போர்த்துக்கல், ஸ்பெயினில் காட்டுத் தீ: 38 பேர் பலி

மத்திய மற்றும் வடக்கு போர்த்துக்கலில் வேகமாக பரவிவரும் காட்டுத் தீயில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான ஸ்பெயினிலும் வார இறுதியில் ஏற்பட்ட தீயில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒரு சூடான உலர் கோடை காலத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த காட்டுத் தீயை கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான தீயணைப்பு விரர்கள் போராடி வருகின்றனர்.

இவ்வாறு 145 க்கும் அதிகமான இடங்களில் காட்டுத் தீ பரவியுள்ளது. போர்த்துக்கலில் 50 க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதோடு ஒரு மாத சிசு உட்பட பலரும் காணாமல்போயுள்ளனர். ஸ்பெயினில் இருவரின் சடலங்கள் கார் வண்டியில் கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த தீயானது மணிக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் ஸ்பெயினின் வட கடலோரம் நோக்கி செல்லும் ஒபீலியா சூறாவளியால் வேகமுடன் பரவுகிறது.