April 04 2018 - 01:22
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுபற்று, மண்முனை மேற்கு பிரதேச சபைகளின் அதிகாரத்தை ததேகூ கைபற்றினர். நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எந்தக்க்சியும் அதிகாரத்தை கைப்பற்றாத நிலையில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கிடையில் வாக்கெடுப்பின்மூலம் சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர்கள் இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகாரத்தை கைப்பற்றுவதர்காக கருணா அம்மானுடன் பேசி...
April 03 2018 - 23:32
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடைய செய்வதும், வெற்றியடைய செய்வதும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைகளிலே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நுவரெலியா சீத்தாஎலிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற உல்லாச விடுதி ஒன்றின் திறப்பு விழாவில் அவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விழா நிறைவில் அங்கிருந்து வெளியேறுகையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு...
April 03 2018 - 23:29
அம்பாறை மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கல்முனை மாகரசபையின் முதல் அமர்வு இன்று (02) திங்கட்கிழமை பி.ப 2.30 மணிக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம். சலீம் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத்திற்கான மேயர், பிரதிமேயர் தெரிவு என்பது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில்...
April 03 2018 - 23:16
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான மற்றுமொரு சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (03) இடம்பெற்றது. இன்று (03) காலை இடம்பெற்ற குறித்த சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலரும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. நாளை (04) இடம்பெறவுள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் உள்ளிட்ட அரசாங்கத்தின்...
February 15 2018 - 01:19
(டினேஸ்) எதிர்வரும் மாகாணசபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் கூட்டாக இணைந்து தமிழ் இணத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம் என்கின்றார் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் மீள் குடியேற்ற பிரதியமைச்சருமாக விநாயகமூர்த்து vமுரளிதரன் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனை பாரிய வெற்றியிட்டியதையடுத்து...
January 21 2018 - 03:23
மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் 6ஆம் வட்டாரம் கருவேப்பங்கேணி-ஜெயந்திபுரம் போட்டியிடும் வேட்பாளர் காந்தனின் அலுவலகம் மீதே...
January 04 2018 - 01:52
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி காரணமாக ரூபா 11,145 மில்லியன் (ரூபா 1114.5 கோடி ) இற்கும் அதிகமான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவும் தாம் பின்னிற்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான...
December 28 2017 - 09:52
மட்டக்களப்பின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமானான சொல்லின் செல்வன் திரு செல்லையா இராஜதுரை அவர்களினால் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் மீள் பிரசுர வடிவிலா புத்தக வெளியீடு அன்மையில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகரும் தலைவருமான தந்தை செல்வாவின் செல்லப்பிள்ளையும், தமிழரசு கட்சியை நாடறிய செய்தவருமான செ.இராஜதுரை அவர்களுக்கு தமிழரசு கட்சி செய்த துரோத்தை இப் புத்தகம் வாசிக்கும்...
December 26 2017 - 23:14
வேட்புமனு கோரப்பட்டுள்ள 341 உள்ளூராட்சி சபைகளுக்குமான தபால் மூல வாக்களிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்திருந்த அரச சேவையிலுள்ள ஊழியர்களின் பெயர்ப் பட்டியல், எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி உறுதிப்படுத்தப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார். அதற்கமைய தகுதியுடைய அரச...
December 26 2017 - 23:11
உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். இன்று (26) ஊடக நிறுவனங்களுடன் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார். உள்ளுராட்சி சபை தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதோடு, அது...

செய்திகள்:

30.10.2017
அரசாங்கத்திற்கு சொந்தமான அதிசொகுசு வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கிலிருருந்து கருணா என அழைக்கப்படும், முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த அரசாங்க காலத்தில், வி. முரளிதரன் பிரதி அமைச்சராக இருந்த வேளையில் ரூபா 9 கோடி பெறுமதியான, ஜனாதிபதி செயலகத்துக்குரிய வாகனத்தை பெற்று உரிய முறையில் கையளிக்காது முறைகேடாக பயன்படுத்தியதாக...
30.10.2017
மட்டக்களப்பு கிரான் சந்தையில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக முஸ்லிம் வியாபாரிகள் தொடர்ந்து வியாபாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேறினர். இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தை வழக்கம் போல் கூடிய போது சந்தைக்கு அருகாமையில் "இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை" என்ற வாசகம் கொண்ட சுவரொட்டிகள் அடையாளம் தெரியாத நபர்களால் ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்ததாக...
29.10.2017
வீதிப் போக்குவரத்து சட்டம் தொடர்பாக அரசின் புதிய சட்ட திட்டங்கள் உள்ளடங்கிய மூன்று வர்த்தமானி அறிவித்தல்கள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார். அதன்படி போக்குவரத்து விதி மீறல்கள் சிலவற்றுக்காக 25,000 ரூபா தண்டம் அறவிடுவது தொடர்பான திருத்தங்களும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவுள்ளன. அத்துடன் முச்சக்கர...
29.10.2017
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு முன்னெடுத்திருப்பதாக அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று தெரிவித்தார். இதேவேளை இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் புதன் கிழமை வெளியிடப்படுமென்றும் அமைச்சர் கூறினார். மைதானமும் பந்தும் தயார் நிலையில் இருக்கின்றபோதும் போட்டியை நடத்துவதற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராலேயே...
24.10.2017
(23) பிற்பகல் திவுலபிட்டிய, ஹேன்பிட்டகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒரு ஆயுததாரி கொல்லப்பட்டுள்ளார். திவுலபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தூனகஹ, பல்லபான வீதியில் ஹேனகெதர பிரதேசத்தில் ஆயுதக் குழுவினரின் நடமாட்டம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அங்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது ஆயுதாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பதிலுக்கு...
24.10.2017
ம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் முறான வட்டி பகுதியில் வைத்து சட்ட விரோத மண்ணகழ்வில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆறு பேரும் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று உழவு இயந்திரம் உட்பட ஆற்று மண்ணுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். திருக்கோவில் பிரதேசத்தில் சாகாம் பகுதியில்...
22.10.2017
உள்ளூராட்சி சபைத் தேர்லில் நேர்மையும், திறமையும் வாய்ந்த அபேட்சகர்களை கட்சிகள் நிறுத்தாவிட்டால், புதிய தேர்தல் முறையிலுள்ள நன்மைகளை அடையமுடியாமல் போய்விடுமென பெப்ரல் அமைப்பு உட்பட12 அமைப்புகள் இணைந்து வலியுறுத்தியுள்ளன. அதேவேளை, நுவரெலியா போன்ற இடங்களை காரணங்காட்டி தேர்தலை ஒத்திப்போட வேண்டாமென்றும் அதனை ஒருபுறம் வைத்துவிட்டு தேர்தலை நடத்துமாறும் பொலநறுவை தமன்கடுவை பிரதேசத்தைப் போன்று விரைவான...
19.10.2017
எதிர்வரும் உள்@ராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து படகுச் சின்னத்தில் போட்டியிடுவதே எமது நிலைப்பாடு என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபைக் கிழை உறுப்பினர்களுடனான கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் மட்டக்களப்பு...
19.10.2017
மட்டக்களப்பு ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகனும் இவ்வாறு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த தாயும் மகனும் தனிமையில் இருந்த வேளை, வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பலொன்று தாயையும் மகனையும் கழுத்தறுத்துக்கொலை செய்து விட்டு அங்கிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின்...
19.10.2017
இலங்கை வரலாற்றில் அதிகூடிய அரச செலவினங்களைக் கொண்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலமாக 2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அமைந்திருப்பதாக ஜே.வி.பி விமர்சித்துள்ளது. பொது மக்களின் சலுகைகளைக் குறைத்து, ஆட்சியில் இருப்பவர்கள் தமக்கான வசதிகளை அதிகரித்துக் கொள்ளும் வகையில் ஒதுக்கீடுகள் அமைந்திருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பலவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில்...
19.10.2017
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் நிலை தொடர்பாக அமைச்சர் மனோகணேசன் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதன் போது தங்கள் மீதான வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமையை எதிர்த்து கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலையை ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறிய அமைச்சர் மனோகணேசன், கைதிகளின் நிலையால் வடக்கில் தோன்றியுள்ள போராட்ட நிலை தொடர்பிலும் விளக்கியுள்ளார்....
19.10.2017
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி வடக்கில் நேற்று அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலுக்குப் பூரண ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதியின் இன்றைய யாழ். விஜயத்தைப் புறக்கணிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. அரசியல் கைதிகளின் வழக்குகளை அனுராதபுர நீதிமன்றுக்கு மாற்றுவதை எதிர்த்து அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் சிறைக்ைகதிகளுக்கு ஆதரவாக வடக்கில் நடத்தப்பட்ட ஹர்த்தாலுக்கு...