விசாரணைக்கு வருகிறது ஜெய­ல­லிதா . மீதான மேன்முறையீடு

ஜெய­ல­லிதா மீதான சொத்­துக்­கு­விப்பு வழக்கில், கர்­நா­டக அரசு தாக்கல் செய்­துள்ள மேன்­மு­றை­யீட்டு மீது எதிர்­வரும் 27ஆம் திகதி விசா­ரணை நடத்­தப்­படும் என உச்ச நீதி­மன்றம் அறி­வித்­துள்­ளது.
சொத்­துக்­கு­விப்பு வழக்கில் இருந்து தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா, அவ­ரது தோழி சசி­கலா உள்­ளிட்ட 4 பேரை கர்­நா­டக உயர் நீதி­மன்ற நீதி­பதி குமா­ர­சாமி விடு­தலை செய்து உத்­த­ர­விட்டார்.

நீதி­பதி குமா­ர­சா­மியின் உத்­த­ரவில் கணக்­குப்­பிழை இருப்­ப­தாக குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­தன. இதை­ய­டுத்து அந்த தீர்ப்பை எதிர்த்து கர்­நா­டக அரசு உச்ச நீதி­மன்­றத்தில் மேன்­மு­றை­யீடு செய்­தது. ஆனால், அந்த மனுவில் 10 குறை­பா­டுகள் இருந்­ததை உச்ச நீதி­மன்றம் சுட்­டிக்­காட்­டி­யதை அடுத்து, கர்­நா­டக அரசு திருத்­தப்­பட்ட புதிய மேன்­மு­றை­யீட்டு மனுவை கடந்த 11ஆம் திகதி உச்ச நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­தது.
இதேபோல், தி.மு.க. சார்பில் அக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அன்­ப­ழ­கனும் மேன்­மு­றை­யீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் இருந்த 9 குறை­பா­டு­களை உச்ச நீதி­மன்றம் சுட்­டிக்­காட்­டி­யது. இதை­ய­டுத்து, திருத்­தப்­பட்ட மேல்­மு­றை­யீட்டு மனுவை கடந்த 16ஆம் திகதி அன்­ப­ழகன் தாக்கல் செய்தார்.

இந்­நி­லையில், ஜெய­ல­லிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், கர்­நா­டக அரசு தாக்கல் செய்­துள்ள மேன்முறையீட்டு மனுமீதான விசாரணை, எதிர்வரும் 27ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.