மட்டக்களப்பு சென். ஜோசப் விசேட கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் கண்காட்சி

  • editor1
  • 23 Jan 2019
  •   Comments Off on மட்டக்களப்பு சென். ஜோசப் விசேட கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் கண்காட்சி

(டினேஸ்)

மட்டக்களப்பு சென். ஜோசப் விசேட கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் கல்விக் கண்காட்சி இன்று 23 ஆம் திகதி அக்கல்வி நிலையத்தில் அதிபர் எம்.ஏ.பரிஸ்கரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இரண்டு நாள் கொண்ட இக்கண்காட்சியினை ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை மட்டக்களப்பு அரசாங்க அதிபர். எம்.உதயகுமார் மாநகரசபை மேயர் ரீ.சரவணபவான் மற்றும் சர்வமதகுருமார்கள் பெற்றோர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது விசேட தேவையுடைய மாணவ மாணவிகளுனால் வடிவமைக்கப்பட்ட கைப்பணிப்பொருட்கள் கற்றல் உபகரணங்கள் அலங்காரப்பொருட்கள் மற்றும் வீட்டுப்பணிப்பொருட்கள் விவசாய பயிர்கள் என பல்வேறுபட்ட வடிவங்களில் அவர்களது சுய கைவண்ணங்களில் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இக்கண்காட்சியானது இப்பாடசாலை கடந்த 2015.08.22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக இவ்வருடமே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன் இம்முறை இரண்டு நாட்கள் கொண்ட கண்காட்சியாக நடைபெறுவதுடன் இனிவரும் காலங்களில் மாணவர்களது திறமைகளை வெளிக்கொனரும் வகையில் மிக பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யவுள்ளதாக அதிபர் கருத்துத்தெரிவித்திருந்தார்.