இணையத்தளங்களை பயன்படுத்துவோர் அவதானத்துடன் இருக்குமாறு இலங்கையின் கணனி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரன்சம்வெயா (ransomware) என்று அறியப்படுகின்ற கணனி வைரஸின் பரவல் காரணமாக கணனிகளின் இயக்கம் பாதிக்கப்படலாம் என்பதனால் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக அதன் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்றைய தினம் (15) குறித்த வைரஸ் தாக்குதலொன்று இடம்பெறுவதற்கான அபாயம் இருப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பில் ஜாம்பவானாக திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய மொழிபெயர்ப்பு அப்ளிகேஷனை வெளியி்ட்டுள்ளது.

தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் டிரான்ஸ்லேட்டர் 27 மொழிகளை மட்டுமே மொழிபெயர்ப்பு செய்யும் நிலையில், மைக்ரோசாப்ட்டின் புதிய அப்ளிகேஷன் 50 விதமான மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யும் திறன் வாய்ந்ததாகும்.
இந்த அப்ளிகேஷனை பல்வேறு விதமான கருவிகளிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் டிரான்ஸ்லேட்டர் என அழைக்கப்படும் இந்த ஆப், விண்டோஸ் மட்டுமின்றி ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கருவிகளிலும் இயங்கும் ஆற்றலுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

நாம் வசிக்கும் பூமியை ஒத்த மற்றுமொரு கிரகத்தை, கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை காலமும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் இதுவே, பூமியை மிகவும் ஒத்த விதத்தில் அமைந்துள்ளது என்று நாசா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சற்று குளிர்ச்சியான, அளவில் பெரிதற்ற, புறத்தோற்றத்தில் நீரைக் கொண்டமைந்துள்ளது மாத்திரமன்றி உயிரினங்கள் வாழக்கூடிய அனைத்து சூழலையும் இந்த கிரகம் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த கிரகத்துக்கு ஏர்த் 2.0 (Earth 2.0) என நாசா நிநுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜோன் க்ரண்ட்பெல் பெயர் சூட்டியுள்ளார்.

அபா­ய­க­ர­மான தொண்டைப் புற்­று­நோயை முன்­கூட்­டியே இனங்­காணக் கூடிய கடற்­பஞ்சு வடி­வான விழுங்கக் கூடிய புரட்­சி­கர உப­க­ர­ண­மொன்றை பிரித்­தா­னிய விஞ்­ஞா­னிகள் வடி­வ­மைத்­துள்­ளனர்.
கேம்­பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­களால் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள 'பிறில்லோ பட்' என அழைக்­கப்­படும் இந்த உப­க­ரணம் 5 நிமிட நேரத்தில் உண­வுக்­கு­ழா­யி­லுள்ள அரை மில்­லியன் கலங்­களை ஆய்­வுக்­குட்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாகும். இந்த உப­க­ர­ணத்தை பயன்­ப­டுத்தி புற்­று­நோயை முன்­கூட்­டியே கண்­ட­றிந்து அதி­லி­ருந்து விடு­த­லை ­பெறலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

'இயற்கையின் இரகசியம்' என்பதை கொண்டு நாம் அனைவரும் எமது இயற்கை அழகை மெருகேற்றிக் கொள்ள விரும்புவது வழமை. அந்த வகையில் இலங்கையில் முழுமையாக தயாரிக்கப்படும் இயற்கை அழகுசாதன தயாரிப்பு நாமமான நேச்சர்ஸ் சீக்ரட் நாமத்தின் உரிமையை கொண்டுள்ள புகழ்பெற்ற நிறுவனமான நேச்சர்ஸ் பியுட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான சமந்த குமாரசிங்ஹ அவர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைந்திருந்தது.

இணைய பயனர்கள் அவதானம்; வைரஸ் இவ்வாறுதான் தாக்குகிறது
19.10.2017
இணையத்தளங்களை பயன்படுத்துவோர் அவதானத்துடன்...
கூகுளை மிஞ்சிய மைக்ரோசாப்ட்டின் புதிய அப்ளிகேஷன்…!
12.08.2015
கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பில் ஜாம்பவானாக...
2ஆம் உலகம் கண்டுபிடிப்பு.
24.07.2015
நாம் வசிக்கும் பூமியை ஒத்த மற்றுமொரு கிரகத்தை,...
அபாயகரமான தொண்டைப் புற்றுநோயை இனங்கண்டறிய உதவும் உபகரணம் பிரித்தானிய விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு .
22.07.2015
அபா­ய­க­ர­மான தொண்டைப் புற்­று­நோயை முன்­கூட்­...
மூலிகைக்கு மவுசு அதிகம்: சமந்த குமாரசிங்ஹ
21.06.2015
'இயற்கையின் இரகசியம்' என்பதை கொண்டு நாம் அனைவரும்...

தொழில்நுட்பம்

08.05.2013
பெட்ரோல் டீசல் விலை உயர்வு மலைக்க வைக்கும் வகையில் உயர்ந்து வரும் சூழலில், கன்னத்தில் கை வைத்து கவலையுடன் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் வந்துள்ளது காற்றில் இயங்கும் வாகனம். கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களின் இந்த முயற்சியால் காற்றில் கலக்கும் மாசு குறையும் என சொல்லப்படுகிறது. மாசுபாட்டைக் கட்டுப்படுத்த வழி: வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் ஒருபுறம் காற்று...
08.05.2013
கட்டுமானத் தொழிலில், நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு, மாற்றுப் பொருட்கள் பல, இப்போது வேகமாக பிரபலமாகி வருகின்றன. மணலுக்கு மாற்றாக, செயற்கை மணல் பிரபலமாகி வரும் நிலையில், செங்கற்களின் இடத்தை, நிலக்கரிச் சாம்பலில் உருவாகும் ஃப்ளை ஆஷ் கற்கள் நிரப்பத் தொடங்கியுள்ளன. சுற்றுப்புற சூழல் பாதுகாப்புக்கும் உதவுவதாகச் சொல்லப்படும் இந்த கற்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன? அனல்மின்...
05.05.2013
1980களில், ஒரே இனத்தைச் சேர்ந்த இரு தாவரங்களின் மரபணுவை சேர்த்து ஒட்டுமுறை தாவரம் உருவாக்கப்பட்டு வந்தது. ஒரு எலுமிச்சையின் மரபணுவை மற்றொரு எலுமிச்சை ரகத்துடன் சேர்த்து உருவாக்குவது ஒட்டுமுறை. ஆனால், அதே எலுமிச்சையை அதற்கு தொடர்பில்லாத வேறொரு தாவரம் அல்லது உயிரினத்துடன் இணைத்து உருவக்கப்படுவதே மரபணு மாற்றப் பயிர். இது சம்பந்தப்பட்ட தாவரத்தின் இயல்பையே மாற்றிவிடும். பருத்தி, கத்தரிக்காய் என...
05.05.2013
இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டிலிருந்தவாரே கண்காணிக்கும் புதிய மருத்துவத் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதய நோய்கள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் அதை குணப்படுத்தவும் அதனால் ஏற்படும் மரணங்களைத் தடுக்கவும் பயன்படும் இந்த புதிய கருவி பற்றிய விவரங்கள்: மாறி வரும் உணவுப் பழக்கங்களினாலும் வாழ்க்கை முறையினாலும் இளம் வயதினர்கூட இதயம் தொடர்பான நோய்களுக்கு ஆளாவது அதிகரித்து...
05.05.2013
ஆவணக் காப்பகம் அல்லது ஆவணகம் என்பது, ஒரு நாடு, சமூகம் அல்லது ஒரு நிறுவனத்தின் வரலாற்று ஆவணங்களைப் பல்வேறு தேவைகளுக்காகப் பாதுகாத்து வைக்கும் ஒரு இடமாகும். பல ஆவணக் காப்பகங்கள், நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஆவணங்களைப் பாதுகாத்து வருகின்றன. இதனால் இவை அந் நாடுகளினதும், சமுதாயங்களினதும் நினைவுகளைப் பொதிந்து வைத்திருக்கின்றன என்று கூற முடியும். "மக்களுடைய நடவடிக்கைகள், கொடுக்கல் வாங்கல்கள்...
05.05.2013
மிதி அச்சு இயந்திரம் அல்லது தட்டு அச்சு இயந்திரம் என்றழைக்கப்படும் இயந்திரங்கள் அச்சுத் தொழிலில் பயன்படும் எந்திரமாகும். இவ்வகை எந்திரங்கள் தையல் எந்திரத்தை இயக்குவது போலவே காலால் மிதித்து இயக்கப்படுபவை. இவற்றை மின்சார மோட்டார் பொருத்தி தானாக இயங்கும் வகையிலும் இயக்கலாம். இதில் இரு இரும்புத் தட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். ஒன்று செங்குத்தாக எந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இதில்...
05.05.2013
அச்சிடல் என்பது, எழுத்துக்களையும், படிமங்களையும், அச்சு இயந்திரங்களைப் பயன்படுத்தி மையினால் காகிதங்களில் பதிவு செய்தலைக் குறிக்கும். இது பல இடங்களில் பெரிய அளவிலான தொழில் செயற்பாடாக இருக்கின்ற போதிலும், சிறிய அளவிலும் அச்சிடல் நடைபெற்று வருகின்றது. அச்சிடல், பதிப்புத் தொழிலின் ஒரு முக்கிய பகுதியாகும். 2005 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, உலகில் எல்லா மொழிகளிலுமாகச் சேர்ந்து மொத்தம் 45 டிரில்லியன்...
20.01.2013
பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் நாட்டினுள் கொண்டுவருவது முற்றாக தடைசெய்யப்படும். இத்தகைய தொலைபேசிகளை கண்டுபிடிப்பதற்காக புதிதாக நவீன தொழில் நுட்ப கருவிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும். தொலை தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட இத்தகவலைத் தெரிவித்தார். வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்படும் கையடக்க தொலைபேசிகள் அனைத்தும் IMEI இலக்கங்களுடன் தொலை...
10.10.2012
மக்களின் மத்தியில் பிரபலமாகி கொண்டிருக்கும் Tabletகளில் புதிய அம்சங்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. இதன் அடிப்படையில் கூகுளின் Android இயங்குதளத்தில் செயற்படக்கூடிய Multimedia Projectorகளை கொண்ட புதிய Tabletகள் அறிமுகமாகின்றன. SmartQ U7 எனும் பெயருடன் அறிமுகமாகும் இவை 1024 x 600 Pixels உடையதும் 7 அங்குல அளவுயதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1 GHz வேகத்தில் செயற்படக்கூடிய OMAP 4430...
09.10.2012
எலக்ட்ரானிக் சாதனங்களை ஒன்லைன் வலைத்தளங்களில் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவியாக சில முன்னணி தளங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. Flipkart: MP3 Player, விளையாட்டு சார்ந்த எலக்ட்ரானிக் சாதனங்கள், Mobile Accessories போன்றவற்றை இந்த Flipkart வலைத்தளத்தில் வாங்கலாம். இந்த வலைத்தளத்தில் எலக்ட்ரானிக் சாதனங்களை இருந்த இடத்தில் இருந்தே மிக எளிதாக வாங்க முடியும். ஒன்லைனில் வாங்க வேண்டும் என்பதை...