February 15 2018 - 01:19
(டினேஸ்) எதிர்வரும் மாகாணசபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் கூட்டாக இணைந்து தமிழ் இணத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம் என்கின்றார் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் மீள் குடியேற்ற பிரதியமைச்சருமாக விநாயகமூர்த்து vமுரளிதரன் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனை பாரிய வெற்றியிட்டியதையடுத்து...
January 21 2018 - 03:23
மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் 6ஆம் வட்டாரம் கருவேப்பங்கேணி-ஜெயந்திபுரம் போட்டியிடும் வேட்பாளர் காந்தனின் அலுவலகம் மீதே...
January 04 2018 - 01:52
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி காரணமாக ரூபா 11,145 மில்லியன் (ரூபா 1114.5 கோடி ) இற்கும் அதிகமான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவும் தாம் பின்னிற்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான...
December 28 2017 - 09:52
மட்டக்களப்பின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமானான சொல்லின் செல்வன் திரு செல்லையா இராஜதுரை அவர்களினால் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் மீள் பிரசுர வடிவிலா புத்தக வெளியீடு அன்மையில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகரும் தலைவருமான தந்தை செல்வாவின் செல்லப்பிள்ளையும், தமிழரசு கட்சியை நாடறிய செய்தவருமான செ.இராஜதுரை அவர்களுக்கு தமிழரசு கட்சி செய்த துரோத்தை இப் புத்தகம் வாசிக்கும்...
December 26 2017 - 23:14
வேட்புமனு கோரப்பட்டுள்ள 341 உள்ளூராட்சி சபைகளுக்குமான தபால் மூல வாக்களிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்திருந்த அரச சேவையிலுள்ள ஊழியர்களின் பெயர்ப் பட்டியல், எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி உறுதிப்படுத்தப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார். அதற்கமைய தகுதியுடைய அரச...
December 26 2017 - 23:11
உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். இன்று (26) ஊடக நிறுவனங்களுடன் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார். உள்ளுராட்சி சபை தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதோடு, அது...
December 22 2017 - 01:23
நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21) பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். வளிமண்டலத்தில் நிலவும் உயர் - தாழ் மாறுபடும் குழப்பநிலை காரணமாக இன்று (21) மலையகத்தின்...
December 22 2017 - 01:12
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இன்றுடன் (21) நிறைவடைந்த இரண்டாம் கட்டமாக இடம்பெற்ற வேட்புமனுத்தாக்கலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், போதி பெண் உறுப்பினர்களை உள்ளடக்காததன் காரணமாக, வெலிகம பிரதேச சபை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மு....
December 21 2017 - 01:52
மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஐந்து சபைகளுக்குமான வேட்பு மனு இன்று புதன் கிழமை (20.12.2017) கட்சியின் பொது செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது வேட்பாளர்களும், ஆதரவாளர்களுமென பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
December 14 2017 - 19:34
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மட்டக்களப்பில் அறிவிக்கப்பட்ட நான்கு சபைகளக்கான வேவட்பு மனுக்களை இன்றுமாவட்ட செயலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ம.சிறிதரன் தலைமையில் இன்று தாக்கல் செய்தனர்.

செய்திகள்:

22.11.2017
முஸ்லிம் சமூகத்தினை பொறுத்தவரையில் அபிவிருத்திக்காக போராடிப் போராடி எந்த உரிமையினையும் இழக்கவில்லை. ஆனால் நாங்கள் உரிமைக்காக போராடி அபிவிருத்தியும் இல்லாமல் உரிமையும் இல்லாமல் இருப்பதை யதார்த்தமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட...
22.11.2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்ககோரியும் மீனவர்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு கோரியும் மட்டக்களப்பில் (21) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழிலாளர்கள் அமைப்புகள் மற்றும் மீனவர் அமைப்புகள்,பொது அமைப்புகள் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தன. சர்வதேச மீனவர் தினத்தினை முன்னிட்டு இந்த கவன ஈர்ப்பு போராட்டம்...
22.11.2017
“தன் மீது சுமத்தப்படும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை மறைக்க, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவரேனும் ஒருவரை விரைவில் கைது செய்ய நல்லாட்சி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது” என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கூட்டு எதிரணி சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதைத் தெரிவித்தார். அப்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது: “பிணைமுறி விவகாரம் குறித்த ஜனாதிபதி...
20.11.2017
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பினை பாதுகாக்கவேண்டுமானால் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தல்களை எதிர்கொள்ளவேண்டும் எனவும் அவ்வாறான கூட்டணிக்கு தமது கட்சி என்றும் தயாராகவிருப்பதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பி.பிரசாந்தன் தெரிவித்தார். 2008ஆம் ஆண்டு கொழும்பில் அத்துருகிரியவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட...
14.11.2017
நாட்டில் கடந்த சில தினங்களில் பெற்றோல் பற்றாக்குறை பாரிய ஒரு பிரச்சினையாக காணப்பட்டது இப்பிரச்சினை பாரிய ஒரு சதிதிட்டம் என்று பலர் பலவிதமாக கூறுகின்றனர் இந்த விடயத்துடன் தொடர்புடையவர்களை நாட்டிற்கு தெரியப்படுத்துவது அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவின் கடமை எனறு பாராளுமன்ற உறுப்பிணர் உதய கம்மன்பில தெரிவித்தார். கடந்த சில தினங்களில் பெற்றோல் பற்றாக்குறை பெரும் ஒரு பிரச்சினையாக காணப்பட்டது இது ஒரு...
13.11.2017
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று திங்கட்கிழமை முற்பகல் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏழு இளைஞர்களும் ஒரு பெண்ணும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை முற்பகல் மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதகவலின் அடிப்படையில் வீடு ஒன்றை முற்றுகையிட்டபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாண்டவெளி,பாரதீ வீதி இரண்டாம் குறுக்கு...
12.11.2017
11.11.2017
உள்ளூராட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் சற்று முன் வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி வர்த்தமானி அறிவித்தல் நாளை அல்லது நாளை மறுநாளே வெளியிடப்படும் என ஏற்கனவே அரச அச்சீட்டாளர் கங்கானி கல்பானி தெரிவித்திருந்தார். இருந்தபோதும், குறித்த அறிவித்தல் சற்று முன் வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதியும் அடங்கும்...
11.11.2017
கடவுச்சீட்டு, அடையாள அட்டை போன்ற அரச நிறுவனங்களில் பெற்றுக் கொள்ளும் சேவைகளுக்கான கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. கடந்த மூன்று வருடங்களில் திருத்தப்படாத கட்டணங்களே இவ்வாறு அதிகரிக்கப்படவிருப்பதாக நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அரசாங்க நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற சேவைகளுக்கான கட்டணங்கள் பல வருடங்களாக மறுசீரமைக்கப்படால் இருக்கின்றன. மூன்று வருடங்கள்...
09.11.2017
புதிய ஆணையாளரை வரவேற்கும் நிகழ்வும் , ஆணையாளரின் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வும் (8.11.207) மட்டக்களப்பில் நடைபெற்றது . திருகோணமலை நகர ஆணையாளராக கடமை யாற்றி தற்போது இடம்மாற்றம் பெற்று மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஆணையாளராக வருகை தந்துள்ள புதிய ஆணையாளர் என்.மணிவண்ணன் உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை பொறுப்புக்களை நிகழ்வும் அவரை வரவேற்கும் நிகழ்வும் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில்...
09.11.2017
இன்று நள்ளிரவு (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆறு அத்தியவசிய பொருட்களுக்கான விசேட வர்த்தக வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. கொழும்பிலுள்ள நிதியமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர (08) பிற்பகல் இதனை அறிவித்தார். அதன் அடிப்படையில், பின்வரும் ஆறு பொருட்களின் ஒரு கிலோவிற்கான விசேட வர்த்தக பொருள் வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. விதை...
07.11.2017
போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேசத்தின் சில கிராமங்களுக்கு களவிஜயம் மேற்கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் எதிர்வரும் உள்ளூராட்சி வட்டார முறை தேர்தல் தொடர்பாக இளைஞர்களையும் கிராமத் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடிய போது இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து படகு சின்னத்தில் களம் காண்பதனால் பல இளைஞர்கள் போட்டியிடுவதற்கு முண்டியடித்து...