Category: World News

மோடிக்கு  கடிதம் ஒன்று

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ரங்கநாத் பாண்டே நாளைய தினம் ஓய்வு பெறவுள்ள நிலையில், எழுதியுள்ளார் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், “நீதிபதிகள் நியமனம் செய்வதில், நீதிபதி உறவினர்களுக்குச் சலுகை, சாதி பாகுபாடுகள், பாரபட்சம் பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் நீதித்துறையில் தனது 34 வருட அனுபவத்தில், தகுதி இல்லாதவர்கள் பலர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். பூட்டிய அறைக்குள் தேநீர் அருந்திக் கொண்டே நீதிபதிகள் தேர்வு நடைபெறுகிறது. இதில், சிலருக்குச் சாதகமான முடிவுகளும், நீதிபதிகள் நியமனமும் ரகசியமாக நடைபெறுகிறது. அவர்களை […]

Read More

சீன எல்லையில் மாயமான விமானப்படை விமானத்தை தேடும் பணியில் இஸ்ரோவும், கடற்படையும் இணைந்துள்ளன.

விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 13 பேர் நேற்று முன்தினம் அசாம் மாநிலத்தில் இருந்து அருணாசல பிரதேசத்துக்கு ஏ.என்.32 ரக விமானத்தில் சென்றனர். அந்த விமானம் புறப்பட்ட 33 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் துண்டிக்கப்பட்டு சீன எல்லையோரம் திடீரென மாயமானது. இதைத்தொடர்ந்து விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. ஆனாலும் விமானம், அதில் இருந்த 13 பேரின் கதி என்ன ஆனது என்பது குறித்து தெரியவில்லை. தொடர்ந்து நேற்று 2-வது நாளாக விமானத்தை தேடும் பணி தீவிரமாக […]

Read More

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த பா.ஜனதா வேட்பாளர்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றியை தனதாக்கியது. தேர்தலில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை குஜராத் மாநில பா.ஜனதா வேட்பாளருக்கு கிடைத்துள்ளது. குஜராத் மாநிலம் நவ்சாரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.ஆர். பாட்டீல் 6 லட்சத்து 87 ஆயிரத்து 767 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியுள்ளார்.

Read More

தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதாக இன்று அதிகாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனை விட 76 ஆயிரத்து 319 வாக்குகள் அதிகம் பெற்று ரவீந்திரநாத் குமார் வென்றார்.

Read More
பா.ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பா.ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் பா.ஜனதா 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியை தக்க வைத்துள்ளது.

Read More
நாடு விட்டு நாடு தாவும் ஏவுகணைகளை அழிக்க புதிய தொழிநுட்பம்

நாடு விட்டு நாடு தாவும் ஏவுகணைகளை அழிக்க புதிய தொழிநுட்பம்

நாடு விட்டு நாடு தாவக்கூடிய அல்லது கண்டம் விட்டு கண்டம் தாவக்கூடிய ஏவுகணைகளை தாக்கி அழிப்பதற்கு புதிய தொழில்நுட்பம் ஒன்றை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. Self-Protect High Energy Laser Demonstrator (SHiELD) என அழைக்கப்படும் இம்முறைமையானது லேசர் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முதன் முறையாக அமெரிக்கா பரிசீலித்து பார்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பரிசீலிப்பானது தரையிலிருந்தும், விமானங்களிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் விமானப்படை ஆய்வுகூடத்தின் கொமாண்டர் மேஜர் ஜெனரல் வில்லியம் கூலே தெரிவித்துள்ளார்.

Read More
உலகில் முதன்முறையாக 5G சேவையை பெற்றுகொள்ளும் முதல் நகரம்

உலகில் முதன்முறையாக 5G சேவையை பெற்றுகொள்ளும் முதல் நகரம்

சீனாவின் ஷாங்காய் 5ஜி நெட்வொர்க் சேவையை பெறும் முதல் நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. உலக நாடுகளிடையே அடுத்த தலைமுறை செல்லுலார் மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவையை உருவாக்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. 5ஜி தான் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தரவிறக்கம் செய்யும் வேகம் 10 முதல் 100 மடங்குவரை அதிகமாக இருக்கும். இந்நிலையில் ஷாங்காய் நகரில் 5ஜி சிக்னல் பரப்பளவு மற்றும் பிராட் பேண்ட் ஜிகாபிட் நெட்வொர்க் உருவாக்கப்பட்டுள்ளது.

Read More
ஐ. அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலை விடுவிக்கக் கோருகிறது வடகொரியா

ஐ. அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலை விடுவிக்கக் கோருகிறது வடகொரியா

சர்வதேச தடைகளை மீறியதற்காக, ஐக்கிய அமெரிக்காவால் கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலொன்றை விடுவிக்குமாறு வடகொரியா, நேற்று (14) வலியுறுத்தியுள்ளதுடன், கப்பல் கைப்பற்றப்பட்டதை சட்டரீதியற்ற கொள்ளை எனத் தெரிவித்துள்ளது. தடைகளை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காரணங்காட்டி, இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டு ஓராண்டுக்குப் பின்னர், வடகொரியாவின் பதிவுசெய்யப்பட்ட சரக்குக் கப்பலான எம்/வி வைஸ் ஹொனெஸ்டைத் தாம் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க நீதித் திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.

Read More