Author: editor1

உலக கோப்பை கிரிக்கெட்: 34 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 7-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.

Read More

சீனாவில் வெளியாகும் ரஜினியின் ‘2.0’

சீனாவில் அடுத்த மாதம் (ஜூலை) 12-ந் தேதி 2.0 வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 2.0. இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாரானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2.0 திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ரூ.600 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு ரூ.800 கோடி வரை வசூலித்ததாக கூறப்பட்டது.

Read More

சீன எல்லையில் மாயமான விமானப்படை விமானத்தை தேடும் பணியில் இஸ்ரோவும், கடற்படையும் இணைந்துள்ளன.

விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 13 பேர் நேற்று முன்தினம் அசாம் மாநிலத்தில் இருந்து அருணாசல பிரதேசத்துக்கு ஏ.என்.32 ரக விமானத்தில் சென்றனர். அந்த விமானம் புறப்பட்ட 33 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் துண்டிக்கப்பட்டு சீன எல்லையோரம் திடீரென மாயமானது. இதைத்தொடர்ந்து விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. ஆனாலும் விமானம், அதில் இருந்த 13 பேரின் கதி என்ன ஆனது என்பது குறித்து தெரியவில்லை. தொடர்ந்து நேற்று 2-வது நாளாக விமானத்தை தேடும் பணி தீவிரமாக […]

Read More

அம்பாறை காடி தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு புதிய பணிப்பாளர்; நியமனம்

அம்பாறை காடி தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு புதிய பணிப்பாளராக களுதாவளையினைச் சேர்ந்த சதாசிவம்.தியாகராசா பொதுச் சேவை ஆணைக்குழவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

‘‘இந்தியன்–2 படத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவேன்’’நடிகர் கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் ‘டூவண்டி 20 கிழக்கம்பாலம்’ என்ற அமைப்பு சார்பில் ஏழைகளுக்கு 300 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த வீடுகளை ஏழைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு வீட்டின் சாவிகளை ஏழை மக்களிடம் ஒப்படைத்தார். பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

Read More

குளக்கட்டு விரைவில் திருத்தப்பட வேண்டும்

திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் தாமரைக்கேணி குளக்கட்டு விரைவில் திருத்தப்பட வேண்டும். – முன்னாள் பா.உ. சந்திரநேரு சந்திரகாந்தன் அம்பாரை மாவட்டத்தின், திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் தாமரைக்கேணி குளத்தின் குளக்கட்டு உடைந்துள்ளபோதும் , இன்று வரை இது குறித்து எந்த அரச அதிகாரிகளோ நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் விசனம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதிக்கிடையில் விசேட சந்திப்பு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர அவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் மட்டக்களப்பு இராணுவக் கட்டளைத் தளபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுபினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன் உட்பட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

Read More

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த பா.ஜனதா வேட்பாளர்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றியை தனதாக்கியது. தேர்தலில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை குஜராத் மாநில பா.ஜனதா வேட்பாளருக்கு கிடைத்துள்ளது. குஜராத் மாநிலம் நவ்சாரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.ஆர். பாட்டீல் 6 லட்சத்து 87 ஆயிரத்து 767 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியுள்ளார்.

Read More

தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதாக இன்று அதிகாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனை விட 76 ஆயிரத்து 319 வாக்குகள் அதிகம் பெற்று ரவீந்திரநாத் குமார் வென்றார்.

Read More
பா.ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பா.ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் பா.ஜனதா 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியை தக்க வைத்துள்ளது.

Read More