இணையத்தளங்களை பயன்படுத்துவோர் அவதானத்துடன் இருக்குமாறு இலங்கையின் கணனி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரன்சம்வெயா (ransomware) என்று அறியப்படுகின்ற கணனி வைரஸின் பரவல் காரணமாக கணனிகளின் இயக்கம் பாதிக்கப்படலாம் என்பதனால் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக அதன் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்றைய தினம் (15) குறித்த வைரஸ் தாக்குதலொன்று இடம்பெறுவதற்கான அபாயம் இருப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பில் ஜாம்பவானாக திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய மொழிபெயர்ப்பு அப்ளிகேஷனை வெளியி்ட்டுள்ளது.

தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் டிரான்ஸ்லேட்டர் 27 மொழிகளை மட்டுமே மொழிபெயர்ப்பு செய்யும் நிலையில், மைக்ரோசாப்ட்டின் புதிய அப்ளிகேஷன் 50 விதமான மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யும் திறன் வாய்ந்ததாகும்.
இந்த அப்ளிகேஷனை பல்வேறு விதமான கருவிகளிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் டிரான்ஸ்லேட்டர் என அழைக்கப்படும் இந்த ஆப், விண்டோஸ் மட்டுமின்றி ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கருவிகளிலும் இயங்கும் ஆற்றலுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

நாம் வசிக்கும் பூமியை ஒத்த மற்றுமொரு கிரகத்தை, கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை காலமும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் இதுவே, பூமியை மிகவும் ஒத்த விதத்தில் அமைந்துள்ளது என்று நாசா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சற்று குளிர்ச்சியான, அளவில் பெரிதற்ற, புறத்தோற்றத்தில் நீரைக் கொண்டமைந்துள்ளது மாத்திரமன்றி உயிரினங்கள் வாழக்கூடிய அனைத்து சூழலையும் இந்த கிரகம் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த கிரகத்துக்கு ஏர்த் 2.0 (Earth 2.0) என நாசா நிநுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜோன் க்ரண்ட்பெல் பெயர் சூட்டியுள்ளார்.

அபா­ய­க­ர­மான தொண்டைப் புற்­று­நோயை முன்­கூட்­டியே இனங்­காணக் கூடிய கடற்­பஞ்சு வடி­வான விழுங்கக் கூடிய புரட்­சி­கர உப­க­ர­ண­மொன்றை பிரித்­தா­னிய விஞ்­ஞா­னிகள் வடி­வ­மைத்­துள்­ளனர்.
கேம்­பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­களால் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள 'பிறில்லோ பட்' என அழைக்­கப்­படும் இந்த உப­க­ரணம் 5 நிமிட நேரத்தில் உண­வுக்­கு­ழா­யி­லுள்ள அரை மில்­லியன் கலங்­களை ஆய்­வுக்­குட்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாகும். இந்த உப­க­ர­ணத்தை பயன்­ப­டுத்தி புற்­று­நோயை முன்­கூட்­டியே கண்­ட­றிந்து அதி­லி­ருந்து விடு­த­லை ­பெறலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

'இயற்கையின் இரகசியம்' என்பதை கொண்டு நாம் அனைவரும் எமது இயற்கை அழகை மெருகேற்றிக் கொள்ள விரும்புவது வழமை. அந்த வகையில் இலங்கையில் முழுமையாக தயாரிக்கப்படும் இயற்கை அழகுசாதன தயாரிப்பு நாமமான நேச்சர்ஸ் சீக்ரட் நாமத்தின் உரிமையை கொண்டுள்ள புகழ்பெற்ற நிறுவனமான நேச்சர்ஸ் பியுட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான சமந்த குமாரசிங்ஹ அவர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைந்திருந்தது.

இணைய பயனர்கள் அவதானம்; வைரஸ் இவ்வாறுதான் தாக்குகிறது
19.10.2017
இணையத்தளங்களை பயன்படுத்துவோர் அவதானத்துடன்...
கூகுளை மிஞ்சிய மைக்ரோசாப்ட்டின் புதிய அப்ளிகேஷன்…!
12.08.2015
கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பில் ஜாம்பவானாக...
2ஆம் உலகம் கண்டுபிடிப்பு.
24.07.2015
நாம் வசிக்கும் பூமியை ஒத்த மற்றுமொரு கிரகத்தை,...
அபாயகரமான தொண்டைப் புற்றுநோயை இனங்கண்டறிய உதவும் உபகரணம் பிரித்தானிய விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு .
22.07.2015
அபா­ய­க­ர­மான தொண்டைப் புற்­று­நோயை முன்­கூட்­...
மூலிகைக்கு மவுசு அதிகம்: சமந்த குமாரசிங்ஹ
21.06.2015
'இயற்கையின் இரகசியம்' என்பதை கொண்டு நாம் அனைவரும்...

தொழில்நுட்பம்

16.04.2012
இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் காலை முதல் மாலை வரை நேரத்தை செலவழிப்பவர்களே அதிகம். ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு குறிப்பிட்ட இணையத்தளங்களில் தங்கள் நேரத்தை செலவு செய்கின்றனர். இவ்வாறு ஒரு நாளைக்கு இணையத்தில் எவ்வளவு நேரத்தை எந்தெந்த தளங்களில் உபயோகப்படுத்துகிறீர்கள் என்பதை புள்ளி விவரங்களோடு உங்களுக்கு தெரிவிக்க ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது. இதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக்...
12.04.2012
இணையம் பல வழிகளை நன்மையை தருகின்ற போதிலும், சில நேரங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறான வேளையில், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இணையத்தை நிறுத்தி வைக்கலாம். அதற்கு FocalFilter என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். இந்த மென்பொருள் இயங்குவதற்கு Microsoft’s .NET Framework கணணியில் நிறுவப்பட்டிருத்தல் அவசியமாகும்...
12.04.2012
மின்னஞ்சல், மெசஞ்சர் போன்ற வசதிகளை வழங்குவதில் கூகுளிற்கு அடுத்தபடியாக பெயர் பெற்றது யாகூ ஆகும். ஒரு உலாவியின்(Browser) மூலம் பல யாகூ பக்கங்களை ஓப்பின் செய்ய முடியுமாயினும் ஒரே சந்தர்ப்பத்தில் பல கணக்குகளை பயன்படுத்தி உள்நுழைய முடியாது. அதையும் மீறி பல கணக்குகளை பயன்படுத்தி ஒரே சந்தர்ப்பத்தில் உள்நுழைய வேண்டுமாயின் ஒன்றிற்கு மேற்பட்ட உலாவிகளை பயன்படுத்த வேண்டும் அல்லது விசேட மென்பொருட்களை...
12.04.2012
அண்மைக்காலமாக தனது புதிய கைப்பேசிகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் இருக்கும் நொக்கியா நிறுவனமானது தனது அடுத்த புதிய அறிமுகமான Lumia 610 NFC பற்றிய அறிவித்தலை வெளிவிட்டது. இது தொழில்நுட்ப ரீதியில் விண்டோஸ் இயங்குதளத்தையும், NFC வன்பொருட்களையும் ஒருங்கே கொண்டுள்ள உலகின் முதலாவது கைப்பேசியாகும். இவற்றின் திரையானது 3.7 அங்குலமான WVGA LCD திரைகளாகும். மேலும் 5 மெகாபிக்சல்கள் உடைய கமெரா, 800MHz...
07.04.2012
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகை செய்யும் ஹோர்மோனை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இவர்களுக்கு இன்சுலின் மருந்து பயன்படுகிறது. இதற்கு மாற்று வழியை கண்டுபிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்கும் ஹோர்மோனை...
07.04.2012
புகைப்படங்களை எடிட்டிங் செய்யும் வசதியையும், தரவேற்றும் வசதியையும் Flickr வழங்கி கொண்டிருக்கிறது. மேலும் இதன் முன்னைய அப்பிளிக்கேசன் ஆன PikNikஐ நீக்கிவிட்டு Aviary எனும் புதிய அப்பிளிக்கேசனுடனான வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 19ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் இப்புதிய அப்பிளிக்கேசன் இணைய மொழிகளில் ஒன்றான HTML 5ல் இயங்கவல்லது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த...
07.04.2012
வீடியோ தரவிறக்கம், தரவேற்றம் என்பனவற்றில் முதன்மையாக விளங்கும் Youtube தளமானது அதி உயர் பிரிதிறன் கொண்ட முப்பரிமாண வீடியோக்களை பார்வையிடும் வசதியை உருவாக்கியுள்ளது. இத்தளத்தில் கடந்த மூன்று வருடங்களாக முப்பரிமாணக் காட்சிகளைக் கொண்ட வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்பட்ட போதிலும் ஓன்லைனில் இருபரிமாண காட்சிகளை முப்பரிமாணக் காட்சிகளாக மாற்றும் வசதி கடந்த வருடமே Youtube தளத்தில்...
05.04.2012
வாக்மேன் மறைந்து எம்பி3 பிளேயர் வந்த போது இசையை ரசிக்க அனைவரும் அதற்கு மாறினர். மிகத் துல்லியமான இசை, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து பிரச்னை இன்றி தரும் வசதி ஆகியவற்றினால் பலரும் இதன்பால் ஈர்க்கப்பட்டனர். ஆனால் இது வேறு சில பிரச்னைகளைத் தருவதாக டெல் அவிவ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து எம்பி3 பிளேயரை, ஹெட் செட் மாட்டி கேட்டு வருபவர்களுக்கு, மிக இளம் வயதிலேயே...
05.04.2012
கூகுள் தனது பயனார்களுக்கு புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. இம்முறை Project Glass என்ற புதிய திட்டத்தை கூகுள் ஆரம்பித்துள்ளது. இதில் கண் அசைவை வைத்து கூகுள் செயல்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
05.04.2012
சந்திக்க வாய்ப்பில்லா இரண்டு வாய்பேசாத விலங்குகள் திடீரெனச்சந்தித்து கொஞ்சிக் குலாவி விளையாடுவதை பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கும். அதேபோலத்தான் என்றுமே கடலுக்குச்செல்லுவேனா என்று சிந்தித்துக்கூடப் பார்க்காத பூனை ஒன்று கடல் நீரின் மேற்பரப்பில் கப்பலில் மிதந்தவாறு டொல்பினுடன் கொஞ்சிக் குலாவி விளையாடி மகிழ்கின்றது.