மோதல் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளக்கம்

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இடைநடுவில் எல்லைக் கோட்டுக்கு உள்ளே கல் ஒன்று எறியப்பட்டதன் பின் ஏற்பட்ட பிரச்சினையால் போட்டி கைவிடப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீரர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு போட்டியை இடைநிறுத்த நடவடிக்கை இரசிகர்கள் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை அடுத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக நேற்றைய மோதல் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் பிரகாஸ் பாஸ்டர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் குறிப்பிட்டார்.

மோதல் இடம்பெற்ற பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மோதலை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது