Home

வின்சென்ட் உயர்தர  பாடசாலையில் தேர்தல் கண்காணிப்பு குழு

வின்சென்ட் உயர்தர பாடசாலையில் தேர்தல் கண்காணிப்பு குழு

இன்று வின்சென்ட் உயர்தர பாடசாலையின் ஆசிரியர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் விஷேட தேர்தல் கண்காணிப்பு குழு ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தியது . இதன் ஊடாக தெரியவருவதாவது ; தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் அமல் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோரை ஆதரித்து பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரியவருகின்றது

2014 க.பொ.த சா/த பரீட்சை மீள்திருத்த பெறுபேறு வெளியானது!

2014 க.பொ.த சா/த பரீட்சை மீள்திருத்த பெறுபேறு வெளியானது!

2014 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின் மீள்திருத்தத்திற்கு விண்ணப்பித்த பரீட்சாத்திகளுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளியாகியுள்ள மீள்திருத்தப் பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தள முகவரிகளில் பார்வையிட முடியும்

முழு இராணுவ மரியாதையுடன் இறுதி விடைபெற்றார் கலாம்

முழு இராணுவ மரியாதையுடன் இறுதி விடைபெற்றார் கலாம்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் இராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் இன்று 21 குண்டுகள் முழங்க முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், கேரள, ஆந்திர, கர்நாடக முதலமைச்சர்கள் பங்கேற்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர். கடந்த 27ம் திகதி மாலை மேகாலயா ஐ.ஐ.எம்மில் மாணவர்களுக்கிடையே உரையாற்றிக் கொண்டிருந்த போது கலாம் மாரடைப்பால் மயங்கி விழுந்தார்.

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு.

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு.

கடந்த 2014ஆம் ஆண்டு இறுதியில் தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக 2,073 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுபாட்டு திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 62 சதவீதமான ஆண்களும் 1.6 சதவீதமானோர் பெண்களும் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு எதிராக நடவடிக்கை.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு எதிராக நடவடிக்கை.

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கடந்த நான்கு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறிய ஆணைக்குழு ஆணையாளர்கள் மீது விசாரணை நடத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்றை அடுத்து, அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த நான்கு வருடங்களில், 1,900 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்த ராஜபக்ஷ, அவற்றில் சில முறைப்பாடுகள் மாத்திரமே விசாரிக்கப்பட்டுள்ளன என்றார்.

விபத்தில் ஒருவர் மரணம்; எழுவர் காயம்.

விபத்தில் ஒருவர் மரணம்; எழுவர் காயம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் ஒருவர் மரணமடைந்ததுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், வந்தாறுமூலையில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியோரத்திலிருந்த மரமொன்றுடன் மோதியதினால், ஏறாவூர், மீராகேணியை சேர்ந்த மரக்கறி வியாபாரியான முஹம்மத் லத்தீப் பாறூக் (வயது 32) என்பவர் சம்பவ இடத்தில் மரணமடைந்தார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை அதிபர்களுக்கான வேண்டுகோள்.

பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை அதிபர்களுக்கான வேண்டுகோள்.

இந்த முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை சுட்டெண் அடங்கிய சுற்றறிக்கை இதுவரை கிடைக்கப் பெறாத பாடசாலை அதிபர்கள் உடனடியக அறியத் தருமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிடுகின்றது. இம்முறை பரீட்சை வரும் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி நாடுபூராகவும் உள்ள 2907 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. பரீட்சையில் தோற்றுவதற்காக 340,930 மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறுநீரக நோய்க்கு தீர்வு காண சர்வதேசத்தின் ஆதரவு தேவை – ஜனாதிபதி

சிறுநீரக நோய்க்கு தீர்வு காண சர்வதேசத்தின் ஆதரவு தேவை – ஜனாதிபதி

இலங்கையின் விவசாய சமூகம் எதிர்நோக்குகின்ற துக்ககரமான சிறுநீரக நோய் பிரச்சினையிலிருந்து அந்த மக்களை பாதுகாப்பதற்காக சர்வதேசத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஆதரவான அனைத்து நாடுகளிடமிருந்தும் அதற்கான உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். வௌிநாட்டு தூதுவர்களுடன் நேற்றுகாலை இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ நேசன் படித்தவரா! மட்டு கல்வியியலாளர்கள் கவலை

ஸ்ரீ நேசன் படித்தவரா! மட்டு கல்வியியலாளர்கள் கவலை

நாடாளுமன்றத் தேர்தலில் கல்விமான் என்று யாரை தமிழ் தேசிய கூட்டமைப்பு களம் இறக்கியதோ? அந்த கல்வி அதிகாரிகளே தேர்தல் சட்டங்களை மீறி மட்டக்களப்பில் மிக மோசமாக தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக மட்டு கல்விச் சமூகம் கவலை தெரிவிக்கின்றது .

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனவாதம் உள்ளதா?

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனவாதம் உள்ளதா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வௌியிட்டுள்ள 2015 பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனவாத திட்டங்கள் இருப்பதாக பெரும்பான்மை கட்சிகள் அறிவித்துள்ளன. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஐதேக ஏற்க மறுத்துள்ளது. ஜேவிபி இதனை இனவாத தேர்தல் விஞ்ஞாபனம் என்று கூறியுள்ளது. நாட்டை பிளவுபடுத்த இடமளிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூறியுள்ளது.

யுத்த காலத்திலேயே அதிகளவான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டன .

யுத்த காலத்திலேயே அதிகளவான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டன .

யுத்த காலத்தில் அதிகளவான தென்னை மரங்கள் மனிதனால் அழிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தென்னை பயிர்ச்; செய்கைச் சபையின் பிராந்திய முகாமையாளர் பிறேமினி ரவிராஜ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தெங்குச் செய்கையை அபிவிருத்தி செய்ய முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி மைலம்பாவெளியிலுள்ள தென்னை அபிவிருத்திச் சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பில் நாளொன்றுக்கு ரூ.42 இலட்சம் மதுபாவனைக்கு செலவு

மட்டக்களப்பில் நாளொன்றுக்கு ரூ.42 இலட்சம் மதுபாவனைக்கு செலவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 42 இலட்சம் ரூபாய் மதுபானப் பாவனைக்காக செலவிடப்படுகின்றது. இது இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கச் செய்கின்றது என்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்;ட விரிவுரையாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணருமான டாக்டர் கே.அருளானந்தம் தெரிவித்தார். தேசிய போதை ஒழிப்பு மாதத்தை முன்னிட்டு கறுவேப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்விலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், ‘இலங்கையில் முக்கியமாக அழிவுப்பாதையை ஏற்படுத்துவதாக போதைப்பொருள் பாவனை உள்ளது’ என்றார்.

கூகுள், இலங்கை அரசுடன் ஒப்பந்தம்

கூகுள், இலங்கை அரசுடன் ஒப்பந்தம்

நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு, இலங்கை அரசாங்கத்துடன் கூகுள் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், கூகுள் 13 அதி உயரத்தில் அமைக்கக்கூடிய பலூன்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது. உலகிலகளாவிய ரீதியில் றுiகுi இணைப்பைக் கொண்ட முதலாவது நாடாக இலங்கை மாறும் என்று இலங்கையின் வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர, அவரது உத்தியோபூர்வ டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் மக்கள் அழிவின் போது வேடிக்கை பார்த்த  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் –   வேட்பாளர் ஜோர்ஜ்  பிள்ளை

தமிழ் மக்கள் அழிவின் போது வேடிக்கை பார்த்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் – வேட்பாளர் ஜோர்ஜ் பிள்ளை

தமிழர்கள் உரிமையுடன் அபிவிருத்திக்கு வாக்களிக்க வேண்டும் . – பூ . பிரசாந்தன் .

தமிழர்கள் உரிமையுடன் அபிவிருத்திக்கு வாக்களிக்க வேண்டும் . – பூ . பிரசாந்தன் .

மட்டக்களப்பில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை தக்கவைத்துக் கொள்ள தமிழர்கள்தான் முன்வர வேண்டும் அரசியல் அதிகாரம் வாக்குப் பலத்திலேயே தங்கியுள்ளது .என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ .பிரசாந்தன் குறிப்பிட்டார் . ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கு கிராம சேவைகள் பிரிவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே மேற்கன் டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில் ;

அப்துல் கலாம் காலமானார்.

அப்துல் கலாம் காலமானார்.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டொக்டர் அப்துல் கலாம் தனது 83வது வயதில் இன்று காலமானார். மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) இன்று நடைபெற்ற கருத்தரங்கில், கலாம் கலந்து கொண்டு, மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மயங்கி சரிந்த அவர் அங்குள்ள பெத்தானி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. […]

போலி ஐ போன் தயாரிப்பு தொழிற்சாலை சீனாவில் முற்றுகை.

போலி ஐ போன் தயாரிப்பு தொழிற்சாலை சீனாவில் முற்றுகை.

சுமார் 41,000 போலி ஐ போன்களை தயாரித்த தொழிற்சாலையொன்று சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையை நடத்திச்சென்ற 9 பேர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன்களிலுள்ள பகுதிகளை சேகரித்து போலியான ஐ போன்களை, 100 தொழிலாளர்களை கொண்டு உற்பத்தி செய்கின்றார்கள் என்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே குறித்த தொழிற்சாலை முற்றுகையிடப்பட்டுள்ளது.

அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள்.

அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள்.

மட்டக்களப்பு நகர மத்தி வாவியில் ஞாயிற்றுக்கிழமை மிதந்து வந்த ஆணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு மட்டக்களப்புப் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். சுமார் 55 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் வெள்ளை நிற மேற்சட்டை அணிந்துள்ளதுடன் வெள்ளை நிறமான தாடியுடன் தலையில் சிறிய காயத்துடன் காணப்படுகின்றார் என பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இச் சடலத்தை அடையாளம் காணும் பொருட்டு மட்டக்களப்பு பொலிஸார் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளனர். இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை […]

சந்தையில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

சந்தையில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

சந்தையில் மரக்கறிகளின் விலை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவவிவசாய ஆராச்சி மற்றும் பயிற்சி நிலையம் அறிவித்துள்ளது. போஞ்சி, கரட், கறிமிளகாய் மற்றும் செத்தல் மிளகாய் என்பனவற்றின் விலைகளை தவிர ஏனைய மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக நிலையத்தின் விநியோகம், உணவு தரம் மற்றும் வர்த்தக பிரிவின் பிரதானி டப்ளியூ.ஏ.எச் பிரியதர்ஷன தெரிவித்துள்ளார். பெரும்போக அறுவடைகள் சந்தைக்கு அதிகமாக கொண்டுவரப்பட்டுள்ளதால் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்தும் இந்த விலை வீழ்ச்சி காணப்பட கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் கப்பல் சேவையை ஆரம்பிக்க தீர்மானம்

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் கப்பல் சேவையை ஆரம்பிக்க தீர்மானம்

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் கப்பல் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது . இந்த விடயம் தொடர்பில் துறைமுக அதிகாரிகளிடம் கலந்துரையாடப்படுவதாகவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சசி தனதுங்க தெரிவித்துள்ளார் . கப்பல் சேவைக்கு தேவையான சுங்கம் உள்ளிட்ட ஏனைய துறைசார் உத்தியோகஸ்தர்களை இணைத்து கொள்ளவது தொடர்பிலும் கலந்துரையாடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பயணிகள் கட்டணம் தொடர்பில் இது வரையில் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாகுபலியை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி

பாகுபலியை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி

ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி இருந்த படம் பாகுபலி.படம் வெளியான இரு வாரங்களில் ரூ. 350 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்து. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, பிரபாஸை அழைத்து வாழ்த்து கூறியுள்ளார். இதுபற்றி பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதோடு, படத்தையும் வெளியிட்டுள்ளார்.நேற்று இந்த சந்திப்பு நடந்தபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் பிரபாஸ் தனது டுவிட்டரில் ஷேர் செய்திருந்தார்