Home

மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், புதிய நிருவாகத் தெரிவும்…

மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், புதிய நிருவாகத் தெரிவும்…

மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், புதிய நிருவாகத் தெரிவும் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகசுந்தரம் தலைமையில் மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கூட்டுறவுத் திணைக்களத்தின் அதிகாரிகள், பல்நோக்குக் கூட்டுறவுச் சங்க கிளைகளின் பேராளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ஆன்மீகக் கல்வியினூடாகவே நல்ல மனங்களையுடைய கல்விமான்களை உருவாக்க முடியும்…  (மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அ.கிருரஜன்)

ஆன்மீகக் கல்வியினூடாகவே நல்ல மனங்களையுடைய கல்விமான்களை உருவாக்க முடியும்… (மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அ.கிருரஜன்)

என்னதான் கல்வியில் சிறந்து விளங்கினாலும் ஆன்மீகக் கல்வியினூடாகவே நல்ல மனங்களையுடைய கல்விமான்களை உருவாக்க முடியும். பிள்ளைகளை ஆன்மீக வழியில் வளர்ப்பது அவர்களின் நன்நடத்தைகளை வளர்க்கும் என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் தெரிவித்தார். புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இடம்பெற்ற பொங்கல் சிறப்பு நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் விசேடமாக பிரதேசத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிரான கையெழுத்து வேட்டை

இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிரான கையெழுத்து வேட்டை

(டினேஸ்) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிரான கையெழுத்து வேட்டை இரண்டாவது நாளாகவும் இன்றைய தினம் 19 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை சந்தியின் இடம் பெற்றது. இக்கையெழுத்து வேட்டையானது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பட்டிப்பளை பிரிவின் அமைப்பாளரும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினருமான பீ.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகருக்குள் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் வீதி சமிஞ்சை விளக்குகளை பொருத்தும் நடவடிக்கை

மட்டக்களப்பு மாநகருக்குள் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் வீதி சமிஞ்சை விளக்குகளை பொருத்தும் நடவடிக்கை

மட்டக்களப்பு மாநகருக்குள் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியின் தாண்டவன்வெளி சந்தியில் வீதி சமிஞ்சை விளக்குகளை பொருத்தும் நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட்டு வருகின்றன. 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மேற்படி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புளியந்தீவு ரிதத்தின் பொங்கல் விழா… மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளும் வழங்கிவைப்பு…

புளியந்தீவு ரிதத்தின் பொங்கல் விழா… மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளும் வழங்கிவைப்பு…

உழவர் திருநாளாம் தைத்திருநாளை சிறப்பிக்கும் முகமாக தமிழர் பிரதேசமெங்கும் பொங்கல் விழாக்கள் சிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மட்டக்களப்பு புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இன்றைய தினம் கழகத்தின் முன்னாள் தலைவர் ச.சனத்குமார் தலைமையில் இடம்பெற்றது.

கையெழுத்து வேட்டைக்கான அழைப்பு விடுக்கின்றனர் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினர்

கையெழுத்து வேட்டைக்கான அழைப்பு விடுக்கின்றனர் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினர்

(டினேஸ்) இன வாதத்தை ஏற்படுத்தும் ஆளுநருக்கு எதிராக கிழக்கு மக்கள் ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் கையெழுத்து வேட்டைக்கான அழைப்பு விடுக்கின்றனர் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினர் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று 13 மட்டக்களப்பு நாவற்குடா சணிபிஸ் விடுதியில் அதன் செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதன் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே கட்சியின் தலைவரும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி […]

மட்டக்களப்பில் நெல் கொள்வனவு ஆரம்பம்.

மட்டக்களப்பில் நெல் கொள்வனவு ஆரம்பம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடை நெல் கொள்வனவுகள் அறுவடை தொடக்கத்தில் இருந்தே நடைபெறவுள்ளது. இதற்கான முடிவுகள் மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாரின் அறிவுறுத்தல்களுக்கமைவாக ஆரம்பமாகவுள்ளன என மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தெரிவித்தார். மாவட்ட செலயகத்தில் வெளளிக்கிழமை பகல் நடைபெற்ற நெல் அறுவடைக’ கொள்வனவு குறித்து நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். வருடா வருடம் ஏற்படும் விவசாயிகளின் நெல் விற்பனைப் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில் அரசாங்க அதிபரால் […]

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) அம்பாறை மாவட்டக் குழுக் கூட்டம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) அம்பாறை மாவட்டக் குழுக் கூட்டம்

(டினேஸ்) தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) அம்பாறை மாவட்டக் குழுக் கூட்டம் கட்சியின் செயலாளர் ந. சிறீகாந்தா தலைமையில் இன்று 11 கல்முனை ஆதரவாளரின் இல்லத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநருக்கெதிரான ஆர்ப்பாட்டம் வாழைச்சேனையில் முன்னெடுப்பு

கிழக்கு மாகாண ஆளுநருக்கெதிரான ஆர்ப்பாட்டம் வாழைச்சேனையில் முன்னெடுப்பு

(டினேஸ்) கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எச்.எம் ஹிஸ்புள்ளாக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று 11 ஆம் திகதி வாழைச்சேனை கிண்ணையடியில் பிரதேச மக்களினால் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது அங்கு கூடிய மக்கள் இனவாதம் கதைக்கும் ஹில்புல்லா அவர்களுக்கு ஆளுநர் பதவி வழங்கியதை கண்டிப்பதாகவும் உணர்வால் ஒன்றிணைய இன வாதத்தை ஒழிப்போம் தமிழர்களை மீண்டும் மீண்டும் அழிக்காதே இந்துக் கோயிலை இடித்தவனுக்கு ஆளுநர் பதவியா என பல்வேறு வாசகங்கள் ஏந்திய வண்ணம் அவர்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஆராட்சி மாநாடு

சர்வதேச ஆராட்சி மாநாடு

பேண்தகு விவசாயத்தில் புதுமையும் கண்டுபிடிப்பும்; எனும் கருப்பொருளில் இரண்டாவது விவசாய ஆராட்சி மாநாடு கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் புதன்கிழமை (09) நடைபெற்றது. பொங்கலூர் இந்தியன் தோட்டக்கலை ஆராட்சி மையத்தின் பிரதான விஞ்ஞானி காலநிதி ஈ.சிறினிவாய் ராவ் சிறப்புரையாற்றினார். ஆராட்சி மாநாட்டில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கைகளில் 28 வெவ்வேறுபட்ட விவசாயம் சார்ந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டன.

ஊடகவியலாளர்_லசந்த_விக்கிரமதுங்க  அவர்களின்_10_ஆவது_ஆண்டு_நினைவு தினம்!

ஊடகவியலாளர்_லசந்த_விக்கிரமதுங்க அவர்களின்_10_ஆவது_ஆண்டு_நினைவு தினம்!

மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் நினைவு கூறப்பட்டது பத்து வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினம் (8) படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்றை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்ததுடன் மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியிலுள்ள இணையம் காரியாலயத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு நினைவுகூறியமை […]

அவுஸ்ரேலிய மண்ணில் 71 வருடங்களின் பின்னர் சாதனை படைத்தது இந்தியா!

அவுஸ்ரேலிய மண்ணில் 71 வருடங்களின் பின்னர் சாதனை படைத்தது இந்தியா!

இந்தியா – அஸ்ரேலியாவிற்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி மழை காரணமாக தடைபட்டுள்ளதால், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதன் காரணமாக குறித்த டெஸ்ட் தொடரை இந்தியா அணி 2-1 என கைப்பற்றியுள்ளது. கடந்த 96 ஆம் ஆண்டில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணி ஒரு முறை கூட தொடரை கைப்பற்றவில்லை. இந்நிலையில் 2018/19 ஆம் ஆண்டுக்கான குறித்த தொடரை விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

அமைச்சுப் பதவி கிடைக்காவிட்டால் நீதிமன்றினை நாடுவோம்: சுஜீவ சேனசிங்க

அமைச்சுப் பதவி கிடைக்காவிட்டால் நீதிமன்றினை நாடுவோம்: சுஜீவ சேனசிங்க

அமைச்சரவை அந்தஸ்த்துடைய அமைச்சுக்களை நியமிப்பதில் எழுந்துள்ள குழப்பநிலைக்கு உரிய தீர்வுகள் கிடைக்காவிட்டால் நீதிமன்றினையே நாடுவோம் என விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையமான சிறிகொத்தாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அமைச்சுக்களை நியமிப்பதில் காணப்படும் குழப்பநிலைக்கு உரிய தரப்பினர் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடுவதன் மூலமே தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மிகுந்த கவர்ச்சியில் புகைப்படத்தை போட்டு ரசிகர்களை வசியம் செய்த நடிகை! குவியும் லைக்ஸ்

மிகுந்த கவர்ச்சியில் புகைப்படத்தை போட்டு ரசிகர்களை வசியம் செய்த நடிகை! குவியும் லைக்ஸ்

நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவில் எப்படியாவது நல்ல ஹீரோயினாக இடம் பிடித்து விட வேண்டும் என முயற்சி எடுத்திருந்தார். ஆனால் ஒரு சில படங்களில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதே வேளையில் தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்தார். ஜூலி படத்தின் மூன் ஹிந்தியிலும் அறிமுகமானார். தமிழ், தெலுங்கிலும் வந்த இவரின் படம் அவரின் 50 வது படம் என சொல்லலாம். ஆனால் வெற்றி பெறவில்லை என்பது வருத்தமான விசயம். சமூகவலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை […]

படக்குழு அழைத்தும் விஸ்வாசம் படத்தை பார்க்க மறுத்த நயன்தாரா!

படக்குழு அழைத்தும் விஸ்வாசம் படத்தை பார்க்க மறுத்த நயன்தாரா!

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டிக்கெட் புக்கிங் திரையரங்குகளில் வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கியுள்ளார். படம் வரும் 10ஆம் தேதி வெளியானாலும் படக்குழுவில் சிலருக்கும் அஜித்தின் மனைவி ஷாலினிக்கும் சில நாட்களுக்கு முன்பே சிறப்பு காட்சியாக திரையிட்டு காட்டப்பட்டது. ஆனால் இந்த காட்சிக்கு படத்தின் கதாநாயகி நயன்தாரா வரவில்லை.

உறுகாமம் நீர்ப்பானத் திட்டத்தில் இருந்து வாகனேரி திட்டத்தினைப் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

உறுகாமம் நீர்ப்பானத் திட்டத்தில் இருந்து வாகனேரி திட்டத்தினைப் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

உறுகாமம் நீர்ப்பாசனத் திட்டத்திலுள்ள வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தினை தனியாகப் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் வாகனேரி மற்றும் உறுகாமத் திட்ட விவசாய அமைப்புகளினால் செங்கலடி நீர்ப்பாசனத் திணைக்கள காரியாலய முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. உறுகாம விவசாயத் திட்டத்தின் கீழ் உள்ள 14 விவசாய அமைப்புகளினால் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனை கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் க.பகீரதன் முன்நின்று நடாத்தியிருந்தார்.

சர்வதேச யுத்த அனாதைகள் தினம் மூதூர் கிளிவெட்டி பாரதி புரத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

சர்வதேச யுத்த அனாதைகள் தினம் மூதூர் கிளிவெட்டி பாரதி புரத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

(டினேஸ்) இந்து குருமார் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யுத்த அனாதைகள் தினம் இன்று 06 ஆம் திகதி மூதூர் கிளிவெட்டி பாரதி புரத்தில் அதன் தலைவர் ஶ்ரீவசிறி பாஸ்கரன் குருக்கள் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கஷ்டத்தின் மத்தியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு களுவாஞ்சிக்குடியில் இயங்கி வரும் இலங்கை தமிழர் ஒன்றியத்தின் நிதியுதவியில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடல்

மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடல்

(டினேஸ்) மட்டக்களப்பு மாவட்டத்தின் பெயர்பெற்ற விளையாட்டுக்கழகங்களில் ஒன்றான சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் இன்று 06 ஆம் திகதி மட்/சிவானந்தா தேசிய பாடசாலையில் விபுலானந்தர் கேட்போர் கூடத்தில் கழகத்தின் தலைவர் சாட்டோ ஈ. இராஜரெட்ணம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றுகூடல் நிகழ்வானது மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமாகி உயிர்நீர்த்த கழக உறுப்பினர்களுக்காக ஒரு நிமிட மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டது.

கும்புறுமூலை கிராமத்தில் 148வது மாதிரிக் கிராமம் திறப்பு

கும்புறுமூலை கிராமத்தில் 148வது மாதிரிக் கிராமம் திறப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கும்புறுமூலை கிராமத்தில் நிர்மானிக்கப்பட்ட 148வது மாதிரிக் கிராமமான பழமுதிர்ச்சோலை வீடமைப்புத் திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் க.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சன்பிளவர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில்     “பிறர் உயிர்க்காக எம் உதிரம் ஈய்வோம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம்.

சன்பிளவர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் “பிறர் உயிர்க்காக எம் உதிரம் ஈய்வோம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம்.

(டினேஸ்) “பிறர் உயிர்க்காக எம் உதிரம் ஈய்வோம்” எனும் தொனிப்பொருளில் கிரான்குளம் சன்பிளவர் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாம் கிரான்கிளம் சரஸ்வதி வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் கழகத்தின் தலைவர் தவராசா சசுகரன் தலைமையில் நடைபெற்றது. இரத்ததான முகாமானது அண்மைக்காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட இரத்த வங்கியில் நிலவும் உதிர பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கோடு சன்பிளவர் கழகத்தின் சமூக ஒருங்கிணைப்பு பிரிவின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் நடைபெற்றது.

வவுணதீவில் நடைபெற்ற குற்றச்செயல்களைக்கும்  முன்னாள் போராளிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்கின்றார் அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகளின் ஒன்றியத்தின் இணைப்பாளர் வடிவேல் சசிதரன்

வவுணதீவில் நடைபெற்ற குற்றச்செயல்களைக்கும் முன்னாள் போராளிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்கின்றார் அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகளின் ஒன்றியத்தின் இணைப்பாளர் வடிவேல் சசிதரன்

(டினேஸ்) இன்று 20 ஆம் திகதி அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துருந்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்………………… முன்னாள் போராளிகள் 30 வருட காலமாக பல துன்பங்களை அனுபவித்து வந்துள்ளனர் அந்தவகையில் அவர்கள் யுத்தம் முற்றும்பெற்றதன் பின்னர் வாழ்வாதார வசதிகள் இன்றி இன்னும் பல சொல்லொனாத் துயரங்களை அனுபவித்து வந்துள்ளனர். இவ்வாரான சந்தர்ப்பங்களில் முன்னாள் போராளிகளை அப்பட்டமான பொய்களை சுமத்தி கைது செய்வதும் அவர்களை சிறைக்குள் தள்ளுவதும் மிகவும் வருத்தத்திற்கு […]