அணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது - ஹசன் ரவ்ஹானி

வணிகராக உள்ள ஒருவர் சர்வதேச விவகாரங்களுக்கு தீர்ப்பு சொல்வதா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கடுமையாக சாடியுள்ளார். ஈரானுடன் அமெரிக்க, சீனா, பிரான்ஸ்,உள்ளிட்ட நாடுகள் செய்து கொண்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் குறை இருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்துள்ள ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் ஏன் அமெரிக்க கையெழுத்திட்டது என வினவியுள்ளார். சட்டம், அரசியல் தொடர்பான பின்புலம் இல்லாதவர் டிரம்ப் என கூறிய ரவ்ஹானி வணிகர், ஒப்பந்ததாரர், குடியிருப்பு கட்டுபவரான டிரம்பால் எப்படி சர்வதேச விவகாரங்களில் தீர்ப்பு கோர முடியும் என்று குற்றம் சாட்டினார்.