கையின் பேரில் கல்முனைப்பொலிசார் உடனடியாக விரைந்து பிரஸ்தாப நபரை கைதுசெய்து தடுத்துவைத்தனர்.