சேர்.விவியன் ரிச்சட்ஸின் சாதனையை தகர்த்தெறிந்த பாபர் அஸாம்

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் அஸாம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.21 இன்னிங்ஸ்களில் 1000 ஒருநாள் ஓட்டங்கள் பெற்றவரான விவ் ரிச்சர்ட்ஸ் உலக சாதனையை ஏற்கனவே சமப்படுத்தியிருந்த பாபர் அசாம், இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்துள்ளார்.

மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம்புகுந்து, 19 இன்னிங்ஸ்களில் வேகமாக 1000 ஓட்டங்கள்பெற்றவர் எனும் சாதனையை விவ் ரிச்சர்ட்ஸ் இதுவரை தன்வசம் வைத்திருந்தார்.

இந்த சாதனையை பாபர் அசாம் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் சாதமடித்ததன் மூலம் கடந்துள்ளார், வெறுமனே 16 இன்னிங்ஸ்களில் பாபர் அசாம் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு தனது 33 வது இன்னிங்சில் 7 வது ஒருநாள் சதத்தை பதிவு செய்துள்ளமையும்கவனிக்கத்தக்கது.இதேவேளை இலங்கை அணியின் தலைவர் டெஸ்ட் விளையாடும் 9 அணிகளுடன் ஒரு நாள் போட்டியில் சதம் பெற்றுள்ளார்.இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 சதமும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 3 சதமும் இந்தியா,சிம்பாப்வே ஆகிய அணிக்கு எதிராக தலா இரு சதமும் அவுஸ்திரேலியா,நியூசிலாந்து,பாகிஸ்தான் ,மேற்கிந்தியதீவு மற்றும் தென்னாபிரிக்க அணிக்களுக்கு இடையில் ஒரு சதமுமாக மொத்தமாக 15 சதங்கள் குவித்துள்ளார்.உபுல் தரங்க அணிக்கு தலைமை தாங்கி ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இறுது வரை ஆட்டமிழக்காமல் நின்ற முதல் இலங்கையர் மற்றும் தலைவர்.பாகிஸ்தானுடனான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம்முதல் ஆறு துடுப்பாட்ட வீரர்களின் மோசமான செயல்பாடு தான் என பயிற்சியாளர் நிக் போத்தாஸ் கூறியுள்ளார்.இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டம் துபாயில் நடைபெற்ற நிலையில் இலங்கை அணி 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

தோல்விக்கு பின்னர் பேசிய இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போதஸ், வெற்றிக்கான சரியானபார்முலாவை கண்டுப்பிடிக்க முயன்று வருகிறோம். உலக கிண்ண போட்டிகள் விரைவில் வரவுள்ளது. அதற்குள் இதை செய்யவேண்டியது அவசியமாகும்.

இலங்கை அணியின் முதல் ஆறு துடுப்பாட்ட வீரர்களிடம் அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள்சோபிக்கவில்லை.வெறும் 96 ஓட்டங்கள் மட்டுமே நேற்றைய போட்டியில் ஆறு பேரும் சேர்ந்து எடுத்தார்கள், இது போதாது.இந்த வருடம் இலங்கை அணி விளையாடிய 22 ஒருநாள் போட்டிகளில் வெறும் நான்கில் மட்டுமேவெற்றி பெற்றுள்ளது. இதற்கு அணியினரிடையே தன்னம்பிக்கை குறைவாக உள்ளதே காரணம் என்பேன்.வீரர்களிடையே தன்னம்பிக்கையை ஊக்குவிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம், இலங்கைபந்துவீச்சாளர்களும் அணிக்கு ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என ஏற்கனவே கூறியுள்ளேன்.

அதற்கேற்றார் போல இலங்கை 132 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை இழந்தபோது அகில தனஞ்சய மற்றும் ஜெப்ரி வண்டர்சே எட்டாவது விக்கெட்டுக்கு 68 ஓட்டங்கள் எடுத்து

அணியின் ஸ்கோர் உயர உதவினார்கள் என போத்தாஸ் கூறியுள்ளார்.