பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சுற்றுசூழலுக்கு சவாலாக விளங்கும் பிளாஸ்டிக்கை அழிக்க முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்நிலையில் விஞ்ஞானிகளின் தற்செயல் கண்டுபிடிப்பு இவ்விகாரத்தில் தீர்வை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஜப்பானில் உள்ள பெட்பாட்டில் மறுசுழற்சி ஆலையில் பிரிட்டனின் Portsmouth பல்கலைகழகமும், அமெரிக்காவின் தேசிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையினரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் பகுதி அருகே கழிவறை இல்லாததால் இளம்பெண் ஒருவர் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார். பலமுறை கோரிக்கை வைத்தும் புகுந்த வீட்டார் கழிவறை கட்டாததால் இளம்பெண் இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளார். கணவன் வீட்டில் இருந்து வெளியேறிய பெண் தற்போது தனது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார்.

பானாசோனிக் நிறுவனம் அதன் புதிய பி தொடர் வரிசையில் 18:9 திரை கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன் இன்று முதல் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர் வழியாக கிடைக்கும். இந்த கைப்பேசி ரூ.6,999 விலையில் கிடைக்கும். இந்த புதிய பானாசோனிக் ஸ்மார்ட்போனுடன் சிறப்பு சலுகையாக புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு 60ஜிபி டேடாவை ஐடியா வழங்குகிறது. மேலும் ரூ.199க்கு ரீசார்ஜ் செய்தார், கூடுதலாக 28 நாட்களுக்கு 10ஜிபி டேடா சலுகை வழங்கப்படுகிறது. மேலும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, அங்கு உயிர்கள் வாழ தகுந்த சூழல் நிலவுகிறதா என இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் ஆய்வு நடத்தி வருகின்றன. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாய் கிரகத்தில் உலவி வரும் கியூரியாசிட்டி ரோவர் 2 ஆயிரம் நாட்களை நிறைவு செய்துள்ளது.

சர்வதேச அளவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கான எழுது பொருட்களின் சேகரிப்புக்காக அமீரக செஞ்சிலுவை சங்கம் ஆதரவுடன் பென்சில் மனிதர் எனப்படும் வெங்கட் உதவியுடன் தமிழ் 89.4 பண்பலை சாதனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ் ரேடியோ தொகுப்பாளர் நிம்மி என்ற நிர்மல் 89.4 மணிநேரம் 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பண்பலை நிகழ்ச்சி செய்து சாதனை படைத்தார்.

பிளாஸ்டிக் என்னும் எமனை செரிக்கும் புதிய என்சைம் : விஞ்ஞானிகளின் தற்செயலான கண்டுபிடிப்பால் வியப்பு
24.04.2018
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய...
கழிவறை இல்லாததால் இளம்பெண் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார்
24.04.2018
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் பகுதி...
18:9 திரை கொண்ட பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன்
24.04.2018
பானாசோனிக் நிறுவனம் அதன் புதிய பி தொடர் வரிசையில்...
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்
24.04.2018
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரோபோ...
3 நாட்களுக்கு மேல் நிகழ்ச்சி நடத்தி சாதனை படைத்த தமிழ் வானொலி தொகுப்பாளர்
24.04.2018
சர்வதேச அளவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கான...

தொழில்நுட்பம்

07.04.2012
புகைப்படங்களை எடிட்டிங் செய்யும் வசதியையும், தரவேற்றும் வசதியையும் Flickr வழங்கி கொண்டிருக்கிறது. மேலும் இதன் முன்னைய அப்பிளிக்கேசன் ஆன PikNikஐ நீக்கிவிட்டு Aviary எனும் புதிய அப்பிளிக்கேசனுடனான வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 19ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் இப்புதிய அப்பிளிக்கேசன் இணைய மொழிகளில் ஒன்றான HTML 5ல் இயங்கவல்லது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த...
07.04.2012
வீடியோ தரவிறக்கம், தரவேற்றம் என்பனவற்றில் முதன்மையாக விளங்கும் Youtube தளமானது அதி உயர் பிரிதிறன் கொண்ட முப்பரிமாண வீடியோக்களை பார்வையிடும் வசதியை உருவாக்கியுள்ளது. இத்தளத்தில் கடந்த மூன்று வருடங்களாக முப்பரிமாணக் காட்சிகளைக் கொண்ட வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்பட்ட போதிலும் ஓன்லைனில் இருபரிமாண காட்சிகளை முப்பரிமாணக் காட்சிகளாக மாற்றும் வசதி கடந்த வருடமே Youtube தளத்தில்...
05.04.2012
வாக்மேன் மறைந்து எம்பி3 பிளேயர் வந்த போது இசையை ரசிக்க அனைவரும் அதற்கு மாறினர். மிகத் துல்லியமான இசை, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து பிரச்னை இன்றி தரும் வசதி ஆகியவற்றினால் பலரும் இதன்பால் ஈர்க்கப்பட்டனர். ஆனால் இது வேறு சில பிரச்னைகளைத் தருவதாக டெல் அவிவ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து எம்பி3 பிளேயரை, ஹெட் செட் மாட்டி கேட்டு வருபவர்களுக்கு, மிக இளம் வயதிலேயே...
05.04.2012
கூகுள் தனது பயனார்களுக்கு புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. இம்முறை Project Glass என்ற புதிய திட்டத்தை கூகுள் ஆரம்பித்துள்ளது. இதில் கண் அசைவை வைத்து கூகுள் செயல்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
05.04.2012
சந்திக்க வாய்ப்பில்லா இரண்டு வாய்பேசாத விலங்குகள் திடீரெனச்சந்தித்து கொஞ்சிக் குலாவி விளையாடுவதை பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கும். அதேபோலத்தான் என்றுமே கடலுக்குச்செல்லுவேனா என்று சிந்தித்துக்கூடப் பார்க்காத பூனை ஒன்று கடல் நீரின் மேற்பரப்பில் கப்பலில் மிதந்தவாறு டொல்பினுடன் கொஞ்சிக் குலாவி விளையாடி மகிழ்கின்றது.
04.04.2012
நாம் வாழும் உலகில் அன்றாடம் நடக்கும் விடயங்களை உடனுக்குடன் தெரிவிக்கும் இணையங்கள் பல பெருகியிருக்கும் இவ்வேளையில் பத்திரிக்கை மற்றும் செய்தித்தாள்களை விரும்பிப் படிப்பவர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். இவ்வாறு பத்திரிக்கை படிக்கும் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் தற்போது படிக்க ஆரம்பித்துவிட்டன. அவ்வாறு பத்திரிக்கை படிக்கும் விலங்கினைப் படத்தில் காணலாம்.
04.04.2012
தீயினால் விபத்திற்குள்ளாகும் பகுதிகள் தற்போது மனிதர்களின் நேரடியான நடவடிக்கைகள் மூலமே கட்டுப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு செயற்படும் போது மனிதனிற்கு ஏற்படும் தீங்குகளை தடுக்கும் பொருட்டும், துணிவாகவும் விரைவாகவும் தீயை அணைக்கும் பொருட்டும் நவீன ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் தம்மில் பொருத்தப்பட்டுள்ள infrared கருவி மூலம் தீப்பிடிக்கும் இடங்களை உணர்ந்து கொள்கின்றன. பின் அந்த இடத்தை...
02.04.2012
இலகுவான பிரயாணங்களுக்கு பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு சக்கரங்களை கொண்டிருப்பதனால் அதனை செலுத்துபவர் சமநிலையை பேண வேண்டும். அவ்வாறில்லாத சந்தர்ப்பங்களில் சரியான முறையில் அவற்றை செலுத்த முடியாது. இதனால் பலர் மோட்டார் சைக்கிள்களை நினைத்தே பார்ப்பதில்லை. இதை உணர்ந்து கொண்ட சன் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள Lit Motors நிறுவனமானது இருசக்கரங்களை கொண்டதும் சுயமாகவே சமநிலையைப்...
02.04.2012
HWiNFO32 என்ற மென்பொருளின் மூலம் கணணியில் வன்பொருள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த மென்பொருளை மிக சிறந்த வகையில் கணணி பயனாளர்களுக்கு ஏற்றவாறு தொழில்நுட்ப வல்லுனர்கள் வடிவமைத்துள்ளனர். இதன் மூலமாக பயனாளர்கள் கணணியின் வன்பொருள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். தரவிறக்க சுட்டி http://download.cnet.com/HWiNFO32/3000-2094_4-10437914.html
01.04.2012
புளுடூத் தொழில்நுட்பம் செயல்படும் விதத்திற்கும், இந்த பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், ஸ்வீடன், நோர்வே மற்றும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள். இவர்களுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற டென்மார்க் அரசர் மீது அசாத்திய மரியாதையும் பிரியமும் இருந்தது. அந்த மன்னர் பெயர் ஹெரால்ட் புளுடூத். அவரின் நினைவாகவே இந்த...