இந்தியா – அஸ்ரேலியாவிற்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி மழை காரணமாக தடைபட்டுள்ளதால், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதன் காரணமாக குறித்த டெஸ்ட் தொடரை இந்தியா அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.

கடந்த 96 ஆம் ஆண்டில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணி ஒரு முறை கூட தொடரை கைப்பற்றவில்லை.

இந்நிலையில் 2018/19 ஆம் ஆண்டுக்கான குறித்த தொடரை விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

மாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும் ஜுன் 30ஆம் திகதி மற்றும் ஜுலை 01ஆம் திகதியும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.
சனிக்கிழமை தடகளப் போட்டிகள் நடைபெற்றுஇ ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ:வுகள் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடக்க நிகழ்வுகள்இ ஒலிம்பிக் தீபமேற்றல்இ காலை 09 மணிக்கு நடைபெற்றுஇ இறு தி நிகழ:வுகள் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளதுஇ
பிரதி அமைச்சர்கள்இ கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களும் இ பிரதம அதிதியாக மாகாண உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சிறியானி விஜேயவிக்கிரமவும் கலந்து கொள்கிறார்

மட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வு வெபர் மைதானத்தில் (26.04.2018) சடைபெற்றது. இதில் மரதனோட்டம்,சைக்கிளோட்டம்,நீச்சல்,கிறிக்கட், வழுக்குமரம்,முட்டியுடைத்தல்,தேங்காய்துருவுதல் உட்பட பல கலை கலாச்சார விளையாட்டுக்கள் நடைபெற்றன. இன்நிகழ்வில் மாநகர முதல்வர் உட்பட உறுப்பினர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒழுங்கமைப்பில், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை (24.04.2018) ஆண் பெண் இரு பாலாருக்குமான கரம் போட்டி (தனி சோடி) நடைபெற்றது.

பெண்களுக்கான தனிப் போட்டியில் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த எம்.கிருஷாந்தி,

ஆண்களுக்கான தனிப்போட்டியில் கொத்தியாபுலை செழுஞ்சுடர் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த அ.ஜதீஸ்வரன் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி…

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான அணிக்கு 07 பேர் கொண்ட சிநேகமுறையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி இன்றைய தினம் (26) மட்டக்களப்பு பாட்டாளிபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அவுஸ்ரேலிய மண்ணில் 71 வருடங்களின் பின்னர் சாதனை படைத்தது இந்தியா!
08.01.2019
இந்தியா – அஸ்ரேலியாவிற்கு இடையேயான இறுதி டெஸ்ட்...
மாவட்ட விளையாட்டு விழா - 2018
01.07.2018
மாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும்...
மட்டக்களப்ப மாநகர சபையின் சித்திரை புதுவருட
28.04.2018
மட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற...
அ.ஜதீஸ்வரன் முதலாமிடம்
26.04.2018
மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள்...
மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி
26.04.2018
மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும்,...

விளையாட்டு

20.11.2011
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4வது ஒருநாள் போட்டியில் நாணயசுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்கள் நிறைவில் 200 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணி சார்பாக சயிட் அப்ரிடி 75 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக தில்ஹார பொர்ணான்டோ 3 விக்கெட்டுக்களையும் பிரசன்னா, ஜீவன் மொண்டிஸ் ஆகியோர்...
05.11.2011
லண்டனில் நடக்கும் ஐரோப்பா லீக் கால்பந்து தொடரின் "கே' பிரிவு லீக் போட்டியில் புல்ஹாம், விஸ்லா கிராகோ அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்தே புல்ஹாம் அணி ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 5வது நிமிடத்தில் டேமியன் ஒரு கோல் அடிக்க, இதற்கு பதிலடியாக கிராகோ அணியின் ஆன்ராஸ் (9வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இதன் பின் எழுச்சியடைந்த புல்ஹாம் வீரர்கள் ஆன்ட்ரூ ஜான்சன் (30, 57 வது) 2 கோல், ஸ்டீஸ் சிட்வெல் (...
05.11.2011
3 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக டேரன் சேமி தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. 2009-ம் ஆண்டு மோசமான பிட்ச் காரணமாக ஓராண்டு தடை விதிக்கப்பட்ட டெல்லி ஆடுகளத்தில் தடை காலம் முடிந்த பிறகு சில சர்வதேச ஒரு நாள்...
04.11.2011
இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சார்ஜா சர்வதேச மைதானத்தில் நடைபெறும் 3 ஆவதும் இறுதியுமான ​டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி முதலாம் நாள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 245 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பாக டி.எம்.டில்ஷான் 92...
03.11.2011
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனிக்கு இராணுவத்தின் லெப்டினன் கேர்ணல் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.அணித் தலைவவர் மஹேந்திர சிங் தோனியின் திறமையை கௌரவிக்கும் நோக்கிலும்இ உலகக் கிண்ணத்தை இந்திய அணிக்குப் பெற்றுக்கொடுத்ததற்காகவும்இ இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தளபதி வி.கே. சிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
02.11.2011
கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆசிப் ஆகியோர் குற்றம் செய்திருப்பதாக விசாரணை நடத்திய லண்டன் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதனால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரேயொரு வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்ட மொஹமட் ஆசிபிற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "ஏமாற்றுவதற்காக சதி"...
30.10.2011
இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று 20-20ல் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி தட்டுத்தடுமாறி 9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன் எடுத்தது. ரெய்னா 39 டோனி 21 அஸ்வின் 17 கோக்லி 15 திவாரி 15 ரன் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டீவன்பின் 3 பிரஸ்னன் போபரா தலா 2 சமீத்படேல் 1 விக்கெட் கைப்பற்றினர். துவக்க வீரர்களான உத்தப்பா 1 ரகானே 0 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து...
30.10.2011
(தர்ஷன்) தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து நடாத்தும் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் இறுதி நிகம்வு இன்று பி.ப 3.30 க்கு ஹோமாகமை தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற இருக்கின்றது. இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ்அளகப்பெரும தலைமையில் இடம் பெறும் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை அமைச்சர்...
29.10.2011
தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து நடாத்தும் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட கபடி அணியினர் வெற்றிபெற்றுள்ளனர். ஹோமாகமை தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்றுவரும் இவ் விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண கபடி அணியினர் முதன் முறையாக முதலாம் இடத்தினை பெற்று சரித்திர வெற்றியைப் பெற்றிருக்கின்றனர். வவுனியா...
29.09.2011
உலக சமாதான தினம் செப்ரம்பர் – 21 ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு சென்றல் லைட் விளையாட்டுக் கழகமும் ருளுயுஐனு நிறுவனமும் இணைந்து கிழக்கு மாகாண, தென் மாகாண பாடசாலை அணிகளுக்கு இடையிலான கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர்களினால் சிபாரிசு செய்யப்பட்ட எட்டு முன்னணி பாடசாலைகள் இப் போட்டிகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 20 க்கு 20 போட்டியாக...