Home

68% வேட்பாளர்கள் சொத்து விபரங்களை ஒப்படைத்துள்ளனர்

68% வேட்பாளர்கள் சொத்து விபரங்களை ஒப்படைத்துள்ளனர்

இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் தமது சொத்துக்கள், பொறுப்புக்கள் விபரத்தை ஒப்படைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. சொத்துக்கள், பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை ஒப்படைக்க வேட்பாளர்களுக்கு நேற்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் பலர் (68%) தங்கள் சொத்து விபரங்களை ஒப்படைத்துள்ளனர். எனினும் சுயேட்சைக் குழு மற்றும் சிறு கட்சிகளில் போட்டியிடும் பலர் தமது சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த விபரங்களை இதுவரை ஒப்படைக்கவில்லை என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டி தீக்கிரை.

முச்சக்கரவண்டி தீக்கிரை.

வாழைச்சேனை மக்கலடி வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு இனந்தெரியாதோரால் தீ வைத்த சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் நிறுவனமொன்றைச்; சேர்ந்தவர்கள் தொழில் நிமித்தம் வாழைச்சேனை மக்கலடி வீதியில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். வீட்டுக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியே இனந்தெரியாதோனினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பயணப் பையில் யுவதியின் சடலம் – ஒருவர் கைது

பயணப் பையில் யுவதியின் சடலம் – ஒருவர் கைது

பயணப் பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு – புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பகுதியில் அநுராதபுரம் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கிடந்த பயணப் பையினுள் இருந்து அண்மையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டவர் யாழ் – வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதான யுவதி என இனங்காணப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபர் மன்னார் – கோவில்குளம் பகுதியில் வைத்து குற்றத் புலனாய்வுப் பிரிவினரால் […]

துண்டுப்பிரசுரங்கள் வைத்திருந்தவர் கைது

துண்டுப்பிரசுரங்கள் வைத்திருந்தவர் கைது

அம்­பா­றை­மா­வட்ட வேட்­பா­ளரொ­ரு­வரின் துண்­டுப்­பி­ர­சு­ரங்­க­ளை வைத் திருந்த இளைஞர் ஒருவர் கல்­மு­னைப் ­பொ­லி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். ஆலை­ய­டி­வேம்பு வாச்­சிக்­கு­டாவைச் சேர்ந்த கண­பதி ஜெக­ஜோதி என்­ப­வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள வராவார். அ.இ.மு.காங்­கிரஸ் வேட்­பா­ள­ரொ­ரு­வரின் பிர­சு­ரங்­க­ளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு அவரிடமிருந்த வாகன மும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. நாவி­தன்­வெ­ளியில் இது­போன்ற­தொரு சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றது தெரிந்ததே. த.தே.கூட்டமைப்பின் வேட்பாளரொருவரின் துண்டுப் பிரசுரங்களை வைத்திருந்த நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.

‘முடிவெட்டினால் கைது.

‘முடிவெட்டினால் கைது.

கட்சி சின்னத்துடன் வேட்பாளரின் விருப்பு இலக்கத்தையும் சேர்த்து சிகையலங்காரம் செய்துகொள்வது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும் என்று தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், தலைமுடியை அவ்வாறு அலங்காரம் செய்துகொண்டிருப்பவர்கள் கைதுசெய்யப்படுவர் என்றும் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாவும், அவ்வாறு சிகையலங்காரம் செய்துகொண்டு சுற்றித்திரிபவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

2ம் கட்ட தபால் மூல வாக்களிப்பு இன்று

2ம் கட்ட தபால் மூல வாக்களிப்பு இன்று

அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பின் இரண்டாம் கட்டம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த 3ம் திகதி தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இதேவேளை தபால் மூல வாக்களிப்பை கண்காணிக்க பெப்ரல் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹேட்டியாராச்சி தெரிவித்துள்ளார்

கரை­யோரப் பிரதே­சங்­களில் கடும் சூறா­வளி; போக்­கு­வ­ரத்து, மின்­சாரம் துண்­டிப்பு; வீடு­களும் சேதம்

கரை­யோரப் பிரதே­சங்­களில் கடும் சூறா­வளி; போக்­கு­வ­ரத்து, மின்­சாரம் துண்­டிப்பு; வீடு­களும் சேதம்

அம்­பாறை மாவட்ட கரை­யோரப் பிர­தே­சங்­களில் நேற்­று­முன்­தினம் மாலை வீசிய மினி சூறா­வளி கார­ண­மாக இப்­பி­ர­தே­சங்­களில் பலத்த சேதம் ஏற்­பட்­டுள்­ளது.

கடவுச்சீட்டில் கைவிரல் அடையாளம்10ஆம் திகதி முதல் அமுல் .

கடவுச்சீட்டில் கைவிரல் அடையாளம்10ஆம் திகதி முதல் அமுல் .

கடவுச்சீட்டு வழங்கும்போது உயிரளவியல் தவல்களை பெற்றுக்கொள்வதற்காக கைவிரல் அடையாளத்தை பதிவு செய்யும் நடைமுறை, இம்மாதம் 10ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டின் தகைமை மற்றும் நம்பகத்தன்மை என்பவற்றை கருத்திற்கொண்டும் நாட்டின் நம்பிக்கைத் தன்மையை சர்வதேச ரீதியில் அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மனைவி கொலை: பூசகர் கைது

மனைவி கொலை: பூசகர் கைது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடியில் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவரான பூசகர், திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். கல்குடா விஷ்னு கோவில் வீதியைச் சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை சுதாகரன் (35 வயது) எனும் பூசகரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவராவர். மட்டக்களப்பு புலவி பிள்ளையார் கோவிலில் பூசகருடன் வசித்து வந்த பிள்ளையாரடியைச் சேர்ந்த எஸ். உதயவாணி (24 வயது) எனும் பெண், ஞாயிறன்று (02.08.2015) சடலமாக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

தூக்கில் தொங்­கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு .

தூக்கில் தொங்­கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு .

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் வெல்­லா­வெளி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட 40 ஆம் ­கொ­லனி பகு­தியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று திங்­கட்­கி­ழமை காலை தூக்கில் தொங்­கிய நிலையில் பெண் ஒரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது. 40 ஆம் கொலனி, வம்­மி­ய­டி­யூற்று நான் காம் வட்­டா­ரத்தில் உத்­த­ம­புத்­திரன் நந்­தினி (26வயது) ஒரு பிள்­ளையின் தாயே இவ்­வாறு சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ள­தாக வெல்­லா­வெளி பொலிஸார் தெரி­வித்­தனர். குறித்த பகுதி கிராம சேவை­யாளர் வழங்­கிய தக­வலின் அடிப்­ப­டையில் குறித்த சட லம் மீட்­கப்­பட்­டுள்­ளது.

க.பொ.த.(உ/த) பரீட்சை இன்று ஆரம்பம்

க.பொ.த.(உ/த) பரீட்சை இன்று ஆரம்பம்

கல்வி பொது தரா­தர உயர்­த­ரப்­ ப­ரீட்சை கள் இன்று நாட­ளா­விய ரீதியில் ஆரம்பமா கின்றன. இம்­முறை நாட­ளா­விய ரீதியில் பரீட்­சையில் 3,09,069 பரீட்­சார்த்­திகள் தோற்­ற­வுள்­ளனர். பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்­பா­டு­களும் தயார் என பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ள­து. இத­னி­டையே உயர்­தர பரீட்சை நிலை­யங்­க­ளாக செயற்­ப­ட­வுள்ள அனைத்து பாட­சா­லை­க­ளுக்கும் 24 மணி­நேர பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக பொலிஸ் திணைக்­களம் தெரிவித்­துள்­ளது இது தொடர்பில் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்­ப­கு­மார கருத்து தெரிவிக்­கையில்.

வேப்பமரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டன

வேப்பமரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டன

அனுமதிப்பத்திரமின்றி கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகை வேப்பமரக் குற்றிகளுடன் டிராக்டர் வண்டியை மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் எதிர்வரும் 06ஆம் திகதி வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை 49 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் விநியோகம்

இதுவரை 49 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் விநியோகம்

இந்த முறைப் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான 49 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் இதுவரை விநியோகம் செய்து முடித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அனைத்து வாக்குச் சீட்டுக்களையும் விநியோகம் செய்து முடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார். எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை வாக்குச் சீட்டுக்கள் விநியோகிக்கும் விஷேட தினமாக பெயரிடப்பாட்டுள்ளது. இதுதவிர ஏனைய அரச அதிகாரிகள் நாளை மற்றும் நளை மறுதினம் தமது தபால் மூல வாக்குப் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

தேசிய அடையாள அட்டைக்கான கட்டண அதிகரிப்பு நிறுத்தம்

தேசிய அடையாள அட்டைக்கான கட்டண அதிகரிப்பு நிறுத்தம்

புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை ஆட்பதிவு திணைக்களம் நிறுத்தி வைத்துள்ளதென திணைக்கள அலுவலளர்கள் தெரிவித்தனர். முதலில், புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணத்தை 3 ரூபாவிலிருந்து 100 ரூபாய் வரை அதிகரிக்கவும் அடையாள அட்டையிலுள்ள தகவல்களை மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை 15 ரூபாவிலிருந்து 1,000ரூபாவாக அதிகரிக்கவும்திணைக்களம் தீர்மானித்திருந்தது. தொலைந்த அல்லது பழுதடைந்த தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணத்தை 15ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக […]

மட்டு.மாவட்டத்தில் 9842 பேர் வாக்களிக்கத் தகுதி

மட்டு.மாவட்டத்தில் 9842 பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்­வரும் பாரா­ளு­மன்ற தேர்தலில் மட்­டக்­க­ளப்­பு­ மா­வட்­டத்தில் தபால் மூலம் வாக்­க­ளிக்க 9842 பேர் தகுதி பெற்­றுள்­ள­தாக மாவட்ட தேர்தல் திணைக்­களம் தெரிவித்­துள்­ளது. இதற்­கென இம்­மா­வட்­டத்தில் 176 தபால் வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. மட்­டக்­க­ளப்பு, பட்­டி­ருப்பு, கல்­குடா ஆகிய தேர்தல் தொகு­தி­களில் பாட­சா­லை கள், பொலிஸ் நிலை­யங்கள், அரச அலு­வ­ல­கங்­களில் குறித்த வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­பட்­டுள்ள. இம்­மா­வட்­டத்தில் தேர்தல் கட­மை­களில் ஈடு­ப­ட­வுள்ள பொலிஸார், படை­யினர் மற்றும் உயர்­த­ரப்­ப­ரீட்­சையில் கடமையாற்றும் ஆசிரியர்களும் வாக்களிக்கவுள்ளனர்

தாஜுதீனின் சடலம் 5ஆம் திகதி தோண்டப்படும்

தாஜுதீனின் சடலம் 5ஆம் திகதி தோண்டப்படும்

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் சடலம், நாளை மறுதினம் புதன்கிழமை (05) தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், குறித்த சடலம் புதைக்கப்பட்டுள்ள தெஹிவளை முஸ்லிம் மயானத்துக்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு அறிவித்தது. றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மரணம், விபத்தினால் ஏற்பட்டதல்ல என்றும் அது படுகொலை என்றும் இரகசிய பொலிஸார், கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்த நிலையிலேயே, […]

விபத்தில் 25 பேர் காயம்.

விபத்தில் 25 பேர் காயம்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் தனியார் பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதினால், அதில் பயணித்த 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட இந்த பஸ் வண்டியின் டயர் ஒன்று வெடித்ததைத் தொடர்ந்து குடைசாய்ந்தது.

முப்படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது: ருவன்.

முப்படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது: ருவன்.

நாட்டில் நிலைகொண்டுள்ள முப்படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சியினர் பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவ்வாறானதொரு நடவடிக்கை முன்னெடுக்கப்படாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். இதேவேளை, நாட்டுக்காக பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்று தபால்மூல வாக்களிப்பு

இன்று தபால்மூல வாக்களிப்பு

எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான தபால் மூல வாக்­க­ளிப்பு இன்று மூன்றாம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இன் றைய தினம் கல்வி திணைக்­களம் மற்றும் பொலிஸ் திணைக்­களம் ஆகி­ய­வற்றின் அதி­கா­ரிகள் தபால் மூல வாக்­க­ளிப்பில் ஈடு­ப­டலாம் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் மீண்டும் ஏனைய அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்­காக எதிர்­வரும் 5 மற்றும் 6 ஆம் திக­தி­க­ளிலும் தபால் மூல வாக்­க­ளிப்பு நடை­பெ­ற­வுள்­ளது.

வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

வாழைச்­சேனை பொலிஸ் பிரிவில் நேற்று வியா­ழக்­கி­ழமை அதி­காலை இடம்­பெற்ற வீதி விபத்­தொன்றில் போக்­கு­வ­ரத்து பிரிவு பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் படு காய­ம­டைந்த நிலையில் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்­தனர்.

உ/த பரீட்சை நிலையங்களுக்கு 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பு .

உ/த பரீட்சை நிலையங்களுக்கு 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பு .

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 23ஆம் திகதி, 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையும் இடம்பெறவுள்ளது.