கம்பறெளிய திட்டத்தில்  ஆரையம்பதி வாகரை வாழைச்சேனை உள்ளிட்ட தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பு

கம்பறெளிய திட்டத்தில் ஆரையம்பதி  வாகரை, வாழைச்சேனை, கிரான், வவூனதீவு உள்ளிட்ட தமிழ் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர்  சுட்டி காட்டியுள்ளார்.

கடந்த வருடம் பட்டிருப்புத் தொகுதியான களுவாஞ்சிக்குடி, போரதீவுப்பற்று,பட்டிப்பாளை பிரதேசங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டியதனை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சுட்டிகாட்டி மக்களுக்கும்  அரசுக்கும் துண்டுப்பிரசுங்களையும் எதிர்ப்பினையும் வெளிகாட்டியிருந்தது
அதனடிப்படையில்  இம்முறை பட்டிப்பாளைக்கு 104.6 மில்லியன்இ களுவாஞ்சிக்குடிக்கு 143.5மில்லியன்இ போரதீவூப்பற்றுக்கு 164.8மில்லியன்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அதே வேளை ஆரையம்பதி பிரதேசத்திற்கும்இ வாகரை,வாழைச்சேனை, கிரான், வவுணதீவு பிரதேசங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை பார்க்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட பூ. பிரசாந்தன் கோரளைப்பற்றுக்கு 33 மில்லியன்கள் கிரான் பிரதேசத்திற்கு 31 மில்லியன்கள் வாகரைப்பிரதேசத்திற்கு 32.53மில்லியன்கள் என கல்குடாப்பிரதேசத்தின் மூன்று தமிழ்பிரதேசங்களும் மிக மோசமாக நிதி ஒதுக்கீட்டில் ஓரம்கட்டப்பட்டுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமை மட்டத்தில் குறிகாட்டி அதிகமாக உள்ள இப்பிரதேசங்களை வலுவாக்க வேண்டிய அரசியல் தலைமைகள் நல்லாட்சி எனவும் ஜக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து இணைக்க ஆட்சி நடத்தும் தமிழ் தலைமைகள் இவற்றில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய சமயத்தில் இவ்வாறு தொடர்ந்தும் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதனை வேடிக்கை பார்ப்பதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராமிய அமைப்பாளர்களுடனான கலந்துரையாடல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைகாரியாலயத்தில் நடை பெற்ற போது கருத்து தெரிவிக்கையிலேயே மேற்;காண்டவாறு குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *