Home

510 தேர்தல் வன்­முறைச் சம்­ப­வங்கள் பதிவு.

510 தேர்தல் வன்­முறைச் சம்­ப­வங்கள் பதிவு.

தேர்தல் வன்­முறைச் சம்­ப­வங்­களில் ஈடு­ப ட்ட நிலையில் 08 பேர் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் ரோஹண ஹெட்­டி­யா­ரச்சி தெரி­வித் தார். தேர்­த­லுக்­கான திகதி அறி­விக்­கப்­பட்ட தினத்தில் இருந்து இது­வரை 510 வன்­முறைச் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். அம்­பாறை, இரத்­தி­ன­புரி மற்றும் கண்டி ஆகிய பகு­தி­களில் இந்த தேர்தல் வன்­முறைச் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ள­தாக தெரி­வித்தார்.

10 லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிட்டு முடிவு

10 லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிட்டு முடிவு

பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 10 லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு முடிந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் 7 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை தேர்தல்கள் செயலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக பொறுப்பாளர் காமினி பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்னும் ஆறு தினங்களில் அனைத்து வாக்குச்சீட்டுகளும் அச்சிட்டு முடிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இதேவேளை, 30 அங்குல நீலமான மட்டக்களப்பு மாவட்ட வாக்குச்சீட்டை இரண்டு பகுதிகளாக அச்சிட தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்

10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தார் தில்ஷான்

10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தார் தில்ஷான்

ஒருநாள் போட்­டியில் 10 ஆயிரம் ஓட் டங்­களைக் கடந்து இலங்கை வீரர் தில்ஷான் புதிய சாதனை நிகழ்த்­தி­யுள்ளார். இந்த சாத­ னையை எட்­டிய 11ஆவது வீரர் இவர் ஆவார். இலங்கை–- பாகிஸ்தான் அணிகள் மோதும் 5ஆவது ஒருநாள் போட்­டியில் இலங்கை வீரர் தில்ஷான் 55 ஓட்­டங்கள் எட்­டிய போது ஒருநாள் போட்­டியில் 10 ஆயிரம் ஓட்­டங்­களைக் கடந்தார். இலங் கை வீரர்­களில் சனத் ஜய­சூ­ரிய, மஹேல, சங்­கக்­கார ஆகி­யோ­ருக்கு பிறகு இந்த மைல்­கல்லை எட்­டிய வீரர் இவராவார். […]

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி காத்­தான்­குடி அமைப்­பாளர் முன்னாள் பிர­தி­ய­மைச்சர் ஹிஸ்­புல்லா­வுக்கு ஆத­ரவு .

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி காத்­தான்­குடி அமைப்­பாளர் முன்னாள் பிர­தி­ய­மைச்சர் ஹிஸ்­புல்லா­வுக்கு ஆத­ரவு .

எதிர்வரும் பாரா­ளு­மன்ற தேர்­தலில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் காத்­தான்­குடி அமைப்­பா­ளரும் காத்­தான்­குடி நகர சபை முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான றவூப் ஏ மஜீத் முன்னாள் பிர­தி­ய­மைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்கு முன் வந்­துள்ளார்.

இலங்கையில் முதன்முதலாகப் தேன்பூச்சி நோய்.

இலங்கையில் முதன்முதலாகப் தேன்பூச்சி நோய்.

இலங்கையில் முதன்முதலாகப் தேன்பூச்சி நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய நிபுணரும் விரிவுரையாளருமான டாக்டர் அசோக்க தங்கொல்ல தெரிவித்தார். தேனீக்கள் அடிக்கடி இறந்து வருவதாகவும் அதனால், தேனீக்களின் இனப்பெருக்கம் குறைவடைந்துள்ளதாகவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், தேன் விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்கள் பாரிய பொருளாதார பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாகவும் தங்கொல்ல கூறினார்.

எமது இனத்தின் பின்னடைவுகளுக்கு தமிழ் அரசியல் தலைமைகளே காரணம்.- வேட்பாளர் கிருஸ்ணபிள்ளை சிவநேசன் தெரிவித்தார்.

எமது இனத்தின் பின்னடைவுகளுக்கு தமிழ் அரசியல் தலைமைகளே காரணம்.- வேட்பாளர் கிருஸ்ணபிள்ளை சிவநேசன் தெரிவித்தார்.

தேர்தல்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களை உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு இட்டுச்சென்றது வரலாற்று உண்மையாகும். இதன் விளைவாகவே, இன்று நாம் சொல்லொணாத் துயரங்களை அனுப்பவிப்பதுடன், உயிர், உடைமைகளையும் இழந்து அரசியல் அநாதைகளாக உள்ளோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கிருஸ்ணபிள்ளை சிவநேசன் தெரிவித்தார். பெரியபோரதீவிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை (25) மாலை நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டு வாவியில் ஆணின் சடலம் மீட்பு .

மட்டு வாவியில் ஆணின் சடலம் மீட்பு .

மட்டக்களப்பு வாவியில் ஞாயிற்றுக்கிழமை (26) ஆணின் சடலமொன்றை மட்டக்களப்பு பொலிஸார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சடலம், யாசகம் பெறுபவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆற்றின் நடுவில் சடலம் மிதப்பதாகவும் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குனேசன் உள்ளிட்ட 8 பேரின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.

குனேசன் உள்ளிட்ட 8 பேரின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.

2004.07.25ம் திகதி கொட்டாவையில் நித்திரைத் தூக்கத்தில் வைத்துபடுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் குகனேசன் உள்ளிட்ட 08 பேர் படுகொலைசெய்யப்ப்ட்ட இந்நாளில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிவிடுத்தஊடகஅறிக்கை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உருவாக்கத்திற்காகவிதையாக இருந்த எமதுபோராளிகள் கொழும்பில் வைத்துபடுகொலைசெய்யப்பட்ட 15வது ஆண்டுநினைவை நாம் கணத்த இதயத்துடன் நினைவு கூறுகின்றோம்.

29ம் திகதி முதல் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை.

29ம் திகதி முதல் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை.

வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு பிரத்தியேக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 29 ம் திகதி நள்ளிரவு முதல் இந்த தடை அமுலாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனுடன் பரீட்சைக்கான மாதிரி வினாக்கள் மற்றும் விடைகள் அச்சிடுதல் மற்றும் அவற்றை விநியோகித்தல் கையேடுகள் அச்சிடுதல் மற்றும் அதனை விநியோகித்தல் போன்றவற்றிற்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாயை வாளால் வெட்டிய முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர் கைது .

தாயை வாளால் வெட்டிய முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர் கைது .

தனது தாயை வாளால் வெட்டி காயப்படுத்திய முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவர் ஒருவரைத் தாம் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, ஏறாவூர் பிரதேசத்தில் வசிக்கும் எம். புஸ்பராணி (வயது 59) என்பவரை வெள்ளிக்கிழமை இரவு அவரது மகன் தலையிலும் உடலின் வேறு பகுதிகளிலும் வாளால் வெட்டி படுகாயப்படுத்தியுள்ளான். உடனடியாக தாய் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மட்டுவில் வெற்றுக் காணியில் கிடந்த ஆணின் சடலம்

மட்டுவில் வெற்றுக் காணியில் கிடந்த ஆணின் சடலம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கீச்சான்பள்ளம் கிராமத்தில் வெற்றுக் காணியொன்றுக்குள் கிடந்த ஆணின் சடலமொன்று இன்று (26) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டனர். சம்பவத்தில் பலியானவர் காங்கேயனோடையைச் சேர்ந்த எம்.நஜிமுதீன் (44) என அடையாளம் காணப்பட்டுள்ளது, இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.

வாக்காளர் அட்டைகள் விநியோகம்

வாக்காளர் அட்டைகள் விநியோகம்

பொதுத்தேர்தலுக்கான உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 29 ம் திகதி விநியோகத்திற்காக தபால் திணைக்களத்திடம் கையளிக்கபடவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம் .மொஹமட் தெரிவித்தார் . ஒகஸ்ட் 10ம் திகதி வரை தபால் திணைக்களத்தால் வாக்காளர் அட்டைகள் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்படவுள்ளது . ஒகஸ்ட் 10ம் திகதி வரை அஞ்சல் மூலம் வாக்காளர் அட்டைகள் கிடைக்க பெறாதவர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களுடன் தமக்கான அஞ்சல் அலுவலகத்தில் வாக்காளர் அட்டைகள் பெற்றுக்கொள்ள முடியும் […]

இராணுவத்தினருக்கு தென்னை பயிர்ச் செய்கை தொடர்பிலான பயிற்சி –

இராணுவத்தினருக்கு தென்னை பயிர்ச் செய்கை தொடர்பிலான பயிற்சி –

மட்டக்களப்பு தென்னை பயிர்ச் செய்கை சபையினால் இராணுவத்தினருக்கு தென்னை பயிர்ச் செய்கை தொடர்பிலான பயிற்சி, நேற்று வெள்ளிக்கிழமை (24) நடத்தப்பட்டது. மட்டக்களப்பு 231ஆவது இராணுவ கட்டளை தலைமையகத்தில் கட்டளைத் தளபதி பிரிகேடியர் என்.டி.எஸ்.பி.நியுள் ஹல்லவின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு தென்னை பயிர்ச் செய்கை முகாமையாளர் திருமதி பி.ரவிராஜ் உட்பட தென்னை பயிர்ச் செய்கை சபை அதிகாரிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு அபராதம்.

சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு அபராதம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 30 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி ச.தங்கராஜா, நேற்று வெள்ளிக்கிழமை (24) தெரிவித்தார். மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள மதுவரித்திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பதவிக்காக உண்மைக்கு புறம்பாக செயற்படுவதா?   வேட்பாளர்  ஆ .ஜோர்ஜ் பிள்ளை

பதவிக்காக உண்மைக்கு புறம்பாக செயற்படுவதா? வேட்பாளர் ஆ .ஜோர்ஜ் பிள்ளை

தமிழ் தேசிய கூடமைப்பின் வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரருமான பொன் . செல்வராசா வினால் வெளியிட்டுள்ள அவரது துண்டு பிரசுரத்தில் மட்டக்களப்பு விமான நிலைய விஸ்தரிப்பு நஷ்டஈடூ கொடுப்பனவு சுமார் நாலரைக்கொடி ரூபாவை 13 நட்களில் பெற்று கொடுத்துள்ளதாக அப்பட்டமான பொய் தகவலை வெளியிட்டுள்ளார் . இதனை நான் முற்றாக மறுக்கிறேன் . 1987 ம் ஆண்டு மட்டக்களப்பு விமான நிலைய விஸ்தரிப்புக்காக 350 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு அவர்களது காணிகளும் குடியிருப்புக்களும் சுவிகரிக்கப்பட்டது.

2ஆம் உலகம் கண்டுபிடிப்பு.

2ஆம் உலகம் கண்டுபிடிப்பு.

நாம் வசிக்கும் பூமியை ஒத்த மற்றுமொரு கிரகத்தை, கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை காலமும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் இதுவே, பூமியை மிகவும் ஒத்த விதத்தில் அமைந்துள்ளது என்று நாசா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சற்று குளிர்ச்சியான, அளவில் பெரிதற்ற, புறத்தோற்றத்தில் நீரைக் கொண்டமைந்துள்ளது மாத்திரமன்றி உயிரினங்கள் வாழக்கூடிய அனைத்து சூழலையும் இந்த கிரகம் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த கிரகத்துக்கு ஏர்த் 2.0 (Earth 2.0) என நாசா நிநுவனத்தின் தலைமை விஞ்ஞானி […]

குழாய்க்கிணற்று நீரை பருகிய 6 மாணவிகள் சுகவீனம்..

குழாய்க்கிணற்று நீரை பருகிய 6 மாணவிகள் சுகவீனம்..

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் குழாய்க்கிணற்று நீரைப் பருகிய 06 மாணவிகள் சுகவீனமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டதாக அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஞ்சாவுடன் ஒருவர் கைது.

கஞ்சாவுடன் ஒருவர் கைது.

9,360 மில்லிகிராம் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் நேற்று வியாழக்கிழமை மாலை ஒருவரை கைதுசெய்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். தமக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த சந்தேக நபரை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர். சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். –

பாட­சாலைக் கட­மை­க­ளுக்­காக சென்ற எனது மகனை சட­ல­மா­கவே கண்டேன் மரண விசா­ர­ணையில் தந்தை சாட்­சியம் .

பாட­சாலைக் கட­மை­க­ளுக்­காக சென்ற எனது மகனை சட­ல­மா­கவே கண்டேன் மரண விசா­ர­ணையில் தந்தை சாட்­சியம் .

சம்­பவ தினம் பாட­சாலைக் கட­மை­க­ளுக்­காகச் சென்ற எனது மகனை சட­ல­மா­கவே கண்டேன். இவ்­வாறு மட்­டக்­க­ளப்பு பட்­டி­ருப்புக் கல்வி வல­யத்­துக்­குட்­பட்ட மண்டூர் 14 ஆம் கொலனி அர­சினர் தமிழ் கலவன் பாட­சா­லையில் இரவுக் காவ­லா­ளி­யாக கட­மை­யாற்றி வந்த சம்­மாந்­து­றையைச் சேர்ந்த அகமட் லெவ்வை முகமட் சபீக் (வயது 23) என்ற பாட­சாலைக் காவ­லாளி கதி­ரையில் இருந்­த­வாறு உயி­ரி­ழந்­துள்ள சம்­பவம் தொடர்­பான மரண விசா­ர­ணையில் அவரின் தந்தை அ.லெ.இப்­றா­லெவ்வை தெரிவித்தார்.