மோடிக்கு  கடிதம் ஒன்று

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ரங்கநாத் பாண்டே நாளைய தினம் ஓய்வு பெறவுள்ள நிலையில், எழுதியுள்ளார்

மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், “நீதிபதிகள் நியமனம் செய்வதில், நீதிபதி உறவினர்களுக்குச் சலுகை, சாதி பாகுபாடுகள், பாரபட்சம் பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் நீதித்துறையில் தனது 34 வருட அனுபவத்தில், தகுதி இல்லாதவர்கள் பலர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பூட்டிய அறைக்குள் தேநீர் அருந்திக் கொண்டே நீதிபதிகள் தேர்வு நடைபெறுகிறது. இதில், சிலருக்குச் சாதகமான முடிவுகளும், நீதிபதிகள் நியமனமும் ரகசியமாக நடைபெறுகிறது. அவர்களை நியமனம் செய்த பிறகு தான் நீதிபதிகளின் பெயர்கள் தெரியவருகிறது.

தேசிய நீதிபதிகள் நியமன கமிஷனை (National Judicial Appointments Commission) உங்கள் அரசு கொண்டுவந்த போது, நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், தங்களது அதிகாரம் பாதிக்கப்படும் எனக்கூறி, இந்த சட்டத்தை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து, அதனை ரத்து செய்துவிட்டது” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *