இந்தியா – அஸ்ரேலியாவிற்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி மழை காரணமாக தடைபட்டுள்ளதால், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதன் காரணமாக குறித்த டெஸ்ட் தொடரை இந்தியா அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.

கடந்த 96 ஆம் ஆண்டில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணி ஒரு முறை கூட தொடரை கைப்பற்றவில்லை.

இந்நிலையில் 2018/19 ஆம் ஆண்டுக்கான குறித்த தொடரை விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

மாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும் ஜுன் 30ஆம் திகதி மற்றும் ஜுலை 01ஆம் திகதியும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.
சனிக்கிழமை தடகளப் போட்டிகள் நடைபெற்றுஇ ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ:வுகள் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடக்க நிகழ்வுகள்இ ஒலிம்பிக் தீபமேற்றல்இ காலை 09 மணிக்கு நடைபெற்றுஇ இறு தி நிகழ:வுகள் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளதுஇ
பிரதி அமைச்சர்கள்இ கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களும் இ பிரதம அதிதியாக மாகாண உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சிறியானி விஜேயவிக்கிரமவும் கலந்து கொள்கிறார்

மட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வு வெபர் மைதானத்தில் (26.04.2018) சடைபெற்றது. இதில் மரதனோட்டம்,சைக்கிளோட்டம்,நீச்சல்,கிறிக்கட், வழுக்குமரம்,முட்டியுடைத்தல்,தேங்காய்துருவுதல் உட்பட பல கலை கலாச்சார விளையாட்டுக்கள் நடைபெற்றன. இன்நிகழ்வில் மாநகர முதல்வர் உட்பட உறுப்பினர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒழுங்கமைப்பில், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை (24.04.2018) ஆண் பெண் இரு பாலாருக்குமான கரம் போட்டி (தனி சோடி) நடைபெற்றது.

பெண்களுக்கான தனிப் போட்டியில் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த எம்.கிருஷாந்தி,

ஆண்களுக்கான தனிப்போட்டியில் கொத்தியாபுலை செழுஞ்சுடர் இளைஞர் கழகத்தைச்சேர்ந்த அ.ஜதீஸ்வரன் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி…

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான அணிக்கு 07 பேர் கொண்ட சிநேகமுறையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி இன்றைய தினம் (26) மட்டக்களப்பு பாட்டாளிபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அவுஸ்ரேலிய மண்ணில் 71 வருடங்களின் பின்னர் சாதனை படைத்தது இந்தியா!
08.01.2019
இந்தியா – அஸ்ரேலியாவிற்கு இடையேயான இறுதி டெஸ்ட்...
மாவட்ட விளையாட்டு விழா - 2018
01.07.2018
மாவட்ட விளையாட்டு விழா 2018 நிகழ:வுகள் எதிர்வரும்...
மட்டக்களப்ப மாநகர சபையின் சித்திரை புதுவருட
28.04.2018
மட்டக்களப்ப மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற...
அ.ஜதீஸ்வரன் முதலாமிடம்
26.04.2018
மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள்...
மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி
26.04.2018
மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும்,...

விளையாட்டு

19.06.2015
இலங்கை அணி வீரர் குஷல் சில்வா தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்துள்ளார். இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறுகின்றது. முன்னதாக முதல்நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 178 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. இதன்படி இன்று ஆட்டத்தை தொடர்ந்த அந்த அணி சார்பாக...
18.06.2015
44–வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி சிலியில் நடைபெற்று வருகிறது. தென்அமெரிக்க கண்டத்தின் ஜாம்பவான் யார் என்பதை நிர்ணயம் செய்யும் இந்தப்போட்டியில் 12 நாடுகள் பங்கேற்று உள்ளனர். ‘சி’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் பிரேசில்– கொலம்பியா அணிகள் மோதின. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் 8 முறை சாம்பியனான பிரேசில் அணி அதிர்ச்சிகரமாக தோற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கொலம்பியா...
18.06.2015
டெஸ்ட் போட்டியை போன்று ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கும் மழை அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. வங்காளதேசத்தில் பருவமழை தொடங்கி வெளுத்து வாங்குகிறது. அடுத்த ஒரு வாரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால், மறுநாள் தொடர்ந்து நடத்துவதற்கு வசதியாக மூன்று ஆட்டங்களுக்கும் மாற்று நாள் (ரிசர்வ் டே) வைக்கப்பட்டுள்ளது....
18.06.2015
வங்காளதேச தொடருக்காக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் டாக்காவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இந்த ஓட்டல் நமது வீரர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. ஓட்டல் அமைந்துள்ள இடம் மக்கள் நெரிசல் பகுதி. எளிதில் வெளியே சென்று வர முடியாது. இதனால் வேறு ஓட்டலுக்கு மாற்ற வேண்டும் என்று இந்திய வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் உடனடியாக வேறு ஓட்டலுக்கு மாற்றுவதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக...
18.06.2015
நாட்டிங்ஹாம்: நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் கேப்டன் மார்கன் அதிரடியாக சதம் விளாச இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி 2-1 என முன்னிலை வகித்தது. இரு அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டி நாட்டிங்ஹாமில்...
18.06.2015
ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக்கழகம் 7வது வருடமாக நடாத்திய ஏ.பி.எல் சுற்றுப்போட்டி -2015 (ASIAN PREMIER LEAGUE 2014) 12-06-2015 காலை 09.00 மணியளவில் சாண்டோ சங்கரதாஸ் மைதனத்தில் APL சுற்றுப்போட்டியின் தலைவர் குணதாஸ் தலைமையில் Asian Dragons,Asian Heroes,Asian Winners,Asian Fighters,Asian Strangers,Asian Stars என 06 அணிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.இவ் ஆரம்ப நிகழ்விற்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர்...
25.05.2015
ஐபிஎல் சீசன் 8இன் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி, பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை குவித்தது....
16.05.2015
இலங்கைக் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்­கெட்டின் அணித் தலை­வ­ராக சகல துறை ஆட்­டக்­கா­ர­ரான அஞ்­சலோ மெத்­தியூஸ் தொட ர்ந்து செயற்­ப­டுவார் என்று இலங்கைக் கிரிக்­கெட்டின் தேர்­வுக்­குழு அறி­வித்­துள்­ளது. அதேபோல் இலங்கை இரு­ப­துக்கு 20 அணியின் தலை­வ­ராக நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்க நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். எதிர்­வரும் ஜூன் மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள பாகிஸ் தான்...
14.05.2015
மக­ளிர்­ கி­ரிக்கெட் அணி வீராங்­ க­னைகள் வேண்­டு­மென்றே பிடி­களைத் தவ­ற­வி­டு­கி­றார்கள் என்றும் அணிக்­குள்ளே ஒற்­று­மை­யில்லை என்றும் சூழ்ச்சி நடப்­ப­தா­கவும் சொல்­லப்­ப­டு­கி­றது. ஆனால் இது ஒன்­றுமே உண்­மை­யில்லை. வெறும் வதந்­தி­கள்தான் என்று தெரி­வித்தார் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்­சி­யாளர் ஜீவந்த. மேற்­கிந்­தியத் தீவுகள் மகளிர் அணி இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யா­...
17.03.2015
உலகக் கிண்ண தொடரில் பங்குபற்றும் அணிகள் 10 ஆக குறைக்கப்பட்டால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் அர்த்தமில்லை என அயர்லாந்து அணித் தலைவர் வில்லியம் போர்ட்ஸ்பீல்ட் தெரிவித்துள்ளார். இந்த உலகக்கிண்ண தொடரில் அவர்கள் சிறப்பாக விளையாடி வெளியேறினர். பலமான அணிகளுக்கு சவாலாக விளங்கினர். பாகிஸ்தான் அணியுடன் தோல்வியடைந்து வெளியேறியது கவலை என்றாலும் திறமையான அணி உலகக்கிண்ணத்தில் இருந்து...
17.03.2015
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பணிப்பாளர் போல் டோவ்ன்டனின் பதவி கேள்விக்குறியான நிலையில் உள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் சுற்றுடன் உலகக்கிண்ண தொடரில் இருந்து வெளியேறியமைக்கு முழுமையான பொறுப்பை இவர் கூற வேண்டும். இந்த நிலையில் இவர் கூறியுள்ள காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியளவில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி டொம் ஹரிசனை நாளை (17)...
02.01.2015
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய அணி தொடரை பறி கொடுத்துள்ளது. இருந்த போதிலும் அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோஹ்லியால் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் விராட் கோஹ்லி இதுவரை 3...