கிரிக்கெட் செயற்பாட்டு அதிகாரியாக அசங்க

இலங்கை கிரிக்கட்டின் பிரதான கிரிக்கெட் செயற்பாட்டு அதிகாரியாக அசங்க குருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் உயர் திறன் பிரிவின் தலைமை அதிகாரியாக இதுவரை கடமையாற்றிய சைமன் வில்ஸ் பதவி விலக மேற்கொண்டுள்ள தீர்மானத்தையடுத்தே அசங்க குருசிங்கவின் இந் நியமனத்துக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.