சீன எல்லையில் மாயமான விமானப்படை விமானத்தை தேடும் பணியில் இஸ்ரோவும், கடற்படையும் இணைந்துள்ளன.

  • editor1
  • 04 Jun 2019
  •   Comments Off on சீன எல்லையில் மாயமான விமானப்படை விமானத்தை தேடும் பணியில் இஸ்ரோவும், கடற்படையும் இணைந்துள்ளன.

விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 13 பேர் நேற்று முன்தினம் அசாம் மாநிலத்தில் இருந்து அருணாசல பிரதேசத்துக்கு ஏ.என்.32 ரக விமானத்தில் சென்றனர். அந்த விமானம் புறப்பட்ட 33 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் துண்டிக்கப்பட்டு சீன எல்லையோரம் திடீரென மாயமானது.
இதைத்தொடர்ந்து விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

ஆனாலும் விமானம், அதில் இருந்த 13 பேரின் கதி என்ன ஆனது என்பது குறித்து தெரியவில்லை. தொடர்ந்து நேற்று 2-வது நாளாக விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்தது. இதில் ராணுவத்தினரும், இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டனர்.

விமானத்தின் தகவல் துண்டிக்கப்பட்ட இடம் மலைப்பாங்கான காட்டுப்பகுதியாகும். எனவே விமானம் நொறுங்கி விழுந்து இருக்கலாம் என சந்தேகம் அடைந்த அதிகாரிகள், ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு நடத்தினர். ஆனால் அந்த பகுதியில் விமானத்தின் பாகங்கள் எதுவும் தென்படவில்லை.

இந்தநிலையில் கூடுதலாக தேடுதல் பணியில் இஸ்ரோவும், கடற்படை விமானங்களும் இணைந்துள்ளன.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

மாயமான விமானப்படை விமானம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இஸ்ரோ, கடந்த மாதம் 22-ந்தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவிய ரேடார் இம்மேஜிங் என்ற நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட ‘ரீசாட்-2பி’ உள்ளிட்ட பூமி கண்காணிப்பு செயற்கைகோள்களும் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இந்த வகை செயற்கைகோள்கள் இரவு, பகல் என்று இல்லாமலும், மூடுபனியாக இருந்தாலும் துல்லியமாக இலக்குகளை படம் பிடிக்கும் வசதியை கொண்டதாகும். இதன் மூலம் தேடும் பணியில் நல்ல முடிவு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படை தளத்தில் உள்ள அதிக சக்தி வாய்ந்த ரேடாரும் இந்த தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அருணாசலபிரதேச மாநிலம் மேற்கு சியாங் மாவட்டத்தில் இதே ரக விமானம் ஒன்று மலையில் மோதியதில் 13 பாதுகாப்பு படை வீரர்கள் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.