4 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்

டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 4 ரன்வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற டேர்டெவில்ஸ் அணி முதலில் பந்துவீசியது. பஞ்சாப் அணியில் கிறிஸ் கேலுக்கு ஓய்வளிக்கப்பட்டது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். பிஞ்ச் 2 ரன் மட்டுமே எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஷ்ரேயாஸ் வசம் பிடிபட்டார்.

ராகுல் 23 ரன் (15 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), அகர்வால் 21 ரன் எடுத்து (16 பந்து, 3 பவுண்டரி) பிளங்க்கெட் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். யுவராஜ் 17 பந்தில் 14 ரன், கருண் நாயர் 34 ரன் (32 பந்து, 4 பவுண்டரி), டேவிட் மில்லர் 26 ரன் (19 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அஷ்வின் 6 ரன், டை 3 ரன் எடுத்து டிரென்ட் போல்ட் வீசிய கடைசி ஓவரில் ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன் குவித்தது.