Home

புதிய ஐ.எஸ். வரை­ப­டத்தில் இலங்கை

புதிய ஐ.எஸ். வரை­ப­டத்தில் இலங்கை

ஈராக் மற்றும் சிரி­யா­வி­லுள்ள பிராந்­தி­யங்­களை ஆக்­கி­ர­மித்து அங்கு இஸ்­லா­மிய தேசத்தைப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ள ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் எதிர்­வரும் 5 வருட காலப் பகு­தியில் இலங்­கையை உள்­ள­டக்கி உல­கி­லுள்ள 3 கண்­டங்­களை ஆக்­கி­ர­மித்து தமது தேசத்­துக்­கான புதிய வரை­ப­ட­மொன்றை உரு­வாக்கத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக பி.பி.சி. ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரை மேற்கோள் காட்டி பிரித்­தா­னிய மிரர் ஊடகம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

கூகுளை மிஞ்சிய மைக்ரோசாப்ட்டின் புதிய அப்ளிகேஷன்…!

கூகுளை மிஞ்சிய மைக்ரோசாப்ட்டின் புதிய அப்ளிகேஷன்…!

கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பில் ஜாம்பவானாக திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய மொழிபெயர்ப்பு அப்ளிகேஷனை வெளியி்ட்டுள்ளது. தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் டிரான்ஸ்லேட்டர் 27 மொழிகளை மட்டுமே மொழிபெயர்ப்பு செய்யும் நிலையில், மைக்ரோசாப்ட்டின் புதிய அப்ளிகேஷன் 50 விதமான மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யும் திறன் வாய்ந்ததாகும். இந்த அப்ளிகேஷனை பல்வேறு விதமான கருவிகளிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் டிரான்ஸ்லேட்டர் என அழைக்கப்படும் இந்த ஆப், விண்டோஸ் மட்டுமின்றி ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கருவிகளிலும் இயங்கும் ஆற்றலுடன் […]

திரிஷாவுக்கு இருக்கும் மிகப்பெரிய வருத்தம் என்ன தெரியுமா?

திரிஷாவுக்கு இருக்கும் மிகப்பெரிய வருத்தம் என்ன தெரியுமா?

திரிஷாவின் சினிமா வாழ்க்கை சாதாரண துணை நடிகையாகவே தொடங்கியது. ‘ஜோடி’ படத்தில் சிம்ரன் தோழியாக வந்தார். 1999-ல் இந்த படம் வெளியானது. அதன்பிறகு மூன்று வருடங்கள் படங்கள் இல்லாமல் சும்மா இருந்தார். பிறகு அவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படமான லேசா லேசா வெற்றிப்படமாக அமையவில்லை. 2002-ல் ‘மவுனம் பேசியதே’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. தொடர்ந்து திரையுலகில் ஏறுமுகம் ஆனார்.

வாக்காளர் அட்டை விநியோகம் 97 சதவீதம் நிறைவு

வாக்காளர் அட்டை விநியோகம் 97 சதவீதம் நிறைவு

17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்ததாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன கூறினார். வீட்டை மூடி வைத்திருந்தவர்கள் மற்றும் வீட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கவில்லையாயின் அருகில் உள்ள தபாலகம் அல்லது உப-தபாலகத்துக்கு சென்று ஆள் அடையானத்தை உறுதிப்படுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கிராம அலுவலர்கள் மனச்சாட்சியுடன் சிறந்த சேவையை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் -பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

கிராம அலுவலர்கள் மனச்சாட்சியுடன் சிறந்த சேவையை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் -பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம அலுவலர்களின் மாவட்ட ரீதியான இடமாற்றம் தொடர்பில் தேர்தலுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உறுதியளித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர் சங்க உறுப்பினர்களுக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையிலான சந்திப்பு மாவட்ட செயலகத்தில்; நேற்று காலை நடைபெற்றது. இதன்போதே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்ட உறுதிமொழியை வழங்கியதாக மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர் சங்கத்தின்; செயலாளர் த.சிறிநாதன் தெரிவித்தார்.

இலங்கை இளைஞர் அபிவிருத்தி ஒன்றியம் சந்திரகாந்தனுக்கு ஆதரவு.

இலங்கை இளைஞர் அபிவிருத்தி ஒன்றியம் சந்திரகாந்தனுக்கு ஆதரவு.

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரகாந்தனுக்கு ஆதரவு வழங்க இலங்கை இளைஞர் அபிவிருத்தி ஒன்றியம் முன்வந்துள்ளது. நேற்று 11.08.2015 சந்திரகாந்தனைச் சந்தித்த இளைஞர் அபிவிருத்தி ஒன்றியத்தினர் முற்று முழுதாக ஆதரவு வழங்குவதாகவும் தங்களது அமைப்பில் 4632 பேர் இருப்பதாகவும் அனைவரும் ஒருமித்து இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும். சந்திரகாந்தனின் வெற்றிக்காக உழைக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

வாக்காளர் அட்டை விநியோகம் 97 சதவீதம் பூர்த்தி

வாக்காளர் அட்டை விநியோகம் 97 சதவீதம் பூர்த்தி

17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்ததாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன கூறினார். வீட்டை மூடி வைத்திருந்தவர்கள் மற்றும் வீட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கவில்லையாயின் அருகில் உள்ள தபாலகம் அல்லது உப-தபாலகத்துக்கு சென்று ஆள் அடையானத்தை உறுதிப்படுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார் .

அறுகம்பையில் நவீன மீன்பிடித் துறைமுகம்

அறுகம்பையில் நவீன மீன்பிடித் துறைமுகம்

அம்­பாறை மாவட்­டத்­தில பொத்­துவில் அறு­கம்­பைக்­கு­டாவில் 31 கோடி ரூபா செலவில் சகல வச­தி­க­ளையும் கொண்ட மீன்டித் துறை­மு­க­மொன்று அமைக்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றது.

பொதுத்தேர்தலின் பின்னர் மட்டக்களப்பில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சாட்சியங்கள் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்

பொதுத்தேர்தலின் பின்னர் மட்டக்களப்பில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சாட்சியங்கள் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்

எதிர்­வரும் 17 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலின் பின்னர் யுத்த காலத்­திலும், யுத்­தத்­திற்கு பின்­னரும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் காணாமல் போன­வர்கள் தொடர்பில் சாட்­சி­யங்­களை பதிவுசெய்யும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­படும் என ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. இதன்­பி­ர­காரம் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் களு­வாஞ்­சிக்­குடி மற்றும் வாழைச்­சேனை பிர­தேச செய­ல­கங்­களில் சாட்­சி­யங்­களை பதிவுசெய்யும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும் என காணாமல் போன­வர்­களைக் கண்­ட­றியும் வகையில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

இன்றும் தபால் மூலம் வாக்களிக்க சந்தரப்பம்

இன்றும் தபால் மூலம் வாக்களிக்க சந்தரப்பம்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக கடந்த நாட்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாமால் போன அரச உத்தியோகத்தர்கள் இன்றைய தினமும் தமது வாக்குகளை பதிவு செய்ய முடியும் இன்று காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை இவர்கள் தமது தபால் மூல வாக்குகளை பதிவு செய்யலாம் என்று பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மெஹமட் தெரிவித்தார்.

மட்டுவில் கொடுவா மீன் வளர்ப்புத் திட்டம்.

மட்டுவில் கொடுவா மீன் வளர்ப்புத் திட்டம்.

மட்டக்களப்பு, நாவலடி வாவியில் கூண்டுகளில் கொடுவா மீன்களை வளர்க்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் 06 மாதங்களில் மொத்த வருமானமாக மீனவர் ஒருவருக்கு சராசரி இரண்டு இலட்சம் ரூபாய் கிடைப்பதாக இந்த மீன் வளர்ப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ள க.அருள்நாதன் தெரிவித்தார். ‘விவசாய அபிவிருத்தி மூலம் வறுமையை குறைத்தல்’ எனும் தொனிப்பொருளில் வாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் கொடுவா மீன்களை வளர்க்கும் திட்டம் நாவலடியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டு. உதவித் தேர்தல்கள் ஆணையாளரை தாக்க முற்பட்ட இருவருக்கு சரீரப்பிணை .

மட்டு. உதவித் தேர்தல்கள் ஆணையாளரை தாக்க முற்பட்ட இருவருக்கு சரீரப்பிணை .

மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரையும் தேர்தல்கள் உத்தியோகஸ்தர்களையும் காத்தான்குடியில் தாக்குவதற்கு முற்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரையும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தலைவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் என்.எம்.அப்துல்லாஹ் தலா 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணைகளில் நேற்று திங்கட்கிழமை விடுவித்துள்ளார். அத்துடன், 29.9.2015 வரை இந்த வழக்கை நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

தலைமைத்துவ பயிற்சி முகாம்

தலைமைத்துவ பயிற்சி முகாம்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர்கள் மத்தியில் தலைமைத்துவத்தை வளர்க்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் தலைமைத்துவ பயிற்சி முகாம், மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து சுமார் 100 இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.

தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க இன்றே இறுதிநாள்

தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க இன்றே இறுதிநாள்

தற்காலிகமாக அடையாள அட்டை வழங்கும் கால எல்லை இன்றுடன் நிறைவடையவுள்ளது. இதன்படி தேர்தலில் வாக்களிக்க உரிய அடையாள அட்டை இல்லாதவர்கள், இன்றைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கிராம சேவகர் அல்லது அருகிலுள்ள தேர்தல்கள் செயலக அலுவலகத்தில் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என, தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்று முதல் கடவுச்சீட்டைப் பெற கைவிரல் அடையாளம் அவசியம்!

இன்று முதல் கடவுச்சீட்டைப் பெற கைவிரல் அடையாளம் அவசியம்!

இனிவரும் காலங்களில் இலங்கையில் கடவுச்சீட்டில், கைவிரல் அடையாளத்தை பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி அனைத்து விண்ணப்பதாரிகளும் தமது கைவிரல் அடையாளங்களை, தலைமை அலுவலகத்திற்கு அல்லது பிராந்திய அலுவலகங்களுக்கு வந்து வழங்க வேண்டும் என, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் மகளிர் அமைதிப் பேரணி .

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் மகளிர் அமைதிப் பேரணி .

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு அணி திரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் மகளிர் அமைதிப் பேரணி, மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக திங்கட்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு வாழ் தமிழ், முஸ்லிம் பெண்கள் இணைந்து இந்த விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

‘எழுச்­சியை நோக்கி மீன்­பாடும் தேன்­நாடு 5ஆம் ஆண்டு மக்கள் நலன் திட்ட தேர்தல் விஞ்­ஞா­பனம்” வெளியீடு

‘எழுச்­சியை நோக்கி மீன்­பாடும் தேன்­நாடு 5ஆம் ஆண்டு மக்கள் நலன் திட்ட தேர்தல் விஞ்­ஞா­பனம்” வெளியீடு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் சேர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஐந்தாண்டு மக்கள் நலத்திட்டம் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமாகிய சி. சந்திரகாந்தன் தலைமையில் 07.08.2015 அன்று மு.ப 10.00 மணிக்கு செங்கலடி சீனித்தம்பி ஞாபகார்த்த மண்டபத்தில் வெளியீடப்பட்டுள்ளது. இன் நிகழ்வில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

இரு அதிகாரிகளுக்கு இடமாற்றம்

இரு அதிகாரிகளுக்கு இடமாற்றம்

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சை சேர்ந்த இரு அதிகாரிகளை பொது நிர்வாக அமைச்சுக்கு தேர்தல்கள் செயலகம் இடம்மாற்றியுள்ளது. இந்த இரண்டு அதிகாரிகளும் பொதுத் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னர் பதவியுயர்வுகள், நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் என்பவற்றை வழங்கியுள்ளனர். இதனாலேயே இவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது

மரத்தளபாட நிலையத்தில் தீ

மரத்தளபாட நிலையத்தில் தீ

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர பிரதான வீதியிலுள்ள மரத்தளபாட மற்றும் மர அரிவு ஆலையில் இன்று (08) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்த மரத்தளபாடங்களும் மர அரிவு இயந்திராதிகளும் எரிந்து நாசமாகியுள்ளதென ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மரத்தளபாட மற்றும் மர அரிவு ஆலையிலிருந்த மரத் தளவாடங்கள், இயந்திராதிகள் உட்பட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயினால் எரித்து நாசமாக்கியுள்ளதென ஆலையின் உரிமையாளர் அப்துல் அஜீஸ் ஷிரீன் தெரிவித்தார்.

தமிழ் மொழி பாடநெறியை பூர்த்தி செய்து வெளியேறும் பொலிஸார் .

தமிழ் மொழி பாடநெறியை பூர்த்தி செய்து வெளியேறும் பொலிஸார் .

தமிழ் மொழி பாடநெறியை பூர்த்தி செய்து வெளியேறும் சிங்கள மொழிமூல பொலிஸாரின் கலை நிகழ்வுகள் கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் இன்று சனிக்கிழமை (08) நடைபெற்றன. தமிழ் பேசும் மக்களின் நன்மை கருதி தமிழ் பிரதேசங்களில் கடமையாற்றும் சிங்களப் பொலிஸாருக்கும் பொலிஸ் நிலையம் நாடி வரும் மக்களுக்கும் சினேகபூர்வமான உறவை ஏற்படுத்தும் நோக்கொடு இப்பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் கே. பேரின்பராஜா தெரிவித்தார்.

ஹிஸ்புல்லாவை விட அதிகவாக்குகளை நான் பெற்று அமைச்சராவேன் -பிள்ளையான் .

ஹிஸ்புல்லாவை விட அதிகவாக்குகளை நான் பெற்று அமைச்சராவேன் -பிள்ளையான் .