ஈராக்­கிய சந்தை கார் குண்டுத் தாக்­கு­தலில் பலி­யா­ன­­வர்கள் தொகை 120 ஆக உயர்வு

ஈராக்கில் சன­சந்­த­டி­மிக்க சந்­தை­யொன்றை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட கார் குண்டுத் தாக்கு­ தலில் பலி­யா­ன­வர்கள் தொகை 120 ஆக உயர்ந்­துள்­ளது.

தலை­நகர் பக்­தாத்தின் வடக்­கே­யுள்ள கான் பானி சாத் நக­ரி­லேயே இந்தத் தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது. பலி­யா­ன­வர்­களில் பல சிறு­வர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இந்தத் தாக்­கு­த­லுக்கு ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் உரிமை கோரி­யுள்­ளனர்.

மேற்­படி தாக்­கு­த­லுக்கு 3 தொன் நிறை­யு­டைய வெடி­பொ­ருட் கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தீவி­ர­வா­திகள் தம்மால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ளனர்.

இது ஈராக் கடந்த 10 வருட காலப் பகுதியில் சந்தித்த மிக மோசமான குண்டுத் தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தத் தாக்­கு­தலில் காய­ம­டைந்­த­வர்கள் பலரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மா­க­வுள்­ளதால் இறந்­த­வர்கள் தொகை மேலும் அதி­க­ரிக்கும் அபா­ய­முள்­ள­தாக பிராந்­திய அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.
இந்தத் தாக்­கு­த­லை­யொட்டி அந்தப் பிராந்­தி­யத்தில் 3 நாள் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.