இந்தியா – அஸ்ரேலியாவிற்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி மழை காரணமாக தடைபட்டுள்ளதால், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதன் காரணமாக குறித்த டெஸ்ட் தொடரை இந்தியா அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.

கடந்த 96 ஆம் ஆண்டில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணி ஒரு முறை கூட தொடரை கைப்பற்றவில்லை.

இந்நிலையில் 2018/19 ஆம் ஆண்டுக்கான குறித்த தொடரை விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

மாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும் ஜுன் 30ஆம் திகதி மற்றும் ஜுலை 01ஆம் திகதியும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.
சனிக்கிழமை தடகளப் போட்டிகள் நடைபெற்றுஇ ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ:வுகள் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடக்க நிகழ்வுகள்இ ஒலிம்பிக் தீபமேற்றல்இ காலை 09 மணிக்கு நடைபெற்றுஇ இறு தி நிகழ:வுகள் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளதுஇ
பிரதி அமைச்சர்கள்இ கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களும் இ பிரதம அதிதியாக மாகாண உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சிறியானி விஜேயவிக்கிரமவும் கலந்து கொள்கிறார்

மட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வு வெபர் மைதானத்தில் (26.04.2018) சடைபெற்றது. இதில் மரதனோட்டம்,சைக்கிளோட்டம்,நீச்சல்,கிறிக்கட், வழுக்குமரம்,முட்டியுடைத்தல்,தேங்காய்துருவுதல் உட்பட பல கலை கலாச்சார விளையாட்டுக்கள் நடைபெற்றன. இன்நிகழ்வில் மாநகர முதல்வர் உட்பட உறுப்பினர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒழுங்கமைப்பில், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை (24.04.2018) ஆண் பெண் இரு பாலாருக்குமான கரம் போட்டி (தனி சோடி) நடைபெற்றது.

பெண்களுக்கான தனிப் போட்டியில் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த எம்.கிருஷாந்தி,

ஆண்களுக்கான தனிப்போட்டியில் கொத்தியாபுலை செழுஞ்சுடர் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த அ.ஜதீஸ்வரன் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி…

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான அணிக்கு 07 பேர் கொண்ட சிநேகமுறையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி இன்றைய தினம் (26) மட்டக்களப்பு பாட்டாளிபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அவுஸ்ரேலிய மண்ணில் 71 வருடங்களின் பின்னர் சாதனை படைத்தது இந்தியா!
08.01.2019
இந்தியா – அஸ்ரேலியாவிற்கு இடையேயான இறுதி டெஸ்ட்...
மாவட்ட விளையாட்டு விழா - 2018
01.07.2018
மாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும்...
மட்டக்களப்ப மாநகர சபையின் சித்திரை புதுவருட
28.04.2018
மட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற...
அ.ஜதீஸ்வரன் முதலாமிடம்
26.04.2018
மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள்...
மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி
26.04.2018
மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும்,...

விளையாட்டு

11.03.2014
மட்/பட்/களுதாவளை விவேகானந்தா வித்தியாலயத்தின் சிறுவர் விளையாட்டு விழாவானது இன்று 09.03.2014 பி.ப 02.00 மணிக்கு வித்தியாலய முன்றலில் ஆரம்பமானது. இவ் விளையாட்டு விழாவானது பாடசாலையின் அதிபர் இ. கோபாலபிள்ளை தலைமையில் நடைபெற்றது. இதன் போது விசேட அதிதியாக கோட்டக்கல்வி அதிகாரி பூ. பாலச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள்இ மாணவர்கள்இ பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதன்...
04.03.2014
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பங்களாதேஷத்தில் நடைபெற்று வருகிறது. இன்றை போட்டியில் பங்களாதேஷ் பாகிஸ்தான் ஆணிகள் விளையாடுகின்றன. நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணித்தலைவர் ரஹிம் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். 28.4 ஓவரில் 150 ஓட்டங்கள் இருக்கும்போது பங்களாதேஷ் தனது முதல் விக்கெட்டை இழந்தது. 50 ஓவர் முடிவில் வங்காள தேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 326 ஓட்டங்கள் குவித்தது. ரஹிம் 51 ஓட்டங்களுடனும்,...
01.03.2014
மட்/பட்/ மண்டூர் ஸ்ரீ இராமக்கிருஷ்ண வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 21.02.2014 வெள்ளிக்கிழமை பி.ப.2.00 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.வி.ஜெயரெட்ணம் தலைமையில ;மண்டூர் பொது விளயாட்டுமைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளில் அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் நடைபெற்ற பின்பு மாணவிகளால் இறைவணக்கம் செலுத்தப்பட்டது.அதனைத் தொடந்து வித்தியால தேசிய சாரணீய மூன்று இல்லக்...
28.02.2014
மட் /பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திருமதி மாசிலாமணி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வி;ற்கு பிரதம அதிதிகளாக மட்டு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் வின்சென்ற் மகளீர்தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி ரா.கனகசிங்கம் பெற்றார்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் இங்கு வினோத உடைப் போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.வெற்றிபெற்ற இல்ல மாணவர்களுக்கு...
24.02.2014
மட்/பட்/மண்டூர் ஸ்ரீ இராமக்கிருஷ்ண வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 21.02.2014 வெள்ளிக்கிழமை பி.ப.2.00 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.வி.ஜெயரெட்ணம் தலைமையில ;மண்டூர் பொது விளயாட்டுமைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளில் அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் நடைபெற்ற பின்பு மாணவிகளால் இறைவணக்கம் செலுத்தப்பட்டது.அதனைத் தொடந்து வித்தியால தேசிய சாரணீய மூன்று இல்லக்...
13.02.2014
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகளும் பரிசளிப்பு வைபவமும் இன்று (13) பிற்பகல் 2 மணிக்கு அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் பாடசாலை விளையாட்டரங்கில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் அதிதியாக கலந்துகொண்ட நிகழ்வில் சித்தி விநாயகர் ஸ்ரீ போச்சியம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் தி....
12.02.2014
ஐ.பி.எல். 7 ஆவது தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் இன்று புதன்கிழமை காலை முதல் நடைபெற்று வருகின்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் ஏலத்தில் 514 வீரர்களை ஏலம் எடுக்க 8 அணிகள் போட்டியிடுகின்றன. இதில், இலங்கை வீரரரான ஜயவர்த்தனேயை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. வீரேந்திர செவாக்கை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூபாய் 3.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. தென்னாபிரிக்க வீரரான ஜெக் கலிசை ரூபாய் 5.5 கோடிக்கு...
09.02.2014
மண்முனைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2014ம் ஆண்டிற்கான இளைஞர் விளையாட்டுப்போட்டிகளின் குழுப்போட்டிகள் ஆரையம்பதி மகாவித்தியாலய பாடசாலை மைதானத்தில் மண்முனைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சுதன் தலைமையில் நடைபெற்று வருகின்றனது,இதற்கு அமைய ஆண்,பொண்களுக்கான கிறிக்கட் போட்டி (08.02.2014) நடைபெற்றது இப்பொட்டிகளை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ .பிரசாந்தன் கலந்து கொண்டு...
08.02.2014
மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.சி. அலோசியஸ் தலைமையில் இடம்பெற்றது. இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பாரதி இல்லம் 648 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும் நாவலர் இல்லம் 573 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும் விபுலானந்தர் இல்லம் 524 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று கொண்டது.
14.01.2014
இந்தியாவின் இளைய அணி தற்போது திடமானஇ நிலையான ஓர் அணியாக உள்ளதாக இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோணி தெரிவித்துள்ளார். நியூசிலாந்திற்கான சுற்றுப் பயணத்திற்கு முன்னராகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்திய அணி நியூசிலாந்தின் வைத்து ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இரண்டு டெஸ்ற் போட்டிகளில் பங்குபற்றவுள்ளது. இத்தொடர் ஜனவரி 19ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி...
14.01.2014
பெண்கள் ஆஷஸ் தொடரின் ஒற்றை டெஸ்ற் போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் எலைஸ் பெரி சிறப்பாகப் போராடிய போதிலும் அவரது அணியால் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கவில்லை. பேர்த் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்துப் பெண்கள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சார்பாக...
16.12.2013
அமைச்சர்கள் அணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி) அணிக்கும் இடையில் நேற்று நடந்த மென்பந்து கிரிக்கெட் போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி வெற்றியீட்டியுள்ளது. 20 ஓவர்கள் கொண்ட சபாநாயகர் கிண்ணத்திற்கான இந்தப் போட்டி கொழும்பு டொரின்டன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அமைச்சர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 198 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எம்....