Home

தேர்தல் வன்­மு­றைகள் குறித்து 102 பேர் பொலி­ஸாரால் கைது.

தேர்தல் வன்­மு­றைகள் குறித்து 102 பேர் பொலி­ஸாரால் கைது.

பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்ட கடந்த மாதம் 26 ஆம் திகதி நள்­ளி­ரவு முதல் நேற்று நண்­பகல் வரை நாட­ளா­விய ரீதிரில் 78 தேர்­தல் வன்­முறை மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பில் பொலி­ஸா­ருக்கு முறைப்­பா­டுகள் பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் அது தொடர்பில் 102 பேரை கைதுசெய்­துள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பரபரப்பு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பரபரப்பு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று (23) பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அத்துடன் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளையும் மாநில அரசு விடுவிக்கக் கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். இத்தீர்ப்பில், ’’சிபிஐ விசாரிக்காத வழக்குகளில் ஆயுள் சிறை பெற்ற கைதிகளை விடுவிப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம்’’ என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தபால் மூலம் வாக்களிக்க 566,823 பேர் தகுதி.

தபால் மூலம் வாக்களிக்க 566,823 பேர் தகுதி.

இந்த முறை பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 566,823 பேர் தகுதி பெற்றுள்ளனர். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 628,925 பேர் விண்ணப்பித்திருந்ததாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார். அதில் 62,102 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்குச்சீட்டுக்கள் நாளைய தினம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களிலிருந்த தபால் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

மீளாய்வுக் கூட்டம்

மீளாய்வுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில்; ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்றிட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (21) மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி பி.ஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது. வட்டத்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் மற்றும்; பலர் கலந்து கொண்டனர். இதன்போது, பிரதேச செயலக, மாவட்ட செலயக உத்தியோகஸ்தர்களுக்கு கணணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தேர்தல் பணிகளில் 2 லட்சம் அரச ஊழியர்கள்.

தேர்தல் பணிகளில் 2 லட்சம் அரச ஊழியர்கள்.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின் போது சுமார் 2 லட்சம் அரச ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் பணிகளில் இவர்கள் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலையங்களில் மாத்திரம் சுமார் 120000 அரச ஊழியர்களை பணியில் ஈடுபடவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.