பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சுற்றுசூழலுக்கு சவாலாக விளங்கும் பிளாஸ்டிக்கை அழிக்க முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்நிலையில் விஞ்ஞானிகளின் தற்செயல் கண்டுபிடிப்பு இவ்விகாரத்தில் தீர்வை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஜப்பானில் உள்ள பெட்பாட்டில் மறுசுழற்சி ஆலையில் பிரிட்டனின் Portsmouth பல்கலைகழகமும், அமெரிக்காவின் தேசிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையினரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் பகுதி அருகே கழிவறை இல்லாததால் இளம்பெண் ஒருவர் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார். பலமுறை கோரிக்கை வைத்தும் புகுந்த வீட்டார் கழிவறை கட்டாததால் இளம்பெண் இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளார். கணவன் வீட்டில் இருந்து வெளியேறிய பெண் தற்போது தனது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார்.

பானாசோனிக் நிறுவனம் அதன் புதிய பி தொடர் வரிசையில் 18:9 திரை கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன் இன்று முதல் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர் வழியாக கிடைக்கும். இந்த கைப்பேசி ரூ.6,999 விலையில் கிடைக்கும். இந்த புதிய பானாசோனிக் ஸ்மார்ட்போனுடன் சிறப்பு சலுகையாக புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு 60ஜிபி டேடாவை ஐடியா வழங்குகிறது. மேலும் ரூ.199க்கு ரீசார்ஜ் செய்தார், கூடுதலாக 28 நாட்களுக்கு 10ஜிபி டேடா சலுகை வழங்கப்படுகிறது. மேலும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, அங்கு உயிர்கள் வாழ தகுந்த சூழல் நிலவுகிறதா என இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் ஆய்வு நடத்தி வருகின்றன. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாய் கிரகத்தில் உலவி வரும் கியூரியாசிட்டி ரோவர் 2 ஆயிரம் நாட்களை நிறைவு செய்துள்ளது.

சர்வதேச அளவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கான எழுது பொருட்களின் சேகரிப்புக்காக அமீரக செஞ்சிலுவை சங்கம் ஆதரவுடன் பென்சில் மனிதர் எனப்படும் வெங்கட் உதவியுடன் தமிழ் 89.4 பண்பலை சாதனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ் ரேடியோ தொகுப்பாளர் நிம்மி என்ற நிர்மல் 89.4 மணிநேரம் 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பண்பலை நிகழ்ச்சி செய்து சாதனை படைத்தார்.

பிளாஸ்டிக் என்னும் எமனை செரிக்கும் புதிய என்சைம் : விஞ்ஞானிகளின் தற்செயலான கண்டுபிடிப்பால் வியப்பு
24.04.2018
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய...
கழிவறை இல்லாததால் இளம்பெண் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார்
24.04.2018
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் பகுதி...
18:9 திரை கொண்ட பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன்
24.04.2018
பானாசோனிக் நிறுவனம் அதன் புதிய பி தொடர் வரிசையில்...
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்
24.04.2018
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரோபோ...
3 நாட்களுக்கு மேல் நிகழ்ச்சி நடத்தி சாதனை படைத்த தமிழ் வானொலி தொகுப்பாளர்
24.04.2018
சர்வதேச அளவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கான...

தொழில்நுட்பம்

12.09.2012
சளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்துவதற்கு புதிய வகை ஸ்பிரே மருந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சளி,காய்ச்சல் போன்ற நோய்கள் வைரஸ் கிருமியால் ஏற்படுகின்றன. இவைகள் காற்றின் மூலம் மனிதர்களின் உடலுக்குள் பரவுகின்றன. நோய்களை குணப்படுத்த ஊசி மற்றும் மருந்து,மாத்திரைகள் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இவற்றை குணப்படுத்த ஸ்பிரே மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனின் உள்ள பல்கலைக்கழக...
07.06.2012
பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவோடு பேஸ்புக்கின் வீழ்ச்சியும் ஆரம்பித்து விட்டதாகப் பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பேஸ்புக்கின் புகழ் இன்னும் 8 வருடங்கள் வரை மட்டுமே காணப்படுமெனவும் அதன் பின்னர் அது மங்கிப்போய்விடுமெனவும் பிரபல முதலீட்டு ஆய்வாளரும், 'அயன் ஃபயர்' முதலீட்டு நிறுவனத்தின் ஸ்தாபகருமான எரிக் ஜெக்ஸன் எதிர்வுகூறியுள்ளார். ஒரு காலத்தில் யாஹூ நிறுவனம் இணையத்தில் எவ்வாறு...
14.05.2012
நாம் உருவாக்கும் ஆவணங்களில் அதனைப் படிப்பவர்களின் மனதைக் கவரும் வகையில் நிறைய வேலைகளை மேற்கொள்ள வேர்ட் நமக்குப் பல வசதிகளைத் தருகிறது. எடுத்துக்காட்டாக வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், கிராபிக்ஸ் அமைக்கலாம், வேர்ட் ஆர்ட் மூலம் சொற்களை அல்லது தலைப்புகளை பல வடிவங்களில் ஏற்படுத்தலாம். நீங்கள் உங்கள் டாகுமெண்ட் ஒன்றினை இணையப் பக்கத்தில் அமைத்துக் காட்ட திட்டமிடுகிறீர்கள் எனில், அதற்கு ஒரு பின்னணித்...
14.05.2012
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் அதன் பயனாளர்களுக்கு சில வழிகளில் நன்மை தருகின்ற போதிலும் வேறு விதத்தில் தீமை விளைவிக்கக் கூடியதாக உள்ளது. எனவே பாடசாலைகள் போன்ற இடங்களிலும் இத்தளத்தை முடக்குவது கட்டாயமானதாக காணப்படலாம். இவ்வாறு பேஸ்புக் தளத்தை முடக்குவதற்கு FB Limiter எனும் மென்பொருள் காணப்படுகின்றது. இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து குறித்த கணணியில் நிறுவிய பின் ஒரே ஒரு கிளிக் மூலம் பேஸ்புக்...
10.05.2012
தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஏராளமான பேஸ்புக் Appsகளுக்கு பேஸ்புக்கில் உங்கள் விபரங்களை பயன்படுத்துவதற்கென அனுமதி வழங்கியிருப்பீர்கள். இதில் சில இணையத்தளங்களில் பேஸ்புக் பயனர் பெயர், கடவுச் சொல் கொண்டு லொகின் செய்தும் இருக்கலாம். பேஸ்புக்கில் பிரைவசி தொடர்பில் அக்கறை கொண்டவராயின் இவ்வாறு அனுமதி அளித்த அப்பிளிகேஷன்களை அறிந்து அவற்றில் தேவையற்ற மற்றும் பழைய Appsகளை நீக்கிவிடுவது...
28.04.2012
மின்னஞ்சல் சேவைகளில் முன்னணி வகிக்கும் நிறுவனமான ஜிமெயில் தனது பயனர்களுக்கான மின்னஞ்சல் சேமிக்கும் வசதியை 7.5GB இலிருந்து 10GB ஆக அதிகரித்துள்ளது. Google Drive எனும் இலவச ஓன்லைன் சேமிப்பு வசதிக்கு சமாந்தரமாகவே இந்த மின்னஞ்சல் சேமிப்பு வசதி அதிகரிப்பு காணப்படுகின்றது. எனினும் இந்த 10GB சேமிப்பு வசதியை கட்டணம் செலுத்துவதன் மூலம் 25GB ஆக அதிகரிக்க முடியும். இவ்வசதியானது நாளைய தினத்திலிருந்து...
28.04.2012
கூகுள் குரோம், மொஸில்லா பயர்பொக்ஸ் உலாவிகளின் புதிய பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சில மாதங்களாகவே நடைபெற்று வரும் உலாவி வெளியிடும் போட்டியில் இது ஒரு சிறப்பான நிலை என்று ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். கூகுள் தன் குரோம் பிரவுசரின் அண்மைக் காலத்திய பதிப்பான 18 ஐ வெளியிட்டுள்ளது. இதில் எச்.டி.எம்.எல்.5 இயக்கத்திற்கான ஹார்ட்வேர் இயக்கத்திற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இது விண்டோஸ் மற்றும் மேக்...
20.04.2012
பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பல்வேறுபட்ட தொழிற்பாடுகளை கையாள வேண்டிய சந்தர்ப்பங்களில் சுட்டியைப் பயன்படுத்தும் போது சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம். இச்சிரமங்களைத் தவிர்ப்பதற்காக Short cut Keyக்களை பயன்படுத்த முடியும். எனினும் இச் Short cut Keyக்கள் கூகுள் குரோம், பயர்பொக்ஸ் என்பனவற்றில் வினைத்திறனாகச் செயற்படுவதுடன் இரண்டு உலாவிகளுக்கிடையிலும் Short cut Keyக்களை பிரயோகிப்பதில் சிறிய...
20.04.2012
முன்னணி இயங்குதள உற்பத்தி நிறுவங்களில் ஒன்றாகத் திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனமானது அண்மையில் விண்டோஸ் 8 எனும் இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது இந்த விண்டோஸ் 8 இயங்குதளத்தை மூன்று வகைகளாகப் பிரித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் Windows 8, Windows 8 Pro, Windows RT ஆகிய இயங்குதளங்கள் x86/64 bitல் வெளியிடப்படவுள்ளன. இதில் Windows 8ஐக் காட்டிலும் Windows 8 Pro ஆனாது...
20.04.2012
இணைய உலகில் மக்களுக்கு பல முன்னணி சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது மேலும் ஒரு புதிய அம்சமான கூகுள் ட்ரைவ் எனும் இலவசமான ஓன்லைன் சேமிப்பு வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இவ்வசதியானது 5GB சேமிப்பு வசதியை கொண்டிருப்பதுடன் முதன் முதலில் Windows, Mac, iOS, Android போன்ற இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை கணணியின் மேலதிக வன்றட்டாக பயன்படுத்த முடியும், அத்துடன்...