News

IMG_5272

போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் இரண்டு போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் கைத்துப்பாக்கியும் பறித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது இதன் காரணமாக குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல் நடைபெற்றுவரும் நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது. இளைஞர் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தமுற்பட்டநிலையில் நிறுத்தாமல்சென்றதாகவும் இரண்டு போக்குவரத்து பொலிஸார் அவர்களை துரத்திச்சென்று பிடிக்கமுற்பட்டபோது குறித்த இளைஞர்கள் விபத்துக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அப்பகுதியில் […]

65919119_462907817827842_8777415111380828160_n

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மகளிர் அமைப்பாளராக நியமணம்

மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் செல்வி. கெளரி தெரிவுசெய்யப்பட்டுள்ளார் இவருக்கான நியமனக்கடிதம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது

65631976_2370572283199877_3551986555641921536_n

வித்தியாலயத்தின் 74 வது பாடசாலை தினம்

கல்குடா கல்வி வலய வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தின் 74 வது பாடசாலை தினம் பாடசாலை அதிபர் க.பகீரதன் தலைமையில் நடைபெற்றது    இந்நிகழ்வில் கல்குடா வலயக்கல்விப்பணிப்பாளர் தி.ரவி பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.துஷ்யந்தன் ஏறாவூர்ப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.தட்சணாமூர்த்தி பிரதேச சபை உறுப்பினர் ச.சிறிகலா ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். க.பொஇத(சா/த) 2018 பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களும் கற்பித்த ஆசிரியர்களும் புறக்கிருத்தியச்செயற்பாடுகளில் தேசிய மாகாண மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். நல்லையா அறக்கட்டளையினால் ஆங்கிலத்தில் புலமையுள்ள […]

_107558711_img_0615

சிந்துபாத் – சினிமா

தென்காசியைச் சேர்ந்த திரு (விஜய் சேதுபதி), சூப்பர் (சூர்யா) என்ற சிறுவனுடன் சேர்ந்து சிறுசிறு திருட்டு வேலைகளில் ஈடுபடுபவன். மலேசியாவில் வேலைபார்க்கும் வெண்பா (அஞ்சலி), ஊருக்கு வரும்போது அவளைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். வெண்பா வீட்டாரின் எதிர்ப்பை மீறி, கல்யாணம் செய்துகொண்டு மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பிவைக்கிறான். ஆனால், வெண்பா அங்குள்ள ஒரு ஆட்கடத்தல் கும்பல் மூலம் தாய்லாந்திற்கு விற்கப்படுகிறாள். அவளை மீட்கச் செல்லும் திரு, அங்கிருக்கும் ஒரு அபாயகரமான போதைப் பொருள் கடத்தல் கும்பலோடு மோத நேர்கிறது. இந்தக் […]

201905231203281150_Lok-Sabha-Elections-Results-2019-Rahul-Gandhi-leading_SECVPF.gif

கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகினார் ராகுல்

மக்களவை தேர்தலில் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து ராகுல் காந்தி அறிக்கையை வெளியிட்டார். அதில் “காங்கிரஸ் கட்சியில் பணியாற்றுவதில் பெருமை கொள்வதாக தெரிவித்து உள்ளார். மேலும் அவர் அறிக்கையில் கூறியுள்ளதாவது, ‘தனது நாட்டுக்கும் கட்சிக்கும் தாம் பெருமளவு கடமைப்பட்டு உள்ளேன். காங்கிரஸ் கட்சித் தலைவர் என்ற முறையில் தேர்தல் தோல்விக்கு தாமே பொறுப்பு. தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்கிறேன். 2019 தேர்தல் தோல்விக்கு […]

dscn3167

அம்பாறை காடி தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு புதிய பணிப்பாளர்; நியமனம்

அம்பாறை காடி தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு புதிய பணிப்பாளராக களுதாவளையினைச் சேர்ந்த சதாசிவம்.தியாகராசா பொதுச் சேவை ஆணைக்குழவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

img-20190522-wa0011

குளக்கட்டு விரைவில் திருத்தப்பட வேண்டும்

திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் தாமரைக்கேணி குளக்கட்டு விரைவில் திருத்தப்பட வேண்டும். – முன்னாள் பா.உ. சந்திரநேரு சந்திரகாந்தன் அம்பாரை மாவட்டத்தின், திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் தாமரைக்கேணி குளத்தின் குளக்கட்டு உடைந்துள்ளபோதும் , இன்று வரை இது குறித்து எந்த அரச அதிகாரிகளோ நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் விசனம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

????????????????????????????????????

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதிக்கிடையில் விசேட சந்திப்பு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர அவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் மட்டக்களப்பு இராணுவக் கட்டளைத் தளபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுபினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன் உட்பட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும். சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு வெளியாகும்.

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும். சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு வெளியாகும்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ந் தேதியன்று 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தன. கடந்த 19-ந் தேதியன்று 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தலும் நடந்தது. ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட எந்திரங்களும், அதனுடன் இணைக்கப்பட்டு இருந்த ஒப்புகைச் சீட்டு எந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறு தினம் (வியாழக்கிழமை) நடக்கிறது. தமிழகம் முழுவதும் 45 மையங்களில் வாக்கு […]

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் தாகசாந்தி நிகழ்வு

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் தாகசாந்தி நிகழ்வு

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கருத்திட்டத்தின் கீழ் அகில இலங்கை மக்கள் செயல் கழகம் மற்றும் பெண்களுக்கும் சிறுவர்களுக்குமான சமாதான அமைப்பு ஆகியன இணைந்து மட்டக்களப்பில் தாகசாந்தி நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். வெசாக் தினத்தை அனுஷ்டிக்கும் நோக்கில் இலங்கை முழுவதும் பல பகுதிகளில் வெசாக் தோரணைகள் கூடுகள் அமைத்து காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன அந்தவகையில் பௌத்த சமையத்தவரின் விசேட தினமான இன்று இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இத்தாகசாந்தி நிகழ்வு மட்டக்களப்பு ஜீவி வைத்தியசாலை அருகில் இன்று 19 ஆம் […]