இந்தியா – அஸ்ரேலியாவிற்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி மழை காரணமாக தடைபட்டுள்ளதால், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதன் காரணமாக குறித்த டெஸ்ட் தொடரை இந்தியா அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.

கடந்த 96 ஆம் ஆண்டில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணி ஒரு முறை கூட தொடரை கைப்பற்றவில்லை.

இந்நிலையில் 2018/19 ஆம் ஆண்டுக்கான குறித்த தொடரை விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

மாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும் ஜுன் 30ஆம் திகதி மற்றும் ஜுலை 01ஆம் திகதியும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.
சனிக்கிழமை தடகளப் போட்டிகள் நடைபெற்றுஇ ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ:வுகள் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடக்க நிகழ்வுகள்இ ஒலிம்பிக் தீபமேற்றல்இ காலை 09 மணிக்கு நடைபெற்றுஇ இறு தி நிகழ:வுகள் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளதுஇ
பிரதி அமைச்சர்கள்இ கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களும் இ பிரதம அதிதியாக மாகாண உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சிறியானி விஜேயவிக்கிரமவும் கலந்து கொள்கிறார்

மட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வு வெபர் மைதானத்தில் (26.04.2018) சடைபெற்றது. இதில் மரதனோட்டம்,சைக்கிளோட்டம்,நீச்சல்,கிறிக்கட், வழுக்குமரம்,முட்டியுடைத்தல்,தேங்காய்துருவுதல் உட்பட பல கலை கலாச்சார விளையாட்டுக்கள் நடைபெற்றன. இன்நிகழ்வில் மாநகர முதல்வர் உட்பட உறுப்பினர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒழுங்கமைப்பில், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை (24.04.2018) ஆண் பெண் இரு பாலாருக்குமான கரம் போட்டி (தனி சோடி) நடைபெற்றது.

பெண்களுக்கான தனிப் போட்டியில் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த எம்.கிருஷாந்தி,

ஆண்களுக்கான தனிப்போட்டியில் கொத்தியாபுலை செழுஞ்சுடர் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த அ.ஜதீஸ்வரன் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி…

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான அணிக்கு 07 பேர் கொண்ட சிநேகமுறையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி இன்றைய தினம் (26) மட்டக்களப்பு பாட்டாளிபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அவுஸ்ரேலிய மண்ணில் 71 வருடங்களின் பின்னர் சாதனை படைத்தது இந்தியா!
08.01.2019
இந்தியா – அஸ்ரேலியாவிற்கு இடையேயான இறுதி டெஸ்ட்...
மாவட்ட விளையாட்டு விழா - 2018
01.07.2018
மாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும்...
மட்டக்களப்ப மாநகர சபையின் சித்திரை புதுவருட
28.04.2018
மட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற...
அ.ஜதீஸ்வரன் முதலாமிடம்
26.04.2018
மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள்...
மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி
26.04.2018
மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும்,...

விளையாட்டு

16.06.2014
உலகக்கிண்ண கால்பந்து பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு ´எப்´ பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினாவும் முதல் முறையாக உலகக்கிண்ண போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ள போஸ்னியாவும் மோதின. இந்த உலகக்கிண்ணத்தில் வலுமையான அணியாக கருதப்படும் அர்ஜெண்டினா, போஸ்னியாவை எளிதில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அர்ஜெண்டினாவிற்கு புதுமுக அணியான போஸ்னியா எல்லா வகையிலும் ஈடுகொடுத்து...
29.04.2014
சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு மண்டூர் அருள்மணி விளையாட்டுக்கழகம் நடாத்திய உள்@ர் அணிகளுக்கிடையிலான மென்பந்து கிறிக்கற் சுற்றுப்போட்டி மண்டூர் பொதுமைதானத்தில் 27.04.2014 அன்று நடைபெற்றது. இச்சுற்றுப்போட்டியில் சுமார் 26 அணிகள் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இறுதியாட்டத்திற்கு பட்டிருப்பு வுளுடைமன் அணியினரும் களுவாஞ்சிகுடி வை.டீ.எஸ்.ஈ அணியினரும் தெரிவானார்கள்.முதலில் துடுபெடுத்தாடிய வை.டீ.எஸ்...
11.04.2014
கிரிக்கெட்டின் பைபிள் என கூறப்படும் விஸ்டன் சஞ்சிகை தமது 151 வது பதிப்பில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் நட்ச்சத்திரம் சச்சின் டெண்டுல்காரின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியுள்ளது. இந்தியா சார்பாக இவ்வாறன கௌரவம் வழங்கப்பட்ட முதல் வீரர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் சச்சின் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே...
11.04.2014
மட் /பட் /மாலையர் கட்டு அ.த.க பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி அண்மையில் வித்தியாலய மைதனத்தில் மிகவும் சிறப்பாக அதிபர் திரு.செ. தேவகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுகளில் அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் நடைபெற்ற பின்பு மாணவிகளால் இறைவணக்கம் செலுத்தப்பட்டது.அதனைத் தொடந்து வித்தியால தேசிய கொடிகள்; ஏற்றப்பட்டது. அதனைத்தொடந்து ஒலிம்பிக் தீபமேற்றலும் சத்திய...
11.04.2014
இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு,தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் என்பவற்றினுடாக நடாத்தப்படும் 26 வது பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் பட்டிப்பளைப் பிரதேச மட்டப் போட்டியில் முனைக்காடு விவேகானந்தா இளைஞர் கழகம் 247 பள்ளிகளைப் பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் மகிழடித்தீவு மகிழை இளைஞர் கழகம் 162 பள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தினையும் மாவடிமும்மாரி ஸ்ரீ விநாயகர் இளைஞர் கழகம் 38...
02.04.2014
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மட்ட 26வது இளைஞர் விளையாட்டு விழாவில் களுதாவளை ஜோர்டன் இளைஞர் கழகம் 373 புள்ளிகளைப் பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தேத்தாத்தீவு கலைமகள் இளைஞர் கழகம் 173 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தினையும் செட்டிபளையம் இளைஞர் கழகம் 159 புள்ளிகளையும் பெற்று மூன்றாமிடத்தினையும் பெற்றுள்ளது. இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு,தேசிய இளைஞர் சேவைகள்...
29.03.2014
மிர்பூர்: டி20 உலககோப்பை குரூப் 10 சுற்றில் வங்கதேசத்தை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி, வங்கதேசத்தை முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி...
29.03.2014
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் இடைக்கால தலைவராக சுனில் கவாஸ்கர் இந்திய உயர்நீதி மன்றத்தினால் நியமிகப்பட்டுள்ளார். ஏழாவது ஐ.பி.எல் தொடரின் காலத்தில் சுனில் கவாஸ்கர் இந்தப் பதவியில் இருப்பார் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதேவேளை சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகள் ஐ.பி.எல் தொடரில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவர் ஸ்ரீனிவாசனின் பதவியை...
28.03.2014
சிட்டகாங்கில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் பலபரீட்சை நடத்தின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் இது அந்த அணிக்கு முக்கியமான ஆட்டமாகும். டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி இலங்கையின் இன்னிங்சை தொடங்கிய பெரேரா 3 ரன்னில் ஆட்டமிழந்தாலும் தில்ஷனுடன் இணைந்து விளையாடிய ஜெயவர்த்தனே...
28.03.2014
ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. அத்துடன், சீனிவாசனுக்கு பதிலாக கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய இடைக்கால தலைவரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. கடந்த ஐ.பி.எல். 6ஆவது போட்டியின் போது சூதாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள்...
16.03.2014
26வது இளைஞர் விளையாட்டு விழாவின் மட்டக்களப்பு மாவட்ட மட்டப் போட்டியின் கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் மண்முனை வடக்கு அணியும் பெண்கள் பிரிவில் மண்முனை மேற்கு வவுணதீவு அணியும் முதலிடம் பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டள்ளது. 26வது இளைஞர் விளையாட்டு விழாவின் மட்டக்களப்பு மாவட்ட மட்டப் போட்டி இடம்பெற்று வருகின்ற நிலையில் சனிக் கிழமை ஆண் மற்றும் பெண்களுக்கான கபடிப் போட்டி சீலாமுனை ஜங் ஸ்டார்...
15.03.2014
இந்திய அணியின் அடுத்த பயிற்றுவிப்பாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட வேண்டும் என சுனில் கவாஸ்கர், இந்திய தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், தற்போதைய பயிற்சியாளர் டங்கன் ப்ளட்ச்சரை மிக மோசமாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். திறமைகளை காட்டத்தவறிய விரேந்தர் செவாக், கெளதம் கம்பீர், யுவராஜ் சிங் போன்றவர்களை அணியில் நிறுத்த முடியும் என்றால் ஏன் இவரை மோசமான...