10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தார் தில்ஷான்

ஒருநாள் போட்­டியில் 10 ஆயிரம் ஓட்
டங்­களைக் கடந்து இலங்கை வீரர் தில்ஷான்
புதிய சாதனை நிகழ்த்­தி­யுள்ளார். இந்த சாத­
னையை எட்­டிய 11ஆவது வீரர் இவர் ஆவார்.
இலங்கை–- பாகிஸ்தான் அணிகள் மோதும் 5ஆவது ஒருநாள் போட்­டியில் இலங்கை வீரர் தில்ஷான் 55 ஓட்­டங்கள் எட்­டிய போது ஒருநாள் போட்­டியில் 10
ஆயிரம் ஓட்­டங்­களைக் கடந்தார். இலங் கை வீரர்­களில் சனத் ஜய­சூ­ரிய, மஹேல, சங்­கக்­கார ஆகி­யோ­ருக்கு பிறகு இந்த மைல்­கல்லை எட்­டிய வீரர் இவராவார்.

தற்­போது 39 வயதை நெருங்கிக் கொண்­
டி­ருக்கும் தில்ஷான் 318 ஒருநாள் சர்­வ­தேச போட்டி­களில் விளை­யாடி 293ஆவது இன்­னிங்ஸில் 10 ஆயிரம் ஓட்­டங்­களை பெற்­றுள் ளார். அந்த வகையில் இலங்கை வீரர்­களில் மிக விரை­வாக 10 ஆயிரம் ஓட்­டங்­களைக் கடந்த வீரர் இவர்தான். சர்­வ­தேச அள வில் லாரா 289 இன்­னிங்ஸ்­களில் 10 ஆயிரம் ஓட்­டங்­களை பெற்றுள்ளார். அதற்கு பிறகு தில்­ஷான் தான் இத்தகைய சாத
னையை ஏற்படுத்தி யுள்ளார்.