சிறந்த வீரர் விருது முகமது சாலா

இங்கிலாந்தில் நடைபெறும் பிரிமியர் லீக் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் 2017-18ம் ஆண்டுக்கான சிறந்த வீரராக, லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா (25 வயது) தேர்வு செய்யப்பட்டார். தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்க உறுப்பினர்கள் வாக்களித்து விருதுக்கான வீரர்களை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. எகிப்து நாட்டை சேர்ந்தவரான சாலா 33 லீக் ஆட்டங்களில் 33 கோல் அடித்துள்ளார்.