அம்பாறை காடி தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு புதிய பணிப்பாளர்; நியமனம்

  • editor1
  • 04 Jun 2019
  •   Comments Off on அம்பாறை காடி தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு புதிய பணிப்பாளர்; நியமனம்

அம்பாறை காடி தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு புதிய பணிப்பாளராக களுதாவளையினைச் சேர்ந்த சதாசிவம்.தியாகராசா பொதுச் சேவை ஆணைக்குழவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் களுதாவளை மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்று. முகாமைத்துவ பட்டத்தினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும்,கல்வியில் பட்ட மேற்படிப்பினை திறந்த பல்கலைக்கழகத்திலும்,முகாமைத்துவத்தில் பட்ட மேற்படிப்பினையும்,முகாமைத்துவத்தில் முதுமானியினை (ஆடீயு) ரஜரட்ட பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவுரையாளராக கடமையாற்றி,இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவனத்தில் ஆறு வருடகாலம் கல்வி இணைப்பாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ர்NனுயுஇNனுநு மாணவர்கள் கல்வி பயின்று தொழில்வாய்பினைப் பெற்றுள்ளளார்கள்.
சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் இரண்டு வருடகாலம் கடமையாற்றினார்.இக்காலப்பகுதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரிக்கு உப அதிபராக தொழில்நுட்ப பயிற்சி திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டார்.இவரின் வருகைக்குப் பின்னர் பத்துக்கும் மேற்பட்ட புதிய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டது.அத்துடன் இருபதுக்கும் மேற்பட்ட கற்கைநெறிகள் (யுஉஉசநனவையவழைn) மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டது. ஒரு நிறுவனத்தில் ஒரு வருடத்தில்; பதினைந்துக்கும் மேற்பட்ட கற்கைநெறிகள் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட சாதனையாகவும் இது உள்ளது.
மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கற்கை நெறிகளுக்கு 500க்கும் மேற்பட்ட தொழில் தகைமைச் சான்றிதழ்கள் இங்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர் மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரிக்கு உப அதிபராக இருந்த காலப்பகுதியில் பல்வேறு கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தர முகாமைத்துவ பிரதிநிதியாக இருந்து இக் கல்லூரிக்கு தர முகாமைத்துவ சான்றிதழை பெற்றுக் கொடுத்துள்ளார். வடகிழக்கில் முதன் முதலாகக்; இக் கல்லூரியே தர முகாமைத்துவ சான்றிதழைப் பெற்றது. வடகிழக்கில் இக் கல்லூரி மாத்திரமே முதலில் அமைச்சின் திறன் அபிவிருத்தி திட்டத்தில் உள்வாங்கப்பட்;டது. இத்திட்டத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வியாபார திட்டம் என்பதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இதில் 69 புள்ளிகளைப் பெற்று தொழில் நுட்ப பயிற்சி திணைக்களத்தில் முதலிடத்தினைப் பெற்றது. இதனால் இக் கல்லூரி இரண்டாம் தடவையும் திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டு 23 மில்லியன் ரூபா நிதி புணரமைப்புக்கு வழங்கப்பட்டது.இவ்வாறான சிறந்த சேவைக்காக அமைச்சு இவருக்கு இரண்டு வாரகால பயிற்சிக்காக சிங்கப்பூர் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
தர முகாமைத்துவத்தில் சிறப்புத் தன்மை காரணமாக இவர் தர தூதுவராக (ஞரயடவைல யுஅடியளளயனழச) அமைச்சினால் நியமிக்கப்பட்டார்.திணைக்களத்தில் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட ஒரு தமிழர் இவர் மாத்திரம்தான். இவ்வாறு மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரிக்கு உப அதிபராக இருந்து பாரிய அபிவிருத்தியினை மேற்கொண்ட இவர் அக்கரைப்பற்று தொழில்நுட்பக்கல்லூரிக்கு பிரதி அதிபராக பொதுச் சேவை ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டு, புதிய அதிபராக திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டார்
அக்கரைப்பற்று தொழில்நுட்பக்கல்லூரிக்கு அதிபராக நியமிக்கப்பட்ட பின்னர் ஆறு புதிய தொழில் நுட்ப கற்கைநெறிகளும், இரண்டு டிப்ளோமா கற்கை நெறிகளும் ஆரம்பிக்கப்பட்டது. அத்தோடு முதன் முதலாக 1000க்கும் மேற்பட்ட தொழில் தகைமைச் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது சிறப்பாக குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும.;
தொழில்நுட்ப பயிற்சித் திணைக்களத்தினால் விண்ணப்பம் கோரப்பட்டு பொதுச் சேவை ஆணைக்குழுவினால் புதிய பணிப்பாளராக அம்பாறை காடி தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் களுதாவளை சதாசிவம் வள்;ளியம்மையின் கனிஸ்ர புத்திரனுமாவார்.