பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை: இணையதளத்தில் அதிகரிப்பு

பயன்படுத்தப்பட்ட கார்களை இணையதளம் மூலம் விற்கும் போக்கு இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது.

இவ்வகை வணிகம் அடுத்த ஓராண்டில் 20 சதவிகிதம் வரை வளர்ச்சி காண வாய்ப்புள்ளதாக இத்துறை நிபுணர்கள் கணித்துள்ளனர். தற்போது இணையதளம் மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்கப்பட்டு வருவதாக இவ்வணிகத்தில் ஈடுபட்டு வரும் கார் டிரேடு டாட் காம் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா ஆகிய 5 நகரங்களில்தான் இவ்வகை கார்கள் அதிகளவில் விற்கப்படுவதாகவும் அந்நிறுவனம் கூறியிருக்கிறது