May 04 2018 - 02:06
சுவாமி விபுலாந்தரின் 126வது பிறந்த தினம் 03.05.2017 மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் மாநகர உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், வலயக்கல்விப்பணிப்பாளர், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
April 26 2018 - 18:34
முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட ஐவரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸதீன் இன்று (26) உத்தரவிட்டார். அத்துடன், மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் தொகுபப, இந்த மாத இறுதியில் மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
April 26 2018 - 18:31
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய சில பதவிகளில் ​நேற்றிரவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற அரசியற்குழு கூட்டத்திலேயே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில், கட்சியின் பொதுச் செயலாளராக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். தவிசாளராக அமைச்சர் கபீர் ஹாசீம்...
April 26 2018 - 18:24
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையிலான சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச் .டி .கே .எஸ் கபில ஜயசேகர தலைமையில் இன்று மட்டக்களப்பு பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெற்றது இடம்பெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் , சிறுவர்களினதும் பல வினோத...
April 25 2018 - 17:54
மட்டக்களப்பு உதயம் வழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கொடி வாரம் இன்று தொடக்கம் எதிர்வரும் மே முதலாம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வாக, இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு எம்.உதயகுமாருக்கு முதல் கொடி அணிவிக்கப்பட்டு கொடிவாரம் ஆரம்பிக்கப்பட்டது.
April 25 2018 - 17:50
தந்தை செல்வா அவர்களின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு இரத்தான நிகழ்வு… இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகரும் தலைவருமான எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் 2018.04.26ம் திகதி மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சி மாவட்டக் காரியாலயத்தில் காலை 08.30 மணிக்கு இரத்ததான நிகழ்வு...
April 25 2018 - 17:47
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை, நாளை (26) வரை ஒத்திவைத்து, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸதீன் இன்று (25) உத்தரவிட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்...
April 25 2018 - 09:00
மட்டக்களப்பு மாவட்டத்தில், பிரதான வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலிகளால் பொதுமக்களும் வாகன சாரதிகளும் பெரும் அவலங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு பிரதான வீதிகளில் அலைந்து திரியும் பெருமளவிலான கட்டாக்காலி மாடுகளால், அடிக்கடி வீதி விபத்துகள் ஏற்படுவதுடன், வாகன சாரதிகளும் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பாதையில், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், அதிகமான கட்டாக்காலி...
April 25 2018 - 08:58
மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டால், இவ்வருட இறுதிக்குள் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தமுடியுமெனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, “அந்தக் கோரிக்கையை, சகல கட்சிகளின் செயலாளர்களிடமும் விடுக்கவுள்ளேன்” என்றார். ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர்...
April 24 2018 - 18:31
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயக பிரிவின் அமிர்தகழி கிராம இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் அமிர்தகழி கிராம சிரேஷ்ட பிரஜைகளின் ஒத்துழைப்புடன் புதுவருட கலை கலாசார விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நேற்று பிற்பகல் அமிர்தகழி ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது தமிழ் பாரம்பரிய கலாசாரத்தை நினைவு படுத்தும் வகையில் கலாசார விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது . இதன்போது போட்டிகளில் பங்குபற்றி...

செய்திகள்:

17.10.2011
1976ம் வருடத்தின் முன் செட்கண் துப்பாக்கியுடனும் குண்டாளிந் தடிகளுடனும் கடமையில் ஈடுபட்ட இலங்கை படையினரை தேர்ச்சியடைய வைத்து பல கோடிக்கணக்கான ரூபா செலவில் நவினரக ஆயுதங்களையும் பல் குழல் பீரங்கிகளையும் பாவிக்க கூடிய அளவிற்கு கொண்டுவந்து விட்டது யார்? தமிழ் மக்களின் உரிமை, தமிழ் ஈழம் பெறுவோம் என்று அப்பாவி இளைஞர்களை உசுப்பேற்றுவது யார்? இன்று தாங்கள் சுகபோகமாக வாழும் தமிழ் தேசிய கூட்டமைப்பே....
15.10.2011
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீமிதிப்பு வைபவம் நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. இத்தீமிதிப்பு வைபவத்தில் பெருமளவான பக்தர்கள் தமது நேர்திக்கடனை நிறைவு செய்தனர்
15.10.2011
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற முதலாவது தெற்காசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி இலங்கைக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த மட்டக்களப்பு வீரர்களுக்கான பெரும் வரவேற்பு அழிக்கப்பட்டது. வெண்கலப்பதக்கத்தை வென்ற இலங்கையின் கபடி அணியில் சோட்டோகான் கழகத்தின் ராதாகிருஷ்ணன் சகீவன்இ கணேசராசா சினோதரன் அகியோரும்இ உதைபந்தாட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற அணியின் தலைவராக செயற்பட்ட புனித...
15.10.2011
உலக உளநல தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு உளநல அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்திருந்த சமூக இணைவினை நோக்கி எனும் நிகழ்வு ஆரையம்பதி மகாவித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை ஏதோ ஒரு வகையில் உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்களை நல்ல நிலைக்கு கொண்டுவர இவ்வாறான...
15.10.2011
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் அரசாங்க அதிபர் தலமையில் திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மாவட்ட அபிவிருத்திகுழு தலைவர் சுசந்த புஞ்சிநிலமே மற்றும் இனைத்தலைவரான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், புத்தசாசன அமைச்சர் குணவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகள், திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
15.10.2011
கடந்த காலங்களில் பயன்பாடற்று தூர்ந்துபோயிருந்த மீயான்கல் குளத்தின் அணைக்கட்டு வேலைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மிகவும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற அணைக்கட்டின் நிர்மான வேலைகளை கிழக்கு முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி அனைக்கட்டு பூரணப்படுத்தப்படும் வேளையில் குளத்தைச் சூழவுள்ள சுமார் 2500 ஏக்கர் காணி செய்கை பண்ணப்படும் என்பது...
15.10.2011
கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீயான்கல் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயத்திற்கு ஒலிபெருக்கி தொகுதி மற்றும் மின்பிறப்பாக்கியினை கிழக்கு முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் அன்பளிப்பு செய்தார். சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியிலான பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன. மேற்படி நிகழ்வில் கிழக்க மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிரான் பிரதேச செயலாளர் கே...
15.10.2011
சிவில் பாதுகாப்பு குழு கூட்டமானது நாட்டின் சகல பாகங்களிலும் இடம்பெற்று வருகின்றது. ஒவ்வொரு மாவட்டங்களிலுமுள்ள சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மற்றும் கிராம மட்டங்களிலும் மேற்படி சிவில் பாதுகாப்பு குழு நியமிக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1வது சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி...
15.10.2011
திருகோணமலை புணித மேரி பெண்கள் கல்லூரிக்கும், மட்டக்களப்பு புணித சிசிலியா பெண்கள் கல்லூரிக்கும் இடையில் வருடாவருடம் நடைபெற்று வருகின்ற மரியன் செசில் விக் மெச் இவ்வருடம் மட்டக்களப்பு புணித சிசிலியா பெண்கள் கல்லூரியில் (14.10.2011) இடம் பெற்றது. மேற்படி இடம்பெற்ற வலைப்பந்தாட்ட போட்டியிலே மட்டக்களப்பு புணித சிசிலியா பெண்கள் கல்லூரி சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது. இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக...
13.10.2011
வேலாயுதம் படத்தில் நடித்தபோது, ஜெனிலியாவுடன் எந்த மோதலும் ஏற்படவில்லை, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி, சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் "வேலாயுதம்". ஜெயம் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் வேலாயுதம் படப்பிடிப்பின் போது ஜெனிலியாவும்...
13.10.2011
கல்முனை இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயத்தில் (11.10.2011) 2011ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா மற்றும் பவளவிழா கொண்டாட்டம் அதிபர் திருமதி. எ.பேரின்பராஜா அவர்களின் தலமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் அதிதிகளாக சுவாமி ஞானமயானந்தா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கல்முனை வலயகல்வி பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள்...
13.10.2011
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் வனவாச நிகழ்வு புதன்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.