May 04 2018 - 02:06
சுவாமி விபுலாந்தரின் 126வது பிறந்த தினம் 03.05.2017 மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் மாநகர உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், வலயக்கல்விப்பணிப்பாளர், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
April 26 2018 - 18:34
முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட ஐவரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸதீன் இன்று (26) உத்தரவிட்டார். அத்துடன், மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் தொகுபப, இந்த மாத இறுதியில் மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
April 26 2018 - 18:31
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய சில பதவிகளில் ​நேற்றிரவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற அரசியற்குழு கூட்டத்திலேயே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில், கட்சியின் பொதுச் செயலாளராக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். தவிசாளராக அமைச்சர் கபீர் ஹாசீம்...
April 26 2018 - 18:24
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையிலான சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச் .டி .கே .எஸ் கபில ஜயசேகர தலைமையில் இன்று மட்டக்களப்பு பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெற்றது இடம்பெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் , சிறுவர்களினதும் பல வினோத...
April 25 2018 - 17:54
மட்டக்களப்பு உதயம் வழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கொடி வாரம் இன்று தொடக்கம் எதிர்வரும் மே முதலாம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வாக, இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு எம்.உதயகுமாருக்கு முதல் கொடி அணிவிக்கப்பட்டு கொடிவாரம் ஆரம்பிக்கப்பட்டது.
April 25 2018 - 17:50
தந்தை செல்வா அவர்களின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு இரத்தான நிகழ்வு… இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகரும் தலைவருமான எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் 2018.04.26ம் திகதி மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சி மாவட்டக் காரியாலயத்தில் காலை 08.30 மணிக்கு இரத்ததான நிகழ்வு...
April 25 2018 - 17:47
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை, நாளை (26) வரை ஒத்திவைத்து, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸதீன் இன்று (25) உத்தரவிட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்...
April 25 2018 - 09:00
மட்டக்களப்பு மாவட்டத்தில், பிரதான வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலிகளால் பொதுமக்களும் வாகன சாரதிகளும் பெரும் அவலங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு பிரதான வீதிகளில் அலைந்து திரியும் பெருமளவிலான கட்டாக்காலி மாடுகளால், அடிக்கடி வீதி விபத்துகள் ஏற்படுவதுடன், வாகன சாரதிகளும் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பாதையில், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், அதிகமான கட்டாக்காலி...
April 25 2018 - 08:58
மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டால், இவ்வருட இறுதிக்குள் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தமுடியுமெனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, “அந்தக் கோரிக்கையை, சகல கட்சிகளின் செயலாளர்களிடமும் விடுக்கவுள்ளேன்” என்றார். ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர்...
April 24 2018 - 18:31
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயக பிரிவின் அமிர்தகழி கிராம இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் அமிர்தகழி கிராம சிரேஷ்ட பிரஜைகளின் ஒத்துழைப்புடன் புதுவருட கலை கலாசார விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நேற்று பிற்பகல் அமிர்தகழி ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது தமிழ் பாரம்பரிய கலாசாரத்தை நினைவு படுத்தும் வகையில் கலாசார விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது . இதன்போது போட்டிகளில் பங்குபற்றி...

செய்திகள்:

07.10.2011
சுகாதார வாரத்தையொட்டி அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு சுகாதார பனிமனையும், கல்முனை வடக்கு சமுர்த்தி வலயமும் இணைந்து பொது மக்கள் மத்தியில் டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைளில் இன்றையதினம் ஈடுபட்டனர். வீதிகளில் ஊர்வலமாகச் சென்று வீதி நாடகங்களை நடாத்தியதோடு டெங்கு நோயை ஒழிப்பது தொடர்பான பல்வேறுபட்ட விழிப்புணர்வு செயற்பாடுகளைச் மேற்கொண்டனர்.
07.10.2011
கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை அவரது மட்டக்களப்பு வாசஸ்த்தலத்தில் இன்று (07.10.2011) காலை 9.30 மணியளவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ஸ சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய...
07.10.2011
கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இக் கண்காட்சி இன்று (07.10.2011) காலை 09.30 க்கு வெபர் மைதானத்தில் ஆரம்பமாகின்றது. இக் கண்காட்சிக்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஸ உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
07.10.2011
நாளை நடைபெற உள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலே மனோ கணேசன் மற்றும் விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோரது தலைமையிலான கூட்டணிக்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. இத் தீர்மானத்துக்கு கட்சியல் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அறிய முடிகின்றது.
07.10.2011
சுனாமி மற்றும் அனர்த்தங்களின் போது உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் தேசிய பாதுகாப்பு தினம் இம்முறை மட்டக்களப்பு நகரில் நடைபெறவுள்ளது. டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது பாதுகாப்பு தினத்துக்கான பொறுப்புக்கள்...
07.10.2011
இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை ஏற்பாடு செய்துள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமாகி தொடர்ந்து மூன்று நாட்கள் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. மேற்படி வர்த்தக கண்காட்சியினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பிரதி அமைச்சர்களான எம். எல ஏ. எம....
07.10.2011
மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் பாலமீன்மடு மற்றும் இருதயபுர மத்திய வீதிகளின் ஆரம்ப வேலைகள் இன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ஸ அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாகாணசபை மற்றும் உள்ளுரட்சி மன்ற அமைச்சர் அதாவுல்லா மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் ஹிஸ்புல்லா,...
07.10.2011
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம்,வெள்ள அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான வாழ்வாதார உதவிகள், கால்நடைகள் வளங்கி வைக்கும் வைபவம் கிழக்கு மாகாண கால்நடை அமைச்சர் து.நவரெட்ணராஜா தலமையில் மட்டக்களப்பு கல்லடி கால்நடை அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு கால்நடை மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,...
07.10.2011
அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரோதமாக கல்லோயாப் பகுதியில் மணல் அகழ்த நால்வரை அக்கரைப் பற்றுப் பகுதியில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
06.10.2011
நவராத்திரி விழா மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச பணிமனைகள் பாடசாலைகள் கல்வி நிலையங்கள் இந்து ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகின்றது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் தீவிர முயற்சியால் கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட ர்Nனுயு கற்கை நிறுவனத்தில் வாணி விழா நிகழ்வு நேற்று மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்...
06.10.2011
- பிரதியமைச்சர் வி.முரளிதரன் - மட்டக்களப்பு மாவட்டம் கோடிக்கணக்கான அபிவிருத்தி பணிகளால் வீறுநடை போடுகிறது. பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவற்றை செய்யும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது எமது மக்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு நகர மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க குடிநீர் திட்டம்...
06.10.2011
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் கைத்தொழில் வணிக அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வர்த்தக கண்காட்சி நாளை ஆரம்பமாகவுள்ளது. கண்காட்சியில் 6 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 150 நிறுவனங்கள் பங்குபற்றவுள்ளது. மட்டக்களப்பில் முதல் தடவையாக 120 இலட்சம் ரூபா செலவில் நடத்தப்படுகின்ற கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள் மட்டும் இலவசமாக இதில் கலந்துகொள்ளமுடியும். அத்துடன் தினமும் இசை...