தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனருக்கு மீண்டும் பயங்கரவாத தடுப்புப்பிரிவின் விசாரணைக்காக அழைப்பு

  • editor1
  • 28 Jan 2019
  •   Comments Off on தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனருக்கு மீண்டும் பயங்கரவாத தடுப்புப்பிரிவின் விசாரணைக்காக அழைப்பு

(டினேஸ்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் தேசத்தின் வேர்கள் முன்னாள் போராளிகள் அமைப்பின் இயக்குனர் கணேசன் பிரபாகரனுக்கு மீண்டும் பயங்கரவாத தடுப்புப்பிரிவின் விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் 31.01.2019 ஆம் திகதி கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்புப்பிரிவின் தலைமையகத்தின் உள்ள இரண்டாம் மாடிக்கு விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார். அத்துடன் அண்மைக்காலங்களில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் முன்னாள் போராளிகள் என பலர் பல தடவைகள் இவ்வாறான விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.