அவுஸ்ரேலிய மண்ணில் 71 வருடங்களின் பின்னர் சாதனை படைத்தது இந்தியா!

இந்தியா – அஸ்ரேலியாவிற்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி மழை காரணமாக தடைபட்டுள்ளதால், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதன் காரணமாக குறித்த டெஸ்ட் தொடரை இந்தியா அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.

கடந்த 96 ஆம் ஆண்டில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணி ஒரு முறை கூட தொடரை கைப்பற்றவில்லை.

இந்நிலையில் 2018/19 ஆம் ஆண்டுக்கான குறித்த தொடரை விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

மேலும் இதுவரை நடைபெற்ற 14 Border-Gavaskar கிண்ணத் தொடரில் இந்திய அணி 8 முறையும் அவுஸ்திரேலிய அணி 6 முறையும் வெற்றிகொண்டுள்ளதுடன் ஒரு தொடர் சமநிலையில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.