போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் இரண்டு போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் கைத்துப்பாக்கியும் பறித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது

இதன் காரணமாக குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல் நடைபெற்றுவரும் நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது.

இளைஞர் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தமுற்பட்டநிலையில் நிறுத்தாமல்சென்றதாகவும் இரண்டு போக்குவரத்து பொலிஸார் அவர்களை துரத்திச்சென்று பிடிக்கமுற்பட்டபோது குறித்த இளைஞர்கள் விபத்துக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் நின்ற இளைஞர்களுக்கும் குறித்த போக்குவரத்து பொலிஸாருக்கும் இடையே சிலருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாவும்

இதன்போது போக்குவரத்து பொலிஸார் ஒருவரின் கைத்துப்பாக்கி பறித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து குறித்த பகுதியில் படையினர்இவிசேட அதிரடிப்படையினர்.பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *