வித்தியாலயத்தின் 74 வது பாடசாலை தினம்

கல்குடா கல்வி வலய வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தின் 74 வது பாடசாலை தினம் பாடசாலை அதிபர் க.பகீரதன் தலைமையில் நடைபெற்றது    இந்நிகழ்வில் கல்குடா வலயக்கல்விப்பணிப்பாளர் தி.ரவி பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.துஷ்யந்தன் ஏறாவூர்ப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.தட்சணாமூர்த்தி பிரதேச சபை உறுப்பினர் ச.சிறிகலா ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
க.பொஇத(சா/த) 2018 பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களும் கற்பித்த ஆசிரியர்களும் புறக்கிருத்தியச்செயற்பாடுகளில் தேசிய மாகாண மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். நல்லையா அறக்கட்டளையினால் ஆங்கிலத்தில் புலமையுள்ள செல்வி சுபதாரணி எனும் மாணவிக்கு பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வாழங்கப்பட்டது. ஆசிரியர் ஆ.தேவாராஜா ஆசிரியரினால் அமரர் நல்லையா அவார்களைப்பற்றி நினைவுப் பேருரை ஆற்றப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *