கூகுளை மிஞ்சிய மைக்ரோசாப்ட்டின் புதிய அப்ளிகேஷன்…!

கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பில் ஜாம்பவானாக திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய மொழிபெயர்ப்பு அப்ளிகேஷனை வெளியி்ட்டுள்ளது.

தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் டிரான்ஸ்லேட்டர் 27 மொழிகளை மட்டுமே மொழிபெயர்ப்பு செய்யும் நிலையில், மைக்ரோசாப்ட்டின் புதிய அப்ளிகேஷன் 50 விதமான மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யும் திறன் வாய்ந்ததாகும்.
இந்த அப்ளிகேஷனை பல்வேறு விதமான கருவிகளிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் டிரான்ஸ்லேட்டர் என அழைக்கப்படும் இந்த ஆப், விண்டோஸ் மட்டுமின்றி ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கருவிகளிலும் இயங்கும் ஆற்றலுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, ஸ்மார்ட் வாட்ச்களிலும் இது இயங்கும். மொழிபெயர்ப்பு மட்டுமின்றி வாய்ஸ் கன்வெர்ஷன் வசதியும் இதில் உள்ளது. டிரான்ஸ்லேட் செய்யப்பட்ட சொற்களை வேறு அப்ளிகேஷனுக்கு காப்பி, பேஸ்ட் செய்து கொள்ளவும் முடியும்.
இந்த புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியதன் வாயிலாக நீண்ட நாட்களாக டிரான்ஸ்லேட்டர் சேவையை வழங்கி வரும் கூகுளின் எல்லைக்குள் மைக்ரோசாப்ட் நுழைந்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகின்றனர்.