உச்சம் தொட்டது தென்னாபிரிக்கா

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில், தென்னாபிரிக்கா அணி முதலிடத்திற்குமுன்னேறியுள்ளது.

ஏற்கனவே முதலிடத்தில் இருந்த இந்திய அணியை தசம புள்ளிகள் அடிப்டையில் பின்தள்ளிதென்னாபிரிக்கா முதலிடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் இரண்டு போட்டிகளையும் வெற்றிகொண்டதன் பின்னரே தென்னாபிரிக்கா இவ்வாறு முன்னேற்றம் கண்டுள்ளது.

தற்போது தென்னாபிரிக்காவும், இந்தியாவும் 120 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களை பகிர்ந்துள்ளது.

மூன்றாம், நான்காம் இடத்தில் 114 புள்ளிகளுடன் அவுஸ்ரேலியாவும் இங்கிலாந்தும் உள்ளன.

ஐந்தாம் இடத்தில் 111 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியும், 98 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி ஆறாம் இடத்திலும், பங்களாதேஷ் 92 புள்ளிகளுடன் ஏழாம் இடத்திலும், 84 புள்ளிகளுடன்இலங்கை எட்டாம் இடத்திலும் உள்ளன.

ஒன்பதாம் இடத்தில் 77 புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகள் அணியும், ஆப்கானிஸ்தான் 54 புள்ளிகளுடன் 10வது இடத்திலும், சிம்பாப்வே 52 புள்ளிகளுடன் 11வது இடத்திலும், 41புள்ளிகளுடன் அயர்லாந்து 12வது இடத்திலும் உள்ளன.