Home

அயர்லாந்து முத்தரப்பு ODI தொடர்: இறுதிப் போட்டியில் பங்களாதேஷ்

அயர்லாந்து முத்தரப்பு ODI தொடர்: இறுதிப் போட்டியில் பங்களாதேஷ்

அயர்லாந்து, பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடரின் இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் தகுதிபெற்றுள்ளது. டப்ளினில் நேற்று இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே குறித்த தொடரின் இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் தகுதிபெற்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

நாடு விட்டு நாடு தாவும் ஏவுகணைகளை அழிக்க புதிய தொழிநுட்பம்

நாடு விட்டு நாடு தாவும் ஏவுகணைகளை அழிக்க புதிய தொழிநுட்பம்

நாடு விட்டு நாடு தாவக்கூடிய அல்லது கண்டம் விட்டு கண்டம் தாவக்கூடிய ஏவுகணைகளை தாக்கி அழிப்பதற்கு புதிய தொழில்நுட்பம் ஒன்றை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. Self-Protect High Energy Laser Demonstrator (SHiELD) என அழைக்கப்படும் இம்முறைமையானது லேசர் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முதன் முறையாக அமெரிக்கா பரிசீலித்து பார்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பரிசீலிப்பானது தரையிலிருந்தும், விமானங்களிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் விமானப்படை ஆய்வுகூடத்தின் கொமாண்டர் மேஜர் ஜெனரல் வில்லியம் கூலே தெரிவித்துள்ளார்.

உலகில் முதன்முறையாக 5G சேவையை பெற்றுகொள்ளும் முதல் நகரம்

உலகில் முதன்முறையாக 5G சேவையை பெற்றுகொள்ளும் முதல் நகரம்

சீனாவின் ஷாங்காய் 5ஜி நெட்வொர்க் சேவையை பெறும் முதல் நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. உலக நாடுகளிடையே அடுத்த தலைமுறை செல்லுலார் மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவையை உருவாக்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. 5ஜி தான் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தரவிறக்கம் செய்யும் வேகம் 10 முதல் 100 மடங்குவரை அதிகமாக இருக்கும். இந்நிலையில் ஷாங்காய் நகரில் 5ஜி சிக்னல் பரப்பளவு மற்றும் பிராட் பேண்ட் ஜிகாபிட் நெட்வொர்க் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐ. அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலை விடுவிக்கக் கோருகிறது வடகொரியா

ஐ. அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலை விடுவிக்கக் கோருகிறது வடகொரியா

சர்வதேச தடைகளை மீறியதற்காக, ஐக்கிய அமெரிக்காவால் கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலொன்றை விடுவிக்குமாறு வடகொரியா, நேற்று (14) வலியுறுத்தியுள்ளதுடன், கப்பல் கைப்பற்றப்பட்டதை சட்டரீதியற்ற கொள்ளை எனத் தெரிவித்துள்ளது. தடைகளை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காரணங்காட்டி, இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டு ஓராண்டுக்குப் பின்னர், வடகொரியாவின் பதிவுசெய்யப்பட்ட சரக்குக் கப்பலான எம்/வி வைஸ் ஹொனெஸ்டைத் தாம் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க நீதித் திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.

பாடசாலை தளபாடங்கள் புனர்நிர்மானம் செய்யப்பட்டு கையளிப்பு…

பாடசாலை தளபாடங்கள் புனர்நிர்மானம் செய்யப்பட்டு கையளிப்பு…

மட்டக்களப்பு ஆஞ்சநேயர் குரூப் ஒப் கம்பனியின் கல்வி மேம்பாட்டு செயற்திட்டத்தின் கீழ் கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் உடைந்த தளபாடங்களை மீள் சுழற்சி மூலம் இலவசமாகத் திருத்திக் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆஞ்சநேயர் குரூப் ஒப் கம்பனியின் தலைவர் உள்ளிட்ட நிருவாகத்தினர் மற்றும் விவேகானந்தா பாடசாலை அதிபர் திருமதி பிரபாஹரி இராஜகோபாலசிங்கம் உட்பட ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது திருத்தப்பட்ட தளபாடங்கள் ஆஞ்சநேயர் குரூப் ஒப் கம்பனியின் தலைவரினால் […]

புகைப்படம் வைத்திருந்தவர்கள் கைது சேர்ந்து புகைப்படம் எடுத்தவர்கள் மீது எவ்வித விசாரணைகளும் இல்லை இது என்ன நியாயம்…

புகைப்படம் வைத்திருந்தவர்கள் கைது சேர்ந்து புகைப்படம் எடுத்தவர்கள் மீது எவ்வித விசாரணைகளும் இல்லை இது என்ன நியாயம்…

(பாராளுமன்ற உறுப்பினர் – ச.வியாழேந்திரன்) விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பழைய படம் ஒன்று இருந்ததாகச் சொல்லி யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இஸ்லாமியப் பயங்கரவாதியான சஹ்ரானுடன் இணைந்து படம் எடுத்துக் கொண்டவர்கள் மீது எந்தக் கைதும் இடம்பெறவில்லை. இந்த நாட்டில் சட்டம் ஒன்றாக இல்லை ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றாக இருக்கின்றது என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்

15வருடங்களுக்கு பின்னர் வழங்கப்பட்ட காணி உறுதி –பிரதேச செயலாளருக்கு நன்றி கூறும் மக்கள்

15வருடங்களுக்கு பின்னர் வழங்கப்பட்ட காணி உறுதி –பிரதேச செயலாளருக்கு நன்றி கூறும் மக்கள்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் சுனாமி அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து திராய்மடு பகுதியில் குடியேற்றப்பட்டுள்ளவர்களுக்கான காணி உறுதிகள் 15வருடங்களுக்கு பின்னர் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. சுனாமி அனர்த்ததின்போது மட்டக்களப்பு நாவலடி பகுதியில் இருந்தவர்கள் திராய்மடு பகுதியில் வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டு குடியேற்றப்பட்டனர். எனினும் இதுவரை காலமும் அவர்களுக்கான காணி உறுதிகள் வழங்கப்படாத நிலையிலேயே இருந்துவந்தது. இந்த நிலையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் குறித்த பகுதியில் உள்ளவர்களுக்கான காணி உறுதிகள் வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றார்.

விடுதலைசெய்யப்பட்டார் அஜந்தன்

விடுதலைசெய்யப்பட்டார் அஜந்தன்

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் அஜந்தன் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி விடுத்த உத்தரவுக்கு அமைய இன்று காலை பதில் நீதிவானின் இல்லத்திற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொண்டுவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளார். குடந்த ஆண்டு கார்த்திகை மாதம் 30ஆம் திகதி வவுணதீவு காவலரணில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பில் இரவுவேளையில்; ஏற்பட்ட பதற்றம்

மட்டக்களப்பில் இரவுவேளையில்; ஏற்பட்ட பதற்றம்

மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் கேட்ட வெடிப்பு சத்தம் காரணமாக மட்டக்களப்பில் இன்று இரவு பதற்ற நிலைமையேற்பட்டது. இன்று இரவு 9.10மணியளவில் இந்த சத்தம் காரணமாக மக்கள் மத்தியில் பதற்ற நிலைமையேற்பட்டது. கடந்த 21ஆம் திகதி முதல் அச்சத்தில் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் இந்த சத்தம் பதற்றத்தினை ஏற்படுத்தியது. எனினும் சிலர் மதுபோதையில் மூலவெடிகளை வெடிக்க வைத்ததனால் இந்த சத்தம் ஏற்பட்டதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

நாட்டின் தற்போதைய நிலைக்குக் காரணம் தென்னிலங்கை அரசியல்வாதிகள் தான்…

நாட்டின் தற்போதைய நிலைக்குக் காரணம் தென்னிலங்கை அரசியல்வாதிகள் தான்…

(ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர்) ஒரு இனத்தின் கலாச்சார பண்புகளை அடக்கியாளும் உரிமை இந்த நாட்டில் யாருக்கும் இல்லை. நாட்டின் தற்போதைய நிலைக்குக் காரணம் இந்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் தான் என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை புரிந்து கொள்ளாமல் இனங்களுக்கிடையில் பிரிவினையை உருவாக்கும் கருத்துக்களை விதைக்கக் கூடாது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை வைத்திய நிபுனர்கள் இடமாற்றம் தொடர்பிலான கலந்துரையாடல்…

களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை வைத்திய நிபுனர்கள் இடமாற்றம் தொடர்பிலான கலந்துரையாடல்…

களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையிலுள்ள வைத்திய நிபுனர்களின் இடமாற்றம் காரணமாக அவ்வைத்தியசாலையில் வைத்திய நிபுனர்கள் பற்றாக்குறை நிலவும் நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பில் ஆராயும் முகமான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் களுவாஞ்விக்குடியில் இராசமாணிக்கம் அறக்கட்டளையின் தலைவர் இரா.சாணக்கியன் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண வைத்திய நிபுனர்கள் சங்கத் தலைவர் வைத்திய கலாநிதி மதனழகன் உட்பட பல வைத்திய நிபுனர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடையின் போது 230 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடையின் போது 230 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பின் நெல் கொள்வனவின் போது வியாபாரி உரிய விலையில் நெல்லினை கொள்வனவு செய்வதில்லை.என்ற குறைபாட்டை தீர்ப்பதற்காக மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களின் முயற்சியின் பெயரால் 50 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொடுத்து நெல் கொள்வனவிற்கான நிர்ணய விலையினையும் ஏற்படுத்தியமையால் இம்முறை விவசாயிகளுக்கு நல்ல இலாபம் கிடைத்ததாக தெரிவிக்கின்றனர்.

சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் பார்வையிட்ட  போது

சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் பார்வையிட்ட போது

ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் பார்வையிட்ட போது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாநகரசபையின் 17வது அமர்வு… முதல்வரின் செயற்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்து கூட்டமைப்பு உறுப்பினர்கள் எண்மர் வெளிநடப்பு…

மட்டக்களப்பு மாநகரசபையின் 17வது அமர்வு… முதல்வரின் செயற்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்து கூட்டமைப்பு உறுப்பினர்கள் எண்மர் வெளிநடப்பு…

மட்டக்களப்பு மாநகரசபையின் 17வது அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. மாநகரசபையினை மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்று நாளை (05) உடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் இந்நடப்பாண்டுக்கான இறுதி அமர்வாக இது நடைபெற்றது. வழமைபோன்று சபைச் சம்பிரதாயங்களின் பிரகாரம் சபை அமர்வுகள் ஆரம்பிக்கின்ற வேளையில் முதல்வரின் பல்வேறு செயற்பாடுகளில் அதிருப்தியிருப்பதாகவும், கலந்துரையாடல் இல்லாமல் தன்னிச்சையாக செயற்படுவதாகவும் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்கள் இன்றைய சபை அமர்வினைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனர்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் நகரத்திற்கு சென்றதும்  கிராமத்தை மறந்து விடுகிறார்கள்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் நகரத்திற்கு சென்றதும் கிராமத்தை மறந்து விடுகிறார்கள்.

எமது மாவட்டத்திலே கிராமப்புறங்களே அதிகமாக காணப்படுகின்றது அக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து கல்விகற்று அரச அதிகாரத்தில் அமர்ந்தபின் தாம் பிறந்த இடத்தையே மறந்து விடுகிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த வவுனதீவு பிரதேசம் என மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச தமிழ் மக்கள் விடுலைப்புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் தைரியம் ஜெயந்தினி யின் இல்லத்தில் மக்கள் பணிமனை திறப்பு விழா நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளரின் பிரதிநிதியாக கலந்து கொண்ட கட்சியின் சிரே~;ட உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினருமான குமாரசாமி […]

அம்பாறையில் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு

அம்பாறையில் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு

(டினேஸ்) காணாமலாக்கப்பட்டோருக்கான கிளை அலுவலகம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இந்த ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணியின் தலைமையில் திருக்கோவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. மேலும், இந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பலர் கலந்துகொண்டனர். இறுதிக்கட்ட யுத்தத்திற்கு முன்னரும் யுத்தத்தின்போதும் யுத்தத்திற்கு பின்னரும் இலங்கை இராணுவத்தினரால் பலர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அம்பாறை நாவிதன்வெளி பிரதேச நிருவாக தெரிவும் பத்திரிகையாளர் சந்திப்பும்

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அம்பாறை நாவிதன்வெளி பிரதேச நிருவாக தெரிவும் பத்திரிகையாளர் சந்திப்பும்

(டினேஸ்) கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அம்பாறை நாவிதன்வெளி பிரதேச நிருவாக தெரிவும் பத்திரிகையாளர் சந்திப்பும் இன்று 23 ஆம் திகதி அம்பாறை நாவிதன்வெளி கலாச்சார மண்டபத்தின் ஒன்றியத்தின் தலைவர் சட்டத்தரணி சிவநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ். சர்வானந்தம் பிரதேசவாசிகள் சமூக ஆர்வலர்கள் நலன்விரும்பிகள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

28 ஆம் திகதியன்று கொழும்பு மருதானைப் பகுதியை முற்றுகையிடவுள்ளோம் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தன்னே ஆனந்த தேரர்

28 ஆம் திகதியன்று கொழும்பு மருதானைப் பகுதியை முற்றுகையிடவுள்ளோம் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தன்னே ஆனந்த தேரர்

(டினேஸ்) அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று 23 ஆம் திகதி சாய்ந்தமருது அல்-ஹில்லா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் எம்.ஜசீர் தலைமையில் நடைபெற்றது இங்கு கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். மேலும் கூறுகையில்…….

மட்டக்களப்புக்கு வருகைதரும் பிரதமர் ரணில் 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்குவார்.

மட்டக்களப்புக்கு வருகைதரும் பிரதமர் ரணில் 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்குவார்.

மட்டக்களப்புக்கு எதிர்வரும் சனிக்கிழமை விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள், காணி அனுமதிப்பத்திரங்களையும் வழங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மேற்கொண்டுள்ளது. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சனிக்கிழமை (23) காலை 9. முணிக்கு நடைபெறவுள்ள இந்த வைபவத்தில், காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, இராஜாங்க அமைச்சர்களான அலிசாஹீர் மௌலானா, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சி.யோகேஸ்வரன், உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வ மத தலைவர்கள் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிகளுடன் தமிழ் மக்கள் கூட்டணியினர் சந்திப்பு.

சர்வ மத தலைவர்கள் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிகளுடன் தமிழ் மக்கள் கூட்டணியினர் சந்திப்பு.

(டினேஸ்) சர்வ மத தலைவர்கள் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிகளுடன் தமிழ் மக்கள் கூட்டணியினர் சந்திப்பு இன்று மட்டக்களப்பு அமரிக்கன் மிசன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி விக்னேஸ்வரன் கொள்கைப் பரப்புப் செயலாளர் அருந்தவபாலன் இணைச்செயலாளர் பேராசிரியர் சிவநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான செயலாளர் எஸ்.சோமசுந்தரம் இணையம் அரச்சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தலைவர் எம்.சீலன் மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத தலைவர்கள் என பலரும் […]

எமது மக்கள் பிரதிநிதிகளின் நாடகப்போக்கு இளைஞர்களாகிய எமக்கு அதிருப்தியையும் மனவேதனையும் ஏற்படுத்துகின்றது…    (மறத்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் – வே.அன்பழகன்)

எமது மக்கள் பிரதிநிதிகளின் நாடகப்போக்கு இளைஞர்களாகிய எமக்கு அதிருப்தியையும் மனவேதனையும் ஏற்படுத்துகின்றது… (மறத்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் – வே.அன்பழகன்)

தேர்தல் நேரங்களில் மட்டும் மக்களில் இருக்கும் அபிலாசைகளைக் காட்டுவதும் மக்கள் மீது அன்பு காட்டுவதுமான ஒரு நாடகப் போக்கை எமது மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக மேற்கொள்வது இளைஞர்களாகிய எமக்கு அதிருப்தியையும் மனவேதனையும் ஏற்படுத்தி இன்று இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளது என மறத்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே.அன்பழகன் தெரிவித்தார். மட்டக்களப்பு வவுணதீவு, நாவற்காடு பிரதேசத்தில் இன்றைய தினம் மறத்தமிழர் கட்சியின் அங்குரார்ப்பன நிகழ்வின் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் […]