July 01 2018 - 03:12
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரான நேசகுமாரன் விமலராஜுக்கு 22.05.2018 அன்று அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்ட சேவை இடைநிறுத்தத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றானது மேற்படி வேலையிலிருந்து இடைநிறுத்தியதை வன்மையாக கண்டித்துடன் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடை நிறுத்தியதை மீளப் பெறப்பட்டதுடன்...
June 20 2018 - 01:23
புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்களை சேகரித்து வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் முயற்சியில் இம்மாவட்டத்திலுள்ள பிரதேச செயலங்கள் மூலம் பிரதேச செயலாளர்களின் பங்களிப்பில் இந்த நிவாரணபொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க...
June 13 2018 - 01:12
மட்டக்களப்பு மனிதநேய அமைப்புகளின் ஒன்றியத்தின் (CHA) மாவட்ட அலுவலராக பணியாற்றிவந்த சொலமன் பசில் சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப்பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு விபுலானந்தா இசை, நடனக் கல்லூரியில் கடந்த வாரத்தில் நடைபெற்ற இவ்வைபவமானது யுத்தகாலத்தில் சமாதானத்தை வலியுறுத்தி, மூவினமக்களையும், குழுக்களையும் அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூகங்களை...
June 11 2018 - 01:00
மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக கடமையாற்றிய இரா.நெடுஞ்செழியன் கிழக்கு மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக கௌரவ முதலமைச்சர் செயலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் 1994 இல் இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கொண்ட இவர் கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சுஇ சமுர்த்தி அமைச்சு ஆகியவற்றில் கடமையாற்றி...
June 05 2018 - 15:06
45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் அவசியத்தினை கருத்திற் கொண்டு விண்ணப்பித்த 45 வயதிற்கு உட்பட்ட அனைவரும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 5,000 பட்டதாரிகள் 2018ம் ஆண்டு ஜுலை மாதத்திலும், 15,000 பட்டதாரிகளை 2018ம் ஆண்டு...
June 05 2018 - 15:04
ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறிஇ 97 வாக்குகளைப் பெற்று பிரதிச் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளைஇ 53 வாக்குகளைப் பெற்றார். ஆனந்த குமாரசிறியின் பெயரைஇ ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான புத்திக பத்திரண முன்மொழிந்தார்.
June 05 2018 - 14:58
கடமை நேரத்தில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் நோயாளிக்கு மருந்துகட்டும்போது வலிதாங்கமுடியாமல் அந்தநோயாளி தாக்கியதாகக் கூறப்படுகின்றது. பலரும் பார்த்திருக்கத்தக்கதாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாதிய தொழிற்சங்கமும் சம்பந்தப்பட்டது. வைத்தியசாலை நிருவாகம் எடுத்த நடவடிக்கையின் பேரில்...
June 05 2018 - 14:55
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான தலைமைக் காரியாலயம் இன்று (05) வெல்லாவெளி பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,...
June 05 2018 - 14:50
தேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவட்ட இப்தார் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பாலமுனை நடுவோடை கடற்கரையில் எதிர்வரும் 08ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா கலந்து கொள்கிறார்.
June 01 2018 - 01:00
நாட்டில் அரசாங்கம் இல்லை என்பதை ஜனாதிபதியின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அவரின் கூற்று தொடர்பில் ஆராய்ந்து உண்மைத் தன்மையை நாட்டுக்கு தெரியப்படுத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப் பெரும தலைமையில் குழு அமைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முனனாள் ஜனாதிபதி ஏற்பாடுசெய்த இப்தார் நிகழ்வு கொழும்பிலுள்ள அவரது...

செய்திகள்:

04.10.2011
இலங்கை இளைஞர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மண்முனைப்பற்று பிரதேசத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 26 மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 02.10.2011ம் திகதி நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கௌரவிப்பை நிகழ்த்தி வைத்தார்...
29.09.2011
பல வருடமாக களுவாஞ்சிக்குடி பொலிசாரினால் பயன்படுத்தப்படும் மண்முனை தென்எருவில் பற்று கோட்டக்கல்வி அலுவலகத்தினை தமது அலுவலக பாவனைக்கு பெற்றுத்தருமாறு மண்முனை தென் எருவில் பற்று கோட்ட அதிபர்கள் அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அரச அதிபருக்கு அனைத்து பாடசாலை அதிபர்களும் ஒப்பம் இட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில் மேற்படி கோட்டக்கல்வி அலுவலகம் பல...
29.09.2011
கி.மா. முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் ஒரு மனிதன் தன்னிறைவுள்ள மனிதனாக சமுதாயத்தில் வலம் வர வேண்டுமாக இருந்தால் கல்வி அறிவு என்பது முக்கிய தேவையாக உள்ளது. மட்டக்களப்பின் மேற்கு பிரதேசத்தில் உள்ள மக்கள் கடும் உழைப்பாளிகளாகவும் தைரியசாலிகளாகவும் அனைத்து பணிகளையும் திறம் ஏற்று செயற்படுத்தும் வல்லமை உள்ளவர்களாக உள்ள போதும் இப்பகுதியில் இருந்து அதிகமான கல்விமான்களின் உருவாக்கம் குறிப்பிடத்தக்க அளவிலேயே...
28.09.2011
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களின் வேண்டுகோளின் பெயரில் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் மீள் எழுச்சி திட்டத்தின் கீழ் 05 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படபோகின்றது. அழியா படகுகள் உட்பட ஒரே நேரத்தில் 30 படகுகள் தரித்து நிற்கும் வகையில் இந்த மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படவுள்ளதாகவும் இதற்கான ஆரம்ப பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் அறியமுடிகின்றது. இதன் மூலம்...
28.09.2011
பல ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்ற வவுணதீவு சின்னப்பாலம் யுத்தத்தாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டிருந்தது. உடைந்து விழும் தருவாயில் இருந்த நிலையில் பாலத்தை திருத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் ஒப்பந்தகாரர் நீதி மன்றம் சென்றதால் பல மாதமாக பாலம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று புது ஒப்பந்தகாரர் மூலம் பாலத்தை அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது.
28.09.2011
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்திற்கு பிரசித்தி பெற்ற களுதாவளைக் கிராம மக்கள் தங்களது வீதிகள் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மிகவும் மோசமான முறையில் பழுதடைந்து இதுவரை திருத்தப்படாமல் இருப்பதாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதன் காரணமாக முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பிரகாரம் மாகாணசபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அக்கிராமத்திற்கு சென்று குறிப்பிட்ட வீதிகளைப்...
28.09.2011
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் இளைஞர் கழக உறுப்பினர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பிரதேசத்திற்கு ஒரு வீடு என்ற வகையில் அமைக்கப்பட்டுவரும் 14 வீட்டுக் கட்டுமானப் பணிகளும் துரிதமாக நடைபெற்றுவருவதாக தெரியவருகின்றது. அமைச்சின் 1 இலட்சம் ரூபா நன்கொடையுடன் இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர்கள் பங்கேற்புடன் சுமார் 4-41ஃ2 இலட்சம் ரூபா பெறுமதி மிக்க வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றமை...
28.09.2011
காத்தான்குடி ஆறாம் குறிச்சியைச் சேர்ந்த தாயொருவர் ஆறு மாதக் குழந்தையை கிணற்றினுள் வீசி கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பாத்திமா ஹனா என்ற குழந்தையே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார். காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஹைறாத் நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். பாலமுனை கிராமத்தில் வசித்து வரும் இத்தாய் குடும்ப தகராறு காரணமாக காத்தான்குடியிலுள்ள அவரது சகோதரியின் வீட்டுக்கு...
28.09.2011
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தாதியர் பயிற்சி நெறிக்கு வர்த்தக, கலைப்பிரிவு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு வைத்தியசாலை முன்றலில் 03ஃ07ஃ2011 இடம்பெற்றது. இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தினை இலங்கை தாதியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்தினால் சுமார் 3 மணித்தியாலங்கள் வைத்தியசாலை...
28.09.2011
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பிமலை அழியா ஓடை கிராம மக்கள் நேற்று தங்களது பகுதிகளில் 5 வருடங்களின் பின்பு மீள்குடியமர்த்தப்பட்டனர். இவர்கள் 2006 ஆம் ஆண்டு நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்தார்கள். 23 குடும்பங்களைச் சேர்ந்த 107 பேர் இவ்வாறு குடியமர்த்தப்பட்டனர். கிரான் பிரதேச செயலாளர் வி.தவராஜா மாவட்ட திட்டமிடல்...
28.09.2011
மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர மகளிர் கல்லூரி மாணவர்களால் வெளியிடப்பட்ட பேழை சஞ்சிகையின் வெளியீட்டு விழா 03ஃ07ஃ2011 அன்று கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி.க.குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சின் தேசிய ஆலோசகருமான செல்வி தங்கேஸ்வரி கதிர்காமர் கலந்து கொண்டார். ஒவ்வொரு வருடமும் இந்த...
28.09.2011
விமானப்படைத் தளம் அமைக்கப்பட்டதன் பின் பல வருட காலமாக திருப்பெருந்துறை பகுதி மக்கள் நகரிற்கு வருவதற்கு சுமார் 3முஅ தூரம் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் அவர்களது பயனத்தை இலகு படுத்தும் நோக்குடன் சுமதாங்கி சந்தியில் இருந்து விமானப்படை தளத்தை சுற்றி பாதை அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கான நிதி ஒதுக்கீட்டினை கிழக்கு மாகாண முதலமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் ½ முஅ தூரம்...