இணையத்தளங்களை பயன்படுத்துவோர் அவதானத்துடன் இருக்குமாறு இலங்கையின் கணனி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரன்சம்வெயா (ransomware) என்று அறியப்படுகின்ற கணனி வைரஸின் பரவல் காரணமாக கணனிகளின் இயக்கம் பாதிக்கப்படலாம் என்பதனால் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக அதன் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்றைய தினம் (15) குறித்த வைரஸ் தாக்குதலொன்று இடம்பெறுவதற்கான அபாயம் இருப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பில் ஜாம்பவானாக திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய மொழிபெயர்ப்பு அப்ளிகேஷனை வெளியி்ட்டுள்ளது.

தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் டிரான்ஸ்லேட்டர் 27 மொழிகளை மட்டுமே மொழிபெயர்ப்பு செய்யும் நிலையில், மைக்ரோசாப்ட்டின் புதிய அப்ளிகேஷன் 50 விதமான மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யும் திறன் வாய்ந்ததாகும்.
இந்த அப்ளிகேஷனை பல்வேறு விதமான கருவிகளிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் டிரான்ஸ்லேட்டர் என அழைக்கப்படும் இந்த ஆப், விண்டோஸ் மட்டுமின்றி ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கருவிகளிலும் இயங்கும் ஆற்றலுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

நாம் வசிக்கும் பூமியை ஒத்த மற்றுமொரு கிரகத்தை, கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை காலமும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் இதுவே, பூமியை மிகவும் ஒத்த விதத்தில் அமைந்துள்ளது என்று நாசா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சற்று குளிர்ச்சியான, அளவில் பெரிதற்ற, புறத்தோற்றத்தில் நீரைக் கொண்டமைந்துள்ளது மாத்திரமன்றி உயிரினங்கள் வாழக்கூடிய அனைத்து சூழலையும் இந்த கிரகம் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த கிரகத்துக்கு ஏர்த் 2.0 (Earth 2.0) என நாசா நிநுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜோன் க்ரண்ட்பெல் பெயர் சூட்டியுள்ளார்.

அபா­ய­க­ர­மான தொண்டைப் புற்­று­நோயை முன்­கூட்­டியே இனங்­காணக் கூடிய கடற்­பஞ்சு வடி­வான விழுங்கக் கூடிய புரட்­சி­கர உப­க­ர­ண­மொன்றை பிரித்­தா­னிய விஞ்­ஞா­னிகள் வடி­வ­மைத்­துள்­ளனர்.
கேம்­பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­களால் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள 'பிறில்லோ பட்' என அழைக்­கப்­படும் இந்த உப­க­ரணம் 5 நிமிட நேரத்தில் உண­வுக்­கு­ழா­யி­லுள்ள அரை மில்­லியன் கலங்­களை ஆய்­வுக்­குட்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாகும். இந்த உப­க­ர­ணத்தை பயன்­ப­டுத்தி புற்­று­நோயை முன்­கூட்­டியே கண்­ட­றிந்து அதி­லி­ருந்து விடு­த­லை ­பெறலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

'இயற்கையின் இரகசியம்' என்பதை கொண்டு நாம் அனைவரும் எமது இயற்கை அழகை மெருகேற்றிக் கொள்ள விரும்புவது வழமை. அந்த வகையில் இலங்கையில் முழுமையாக தயாரிக்கப்படும் இயற்கை அழகுசாதன தயாரிப்பு நாமமான நேச்சர்ஸ் சீக்ரட் நாமத்தின் உரிமையை கொண்டுள்ள புகழ்பெற்ற நிறுவனமான நேச்சர்ஸ் பியுட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான சமந்த குமாரசிங்ஹ அவர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைந்திருந்தது.

இணைய பயனர்கள் அவதானம்; வைரஸ் இவ்வாறுதான் தாக்குகிறது
19.10.2017
இணையத்தளங்களை பயன்படுத்துவோர் அவதானத்துடன்...
கூகுளை மிஞ்சிய மைக்ரோசாப்ட்டின் புதிய அப்ளிகேஷன்…!
12.08.2015
கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பில் ஜாம்பவானாக...
2ஆம் உலகம் கண்டுபிடிப்பு.
24.07.2015
நாம் வசிக்கும் பூமியை ஒத்த மற்றுமொரு கிரகத்தை,...
அபாயகரமான தொண்டைப் புற்றுநோயை இனங்கண்டறிய உதவும் உபகரணம் பிரித்தானிய விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு .
22.07.2015
அபா­ய­க­ர­மான தொண்டைப் புற்­று­நோயை முன்­கூட்­...
மூலிகைக்கு மவுசு அதிகம்: சமந்த குமாரசிங்ஹ
21.06.2015
'இயற்கையின் இரகசியம்' என்பதை கொண்டு நாம் அனைவரும்...

தொழில்நுட்பம்

29.03.2012
பால் அதிகம் பருகுவதால் பார்வைக்கு பலம் அதிகரிக்கும் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள பவலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி மில்லன் என்பவர் தலைமையில் வயது தொடர்பான பார்வை குறைபாடு(ஏ.எம்.டி) பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக பெண்கள் தான் அதிகமாக பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. பெரும்பாலும் 50 வயதினை நெருங்கும் பெண்களை பாதிக்கும் இக்குறைபாடு, சாதாரணமாக...
29.03.2012
இணையத் தொடர்புக்குப் பயன்படுத்த பல உலாவிகள் நமக்குக் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான திறனுடனோ, வசதிகளுடனோ அமைக்கப்படுவதில்லை. சில வேகமாக இயங்கும், பல உலாவிகள் தரும் வசதிகள் எண்ணற்றவையாக இருக்கும். 1. கூகுள் குரோம் பதிப்பு 17: மொத்தத்தில் முதல் இடம் பிடித்துள்ள உலாவி. இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவை முடங்கிப் போனால் உலாவியின் இயக்கத்திறனை நிறுத்தாமல் அவற்றை மட்டும் மூடும்...
29.03.2012
மின்னஞ்சல் பயன்படுத்துவோர் அனைவரையும் வசியப்படுத்தி வைத்திருப்பது ஜிமெயில். அடிக்கடி தரப்படும் புதிய வசதிகள், அதிக அளவிலான ஸ்டோரேஜ், அனுப்பும் பைல்களின் அதிகப்படியான கொள்ளளவு என அனைத்து பிரிவுகளிலும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களின் அடிப்படையில் புதிய வசதிகளை வடிவமைத்துத் தருவது இதன் சிறப்பு. ஒருமுறை மட்டுமே கூடப் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகளை ஜிமெயில் தன் நினைவகத்தில் வைத்துக் கொண்டு,...
25.03.2012
பயணத்தை இலகுவாக்குவதற்கு உருவாக்கப்பட்டுள்ள சாதனங்கள் பொதுவாக முன் நோக்கியும், பின் நோக்கியும் நகரக்கூடியவாறு அமைக்கப்படும். ஆனால் தற்போது எல்லாத்திசைகளிலும் நகரக்கூடியவாறான இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. தனிநபர் ஒருவர் பயணம் செய்யக்கூடிய இந்த சாதனத்தை கொயோற்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கோமோறி மசாஹாறு என்பவர் அமைத்துள்ளார். இச்சாதனத்தில் விசேடமாக இயங்கக்கூடிய இரண்டு வகையான சில்லுகள்...
25.03.2012
மனித உடம்பில் ரத்தமானது சக்தி கடத்து பொருளாக செயல்படுகிறது. ரத்தம் ஆக்சிஜனை மூளைக்கும், இதயத்திற்கும் அனுப்புவதோடு மட்டுமல்லாமல் மனித நடமாட்டத்திற்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது. ரத்தம் சுத்தமானதாக இருந்தால் தான் நம்மால் ஆரோக்கியமாக நடமாட முடியும். அசுத்தக் கலப்பில்லாமல் ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களிலேயே உள்ளது. எலுமிச்சை: ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை...
24.03.2012
நீர்நிலைகளின் மேலே மிதக்கக்கூடியவாறு தரையிறக்கும் வண்ணம் புதிய இயந்திரம் ஒன்றை அரிசோனா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். ஆறு அடி நீளமான இந்த இயந்திரம் சுமார் 68 கிலோ கிராம் நிறையை உடையது. இந்த இயந்திரத்தில் விசேட கமெரா ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இக்கமெரா மூலம் நீர்நிலையின் 328 அடி ஆழத்தில் உள்ள பொருட்களை படம்பிடிக்க முடியும். இதுபற்றி கருத்துத் தெரிவித்த மாணவர்கள் இந்த இயந்திரத்தை...
24.03.2012
தினந்தோறும் சிறிதளவு ஆஸ்பிரினை உட்கொள்வதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும் என்பதுடன், பெரும்பாலும் குணப்படுத்தவும் கூட முடியும் என புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த முடிவுகள் மருத்துவ நாளிதழான “த லான்சட் இல்” வெளியாகி உள்ளது. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்காக பலர் தினந்தோறும் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது. ஆனால் இந்த மருந்து புற்றுநோயையும் அதனால் ஏற்படக்கூடிய...
24.03.2012
உலகின் முதல் தர தேடல் பொறியாக கூகுள் இருப்பதற்கு காரணம் இதன் இலகு வடிவமைப்பும், வேகமும் ஆகும். கூகுள் தயாரிப்புக்கள் என்றாலே அதில் எளிமை வேகம் இருப்பது நிச்சயம். அது குரோமிலும் கிடைக்கின்றது. உலாவியைத் திறந்ததும் அட்ரஸ் பார் மட்டுமே தெரியும். டூல்பார் மெனுக்கள் போன்றவை இல்லாத வடிவமைப்பு குரோமின் முதல் சிறப்பாகும். அடுத்த சிறப்பு இதன் தொடக்க வேகம். டெஸ்க்டாப்பில் குரோம் ஐகானை அழுத்திய மறு விநாடி...
23.03.2012
தற்போது உள்ள கமெராக்கள் மூலம் நேரடியாக காணப்படும் உருவங்கள் அல்லது பொருட்களை மட்டுமே புகைப்படம் எடுக்க முடியும். மறைவாக உள்ள பொருட்களை எடுக்க முடியாது. காரணம் அப்பொருட்களில் இருந்து பட்டுத்தெறிக்கும் ஔிக்கதிர்கள் கமெராவை வந்து அடைவதில்லை. இதனால் பொருள் கமெராவிற்கு புலப்படாது. எனினும் தற்போது இக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக MIT ஆராய்ச்சியாளர்களால் அதி நவீன கமெரா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...
23.03.2012
இணையத்தில் உலாவுகையில் மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதன் மூலம் ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத மின்னஞ்சல்களை தவிர்க்கலாம். ஆனால் இணையத்தில் உலாவும் போது ஏதாவது ஒரு காரணத்திற்காக மின்னஞ்சல் முகவரியை சம்ர்பிப்பது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. இது போன்ற நேரங்களில் தயக்கமில்லாமல் பயன்படுத்துவதற்காக என்றே தற்காலிக மின்னஞ்சல்...