Home

சர்வ மத தலைவர்கள் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிகளுடன் தமிழ் மக்கள் கூட்டணியினர் சந்திப்பு.

சர்வ மத தலைவர்கள் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிகளுடன் தமிழ் மக்கள் கூட்டணியினர் சந்திப்பு.

(டினேஸ்) சர்வ மத தலைவர்கள் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிகளுடன் தமிழ் மக்கள் கூட்டணியினர் சந்திப்பு இன்று மட்டக்களப்பு அமரிக்கன் மிசன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி விக்னேஸ்வரன் கொள்கைப் பரப்புப் செயலாளர் அருந்தவபாலன் இணைச்செயலாளர் பேராசிரியர் சிவநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான செயலாளர் எஸ்.சோமசுந்தரம் இணையம் அரச்சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தலைவர் எம்.சீலன் மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத தலைவர்கள் என பலரும் […]

எமது மக்கள் பிரதிநிதிகளின் நாடகப்போக்கு இளைஞர்களாகிய எமக்கு அதிருப்தியையும் மனவேதனையும் ஏற்படுத்துகின்றது…    (மறத்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் – வே.அன்பழகன்)

எமது மக்கள் பிரதிநிதிகளின் நாடகப்போக்கு இளைஞர்களாகிய எமக்கு அதிருப்தியையும் மனவேதனையும் ஏற்படுத்துகின்றது… (மறத்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் – வே.அன்பழகன்)

தேர்தல் நேரங்களில் மட்டும் மக்களில் இருக்கும் அபிலாசைகளைக் காட்டுவதும் மக்கள் மீது அன்பு காட்டுவதுமான ஒரு நாடகப் போக்கை எமது மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக மேற்கொள்வது இளைஞர்களாகிய எமக்கு அதிருப்தியையும் மனவேதனையும் ஏற்படுத்தி இன்று இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளது என மறத்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே.அன்பழகன் தெரிவித்தார். மட்டக்களப்பு வவுணதீவு, நாவற்காடு பிரதேசத்தில் இன்றைய தினம் மறத்தமிழர் கட்சியின் அங்குரார்ப்பன நிகழ்வின் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் […]

மேலும் மேலும் காலஅவகாசம் வழங்கி எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை…    (வடமாகாண முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன்)

மேலும் மேலும் காலஅவகாசம் வழங்கி எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை… (வடமாகாண முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன்)

நான்கு வருடங்கள் செய்யாத ஒன்றை இரண்டு வருடங்கள் மேலும் கொடுப்பதால் நடைமுறைப்படுத்தப்படாது என்பதே எமது கருத்து. போர்வீரர்களுக்கு எதிராக எவ்வித விசாரணையையும் நடத்த நாங்கள் விட மாட்டோம் என்று பேசிக் கொண்டிருக்கையில் மேலும் மேலும் காலஅவகாசம் வழங்கி எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை என வடமாகாண சபை முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு ஆயர் மற்றும் இராமகிருஸ்மிஷன் சுவாமி ஆகியோரைச் சந்தித்தார் வடமாகாண முன்னாள் முதல்வர்…

மட்டக்களப்பு ஆயர் மற்றும் இராமகிருஸ்மிஷன் சுவாமி ஆகியோரைச் சந்தித்தார் வடமாகாண முன்னாள் முதல்வர்…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ள வடமாகாண சபையின் முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களையும் கல்லடி இராமகிருஸ்ண மிஷன் சுவாமி தக்ஷயானந்தஜீ மகராஜ் அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்ந்திப்பின் போது மட்டக்களப்பு விஜயத்தின் நோக்கம் மற்றும் ஆரம்பிக்கப்பட்ட கட்சின் நிலைப்பாடுகள், தமிழ் தரப்புகளின் தற்போதைய சூழ்நிலை மற்றும் கிழக்கு மாகாணம் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிக்கான மக்கள் எழுர்ச்சிப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க அழைக்கின்றனர் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலக்கப்பட்டோர் சங்கத்தினர்.

எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிக்கான மக்கள் எழுர்ச்சிப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க அழைக்கின்றனர் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலக்கப்பட்டோர் சங்கத்தினர்.

(டினேஸ்) எதிர்வரும் 19 ஆம் திகதி மட்டக்களப்பு பழைய பாலத்திற்கு அருகாமையிலிருந்து காந்தி பூங்கா வரை நடைபெறவிருக்கும் மாபெரும் நீதிக்கான மக்கள் எழுர்ச்சிப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர்களின் சங்கத்தினரால் இன்று 14 ஆம் திகதி திருக்கோயில் 01 வாஹீஸ்டர் வீதியில் அமைந்துள்ள மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி கருத்துத் தெரிவிக்கையில்….

அதிகளவான பாலியல் குற்றங்கள் கையடக்கத் தொலைபேசியில் …  பத்மஸ்ரீ விவேக்

அதிகளவான பாலியல் குற்றங்கள் கையடக்கத் தொலைபேசியில் … பத்மஸ்ரீ விவேக்

தாய்மார்கள் தொலைக்காட்சி நாடகம் பார்த்துக் கொண்டு, தந்தையர்கள் கையடக்கத் தொலைபேசியில் இருந்து கொண்டு, பிள்ளைகள் வீடியோ விளையாட்டுக்கள் பார்த்துக் கொண்டிருந்தால் குடும்பத்துக்குள் இணக்கம் இல்லாமல் போய்விடும். அதிகளவான பாலியல் குற்றங்கள் கையடக்கத் தொலைபேசியில் இருக்கின்ற கேமராக்கள் மூலமாகவும், எளிதாகக் கிடைக்கின்ற இணையத்தின் மூலமாகவும் தான் இடம்பெறுகின்றன என நகைச் சுவை நடிகர் பத்மஸ்ரீ விவேக் தெரிவித்தார்.

மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

(டினேஸ்) முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் சமூகமயப்படுத்தப்படுகின்றனர். அவர்களும் சமூகத்தின் மத்தியில் ஓர் நடுநிலையான வாழ்க்கையில் ஈடுபட விரும்புகின்றனர் ஆனால் சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் அரச புலனாய்வுப்பிரிவினரினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் இது தொடர்பாக கடந்த 25 ஆம் திகதி 69-1010 இலக்கமுடைய வான் மூலமாக தமதில்லத்தில் விசாரணைக்கு வந்தவர்கள் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்

171.5 மில்லியன் ரூபாய்கள் எங்கு சென்றது.  2018 கம்பறொளிய திட்டத்தில் பட்டிருப்புத் தொகுதியை ஆட்சியாளர்கள் ஏமாற்றிவிட்டனர் பூ.பிரசாந்தன்

171.5 மில்லியன் ரூபாய்கள் எங்கு சென்றது. 2018 கம்பறொளிய திட்டத்தில் பட்டிருப்புத் தொகுதியை ஆட்சியாளர்கள் ஏமாற்றிவிட்டனர் பூ.பிரசாந்தன்

ஆளும் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கம்பெறளிய துரித கிராமிய அபிவிருத்தித்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தொகுதியானது முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெருவித்தார் அவர் ஊடகங்களுக்கு வழங்கிய பிரத்தியோக அறிக்கையின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஆளும் அரசினால் கிராமங்களை துரிதமாக அபிவிருத்தி செய்வோம் என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் கம்பறொளிய திட்டத்தில் பட்டிருப்புத் தொகுதி உட்பட பல தமிழ் கிராமங்கள் புறக்கணிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது

எனது ஜந்து பிள்ளைகளுடன் ஜனாதிபதி அலுவலகம் அல்லது பொலீஸ் நிலையத்தின் முன்பாக நஞ்சருந்தும் நிலையாகவுள்ளது என்கின்றார் அஜந்தனின் மனைவி கே. செல்வராணி.

எனது ஜந்து பிள்ளைகளுடன் ஜனாதிபதி அலுவலகம் அல்லது பொலீஸ் நிலையத்தின் முன்பாக நஞ்சருந்தும் நிலையாகவுள்ளது என்கின்றார் அஜந்தனின் மனைவி கே. செல்வராணி.

(டினேஸ்) அண்மையில் மட்டக்களப்பு வவுணதீவு பொலீஸ் பிரிவிற்குட்பட்ட வலையறவு பொலீஸ் சோதனைச்சாவடியில் இனந்தெரியா நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் இரண்டு பொலீஸ் கான்ஸ்டபிள்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துடன் சந்தேகநபர் என தொடர்புடையதாக கூறி தேசத்தின் வேர்கள் அமைப்பின் முன்னாள் போராளி இராசகுமார் என அழைக்கப்படும் அஜந்தன் சம்பவம் நடைபெற்ற மறுநாள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணையின் அடிப்படையில் ஜனாதிபதியின் விசேட அனுமதியின் பேரில் 90 நாட்கள் பொலீஸ் தடுப்பு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையில்இலங்கை அரசாங்கத்தைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருதல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றம்… தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரும் ஆதரவு…

மட்டக்களப்பு மாநகரசபையில்இலங்கை அரசாங்கத்தைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருதல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றம்… தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரும் ஆதரவு…

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருதல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை மட்டக்களப்பு மாநகரசபையில் 29 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. நேற்று இடம்பெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் 16வது பொது அமர்வின் போது இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினைக் கோருதலும், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொது வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்தலும் என்ற அடிப்படையிலான தனிநபர் பிரேரணை மட்டக்களப்பு மாநகர […]

இராணுவ முகாமினை அகற்றக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

இராணுவ முகாமினை அகற்றக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு முறக்கொட்டான் சேனை இராணுவ முகாமினை அகற்றி முகாமினுள் உள்ள பாடசாலை கட்டடத்தை விடுவித்து தருமாறும் மக்கள் போக்குவரத்திற்குரிய வீதியினை திறந்து தருமாறு கோரியும் பிரதேச மக்களினால் வெள்ளிக்கிழமை (8)காலை 9.00 மணியளவில் இராணுவ முகாமிற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற் கொள்ளப்பட்டது. முறக்கொட்டான் சேனை மற்றும் தேவபுரம் கிராம சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன் கோறளைப்பற்று பிரதேச சபை உப்பினர்களான க.கமலேஸ்வரன்,கு.குணசேகரம்,சு.சுதர்ஷன் ஆகியோர்களும் கலந்து […]

சர்வதேச மகளீர் தினத்தை நாம் கறுப்பு தினமாக புறக்கணிக்கின்றோம் ! கறுப்பு கொடியுடன் வீதியில் இறங்கிய வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்க உறவுகள்

சர்வதேச மகளீர் தினத்தை நாம் கறுப்பு தினமாக புறக்கணிக்கின்றோம் ! கறுப்பு கொடியுடன் வீதியில் இறங்கிய வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்க உறவுகள்

(டினேஸ்) ஐக்கிய நாடுகள் சபையினால் மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளீர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு வருடாவருடம் அதனை உலகளாவிய ரீதியில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டுவருகின்றது. அந்தவகையில் 2019 ஆம் ஆண்டிற்கான நிகழ்வுகளும் இன்றைய நாளில் பல பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் உறவுகள் இம்மகளீர் தினத்தை கறுப்பு தினமாக அனுஸ்டிக்கின்றனர்.

எதிர்வரும் 19 ஆம் திகதி மட்டக்களப்பில் ஐ.நா அமர்வில் நீதிகோரி மாபெரும் பேரணியும் கடையடைப்பும்

எதிர்வரும் 19 ஆம் திகதி மட்டக்களப்பில் ஐ.நா அமர்வில் நீதிகோரி மாபெரும் பேரணியும் கடையடைப்பும்

(டினேஸ்) ஐக்கிய நாடுகள் சபையின் 40வது மனித உரிமைப்பேரவை கூட்டத்தொடர் இடம்பெற்றுவரும் நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்க உறவுகளின் கோரிக்கைகளை முன்வைக்கும் நோக்குடனும் எதிர்வரும் மார்ச்19ம் நாள் காலை 10மணிக்கு மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் இருந்து காந்திபூங்கா வரை வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கலந்துகொள்ளும் தமிழின நீதி கோரும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.

ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

(டினேஸ்) ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் யுத்தத்தினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் நிறுவனத்தின் மாவட்ட செயற்பாட்டாளர் பீ. சர்மிளா தலைமையில் இன்று 06ஆம் திகதி நடைபெற்றது.

கடையடைப்பு போராட்டத்திற்குஅழைப்பு விடுக்கின்றனர் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர்

கடையடைப்பு போராட்டத்திற்குஅழைப்பு விடுக்கின்றனர் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர்

(டினேஸ்) வடக்கு மற்றும் கிழக்கில் கடையடைப்பு போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அன்றைய தினம் இடம்பெறும் கவனயீர்ப்பு பேரணியிலும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டம் தொடர்பாக இன்று (04) மட்டக்களப்பு புகையிரத வீதியில் உள்ள இணையம் அலுவலகத்தில் கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு

மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க வெளியீட்டில் கலாபூசணம் ஆ.மு.சி வேலழகன் எழுதிய மனிதனுக்கே மனிதன் ஈந்த மாமறை ஆய்வு, கல்லெறிந்பட்ட கண்ணாடி குறுநாவல், இன்பம் பயக்கும் வினை வரலாற்றுச் சுருக்கம் ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்ப்பு போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்ப்பு போராட்டம்

(டினேஸ்) 1978 ஆம் ஆண்டில் இலங்கையரசாங்கத்தினால் எழுத்து மூலமாக செயல் வடிவிற்கு வந்து பிறப்பிக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலமாக யுத்த காலங்களில் வட கிழக்கு பகுதிகளில் மட்டும் அல்லாது தென்பகுதியிலும் இச்சட்டத்தின் மூலமாக பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். நடைபெற்றுவந்த 30 வருட கால யுத்தத்தின் இறுதி கால பகுதிகளிலும் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் இச்சட்டத்தின் மூலமாக அரசியல் கைதிகளாகவும் முன்னாள் போராளிகளாகவும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கண் எதிர்க்கவே பெண்களை கதரக்கதர கர்ப்பழித்தனர்

கண் எதிர்க்கவே பெண்களை கதரக்கதர கர்ப்பழித்தனர்

(டினேஸ்) 1986.02.19 ஆம் திகதி இனந்தெரியாத நபர்களினாலும் இராணுவத்தினராலும் மிக கொடூரமான நிலையில் 130 க்கு மேற்பட்ட பொதுமக்கள் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகியும் வயல் வெட்டும் கத்தியினாலும் வெட்டிக்கொல்லப்பட்டனர் அதன் 33 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று 19 திருக்கோவில் தங்கவேயுதபுரம் மலைப்பிள்ளையார் ஆலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நினைவேந்தல் நிகழ்வில் அகல்விளக்கேற்றியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அப்பிரதேச மக்கள் இவ்வாறு தமது வாக்குமூலத்தை வழங்கினர்.

போராட்ட களமான மாறியது மட்டு நகர்

போராட்ட களமான மாறியது மட்டு நகர்

(டினேஸ்) மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கு எதிராக ஆட்டோ சங்கம் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காந்தி பூங்காவிற்கு முன்பாக பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிணை சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பு மாநகரயினூடாக தினமும் 50/= ரூபாயும் வருட சந்தாவாக 5000.00 ரூபாய் மொத்தம் வருடம் ஒன்றிக்கு 23500.00 வரிப்பணப் பட்டியலுக்கு எதிராக மாவட்ட ஆட்டோ சங்கத்தினர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடாத்திவருகின்றனர். இதனால் மாவட்டத்தில் இயல்பு பாதிக்கப்பட்டு பாடசாலை மாணவர்கள் அரச அரசசார்பற்ற ஊழியர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் […]

ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதாரத்திற்கான வாணிபம் கையளிப்பு

ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதாரத்திற்கான வாணிபம் கையளிப்பு

(டினேஸ்) ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான செயற்திட்டத்தின் கீழ் “உதவிடுவோம் உறவுகளை காத்திடுவோம்” எனும் தொனிப்பொருளின் வாழ்வாதாரத்திற்கான வாணிபம் நிர்மாணித்து கையளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இச்செயற்பாடானது கடந்த 5.12.2018 அன்று மட்டக்களப்பு தேற்றாத்தீவு சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளியான வைரமுத்து திசவீரசிங்கம் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார். மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்த அக்குடும்த்திற்கு இரு உறவுகள் இறுதிக்கிரியைகளுக்காகவும் மற்றும் உடனடித்தேவைகளுக்காகவும் 80.000 ரூபாய்களை வழங்கியிருந்தார்கள்.

இலங்கையில்  சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிகள்.

இலங்கையில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிகள்.

இலங்கையில், ஆஸ்திரேலிய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து ஸ்கில்ஸ் போர் இங்க்ளுசிவ் வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். முன் அனுபவங்கள் எதுவும் தேவையில்லை, காரணம் பயிற்சிகள் அடிப்படையில் இருந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் நீங்கள் ஏற்கனவே சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் தேர்ச்சி பெற்றவராயின் நீங்களும் விண்ணப்பிக்கலாம், உங்கள் திறன்களை மேலும் விருத்தி செய்வதற்கும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.