ஈச்சந்தீவு உதயசூரியன் முதலாமிடம்.

மண்முனை மேற்கு பிரதேசத்தில் இவ்வருடத்திற்கான இருபாலாருக்குமான எல்லே போட்டியில் ஈச்சந்தீவு உதயசூரியன் முதலாமிடம்.

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள், மண்முனை மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றன.

கடந்த சனிக்கிழமை(21.04.2018) ஈச்சந்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற எல்லே சுற்றுப்போட்டியில் நாவற்காடு பாரத் இளைஞர் கழகத்தை வீழ்த்தி ஈச்சந்தீவு உதயசூரியன் வெற்றி பெற்றது.

நாணய சூழற்சியில் வெற்றிபெற்ற உதயசூரியன் இளைஞர்கழம் முதலில் ஆட்டத்தை தொடர்ந்து 30 பந்துகளுக்கு 10 வீரர்களை இழந்து 17 ஓட்டங்களை பெற்று நாவற்காடு பாரத் இளைஞர் கழக அணிக்கு சவால்மிக்க இலக்கை நிர்ணயித்தது.

பதிலுக்கு ஆட்டத்தை தொடர்ந்த பாரத் இளைஞர் கழகம் 07 வீரர்களை இழந்து 08 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இவ் வருடம் பெற்றுக்கொண்ட வெற்றியைத் தொடர்ந்து ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகம் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் மண்முனை மேற்கு பிரதேசத்தில் எல்லே விளையாட்டில் வெற்றியை பதிவு செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவ் வருட பெண்களுக்கான எல்லே போட்டியிலும் ஈச்சந்தீவு உதயசூரியன் மகளீர் இளைஞர் கழக அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

உதயசூரியன் மகளீர் இளைஞர் கழக அணியுடன் பலப்பரீட்சை நடத்திய நாவற்காடு பாரத் இளைஞர் கழக மகளிர் அணி முதலில் ஆட்டத்தை தொடர்ந்தது.

30 பந்துகளுக்கு 09 வீரர்களை இழந்து 03 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு ஆட்டத்தை தொடர்ந்த உதயசூரியன் மகளீர் அணி 09 பந்துகளுக்கு 02 வீரர்களை மாத்திரமிழந்து 04 ஓட்டங்களை பெற்று வெற்றியை பதிவு செய்தது.