May 04 2018 - 02:06
சுவாமி விபுலாந்தரின் 126வது பிறந்த தினம் 03.05.2017 மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் மாநகர உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், வலயக்கல்விப்பணிப்பாளர், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
April 26 2018 - 18:34
முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட ஐவரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸதீன் இன்று (26) உத்தரவிட்டார். அத்துடன், மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் தொகுபப, இந்த மாத இறுதியில் மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
April 26 2018 - 18:31
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய சில பதவிகளில் ​நேற்றிரவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற அரசியற்குழு கூட்டத்திலேயே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில், கட்சியின் பொதுச் செயலாளராக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். தவிசாளராக அமைச்சர் கபீர் ஹாசீம்...
April 26 2018 - 18:24
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையிலான சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச் .டி .கே .எஸ் கபில ஜயசேகர தலைமையில் இன்று மட்டக்களப்பு பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெற்றது இடம்பெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் , சிறுவர்களினதும் பல வினோத...
April 25 2018 - 17:54
மட்டக்களப்பு உதயம் வழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கொடி வாரம் இன்று தொடக்கம் எதிர்வரும் மே முதலாம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வாக, இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு எம்.உதயகுமாருக்கு முதல் கொடி அணிவிக்கப்பட்டு கொடிவாரம் ஆரம்பிக்கப்பட்டது.
April 25 2018 - 17:50
தந்தை செல்வா அவர்களின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு இரத்தான நிகழ்வு… இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகரும் தலைவருமான எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் 2018.04.26ம் திகதி மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சி மாவட்டக் காரியாலயத்தில் காலை 08.30 மணிக்கு இரத்ததான நிகழ்வு...
April 25 2018 - 17:47
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை, நாளை (26) வரை ஒத்திவைத்து, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸதீன் இன்று (25) உத்தரவிட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்...
April 25 2018 - 09:00
மட்டக்களப்பு மாவட்டத்தில், பிரதான வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலிகளால் பொதுமக்களும் வாகன சாரதிகளும் பெரும் அவலங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு பிரதான வீதிகளில் அலைந்து திரியும் பெருமளவிலான கட்டாக்காலி மாடுகளால், அடிக்கடி வீதி விபத்துகள் ஏற்படுவதுடன், வாகன சாரதிகளும் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பாதையில், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், அதிகமான கட்டாக்காலி...
April 25 2018 - 08:58
மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டால், இவ்வருட இறுதிக்குள் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தமுடியுமெனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, “அந்தக் கோரிக்கையை, சகல கட்சிகளின் செயலாளர்களிடமும் விடுக்கவுள்ளேன்” என்றார். ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர்...
April 24 2018 - 18:31
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயக பிரிவின் அமிர்தகழி கிராம இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் அமிர்தகழி கிராம சிரேஷ்ட பிரஜைகளின் ஒத்துழைப்புடன் புதுவருட கலை கலாசார விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நேற்று பிற்பகல் அமிர்தகழி ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது தமிழ் பாரம்பரிய கலாசாரத்தை நினைவு படுத்தும் வகையில் கலாசார விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது . இதன்போது போட்டிகளில் பங்குபற்றி...

செய்திகள்:

18.10.2011
2012ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் 21ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வால் சமர்பிக்கப்படவுள்ளது. 2012ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட குறைநிரப்புப் பிரேரணை சற்றுமுன்னர் பாராளுமன்றில் பிரதமர் தி.மு. ஜயரட்னவால் சமர்பிக்கப்பட்டது.
18.10.2011
இலங்கை கட்டுமாண கைத்தொழில் அமையம் மற்றும் ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனம் ஆகியன இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கும் முகமாக ஏற்பாடு செய்த நடமாடும் பயிற்சிநெறியொன்று இன்று காலை மட்டக்களப்பு - பிள்ளையாரடியில் உள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமானது. தற்போது 7 பயிற்சி நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று...
18.10.2011
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு கிராமத்திற்கு கிழக்கு முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இன்று (17.10.2011) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அக் கிராம மக்களுடன் கலந்துரையாடி கிராமத்தின் முக்கிய தேவைகளான காணி, வீதி பிரச்சனைகளை இனம்கண்டு அதனை பூர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
18.10.2011
ஏனைய போராட்டங்கள் அழிந்தாலும் பேனா முனைப் போராட்டம் அழியாது. அழிந்ததாய் எந்தவித சரித்திரமும் கிடையாது என மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி என்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார். காலஞ்சென்ற அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களான கே.எம்.தருமலிங்கம் மற்றும் ஏ.எம்.அலிகன் ஆகியோருக்கான இரங்கற் கூட்டம் 15-10-2011ம் திகதி கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து...
17.10.2011
கல்முனை,அக்கரைபற்று ,மட்டக்களப்பு லயன்ஸ் கழகங்கள் இணைந்து மட்டக்களப்பு ''தரிசனம்'' விழிப்புலனற்றோர் பாடசாலையுடன் நடத்தப்பட்ட இந்நிகழ்வு கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் நடைபெற்றது .கல்முனை இராம கிருஸ்ணமகா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த விழிப்புணர்வு ஊர்வலம் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் முடிவடைந்தது .
17.10.2011
அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் மகிந்த சிந்தனை அடிப்படையில் சுமார் 800 கோடி ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட மட்டக்களப்பு ஒருங்கிணைப்பு குடிநீர் வழங்கும் திட்டம் 19ம் திகதி புதன் கிழமை 10.00 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இதற்காக ஜனாதிபதி வவுணதீவிற்கு வருகை தரவள்ளார். ஜனாதிபதியை வரவேற்பதற்கு ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் இடம்பெற்று வருகின்றமை...
17.10.2011
கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் மாகாண கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் தமிழ் இலக்கிய விழா கடந்த மூன்று நாட்களாக மட்டக்களப்பில் இடம்பெற்றுவருகின்றது. இவ் இலக்கிய விழாவானது இலக்கிய ஆய்வரங்கு, பண்பாட்டு பேரணி, இலக்கியவாதிகள் மற்றும் கவிஞர்களுக்கான முதலமைச்சர் விருது வழங்கல் நிகழ்வு நடைபெற்று வருகின்றன. இறுதி நாளான இன்று முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்வு மட்/மகாஜனக்...
17.10.2011
ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவராக உள்நாட்டு கூட்டுறவு பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கோரளைப்பற்று மத்தி ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி குழு இணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஏறாவூர் அபிவிருத்தி குழு தலைவராக...
17.10.2011
கி.மா.உ.பூ.பிரசாந்தன் இளைஞர்களின் பலம் அவர்களுக்கே புரியாமல் இருப்பதுதான் அவர்களின் பலவீனம். கண்டதும் காதல், காதலில் தோல்வியானால் வாழ்க்கை விரத்தி, மதுவுக்கு அடிமை அதனால் மற்றவருக்கு ஏளனம், சமூகத்திற்கு சீர்குலைப்பு என்ற வரம்புக்குள் இளைஞர்கள் அடிபணியக்கூடாது. கர்ச்சிக்கும் கடலலையையும் மதம் கொண்ட யானையையும் விட இளைஞர்களின் இளமையின் பலம் அதிகமானது. நிரந்தர சமாதானத்திற்கும் விட்டுக் கொடுப்புக்கும்...
17.10.2011
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இன நல்லுறவை மேம்படுத்தும் நோக்குடன் கொழும்பு – மட்டக்களப்பு இளைஞர் பறிமாற்றுத் திட்டத்தின் கீழ் தென்பகுதியில் இருந்து 50 இளைஞர்கள் மட்டக்களப்பிற்கு வருகை தந்திருந்தனர். இவர்களுக்கான 7 நாள் செயலமர்வு அண்மையில் தாளங்குடா பகுதியில் இடம்பெற்றது. இதன் இறுதிநாள் நிகழ்வின் போதே மது போதையில் இருந்த கொழும்பு இளைஞர்களால் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர்...
17.10.2011
கி.மா.உ.பூ.பிரசாந்தன் வந்தாரை வாழவைக்கும் மட்டக்களப்பில் தமிழர்களின் கலைகலாசாரத்துக்குள் பண்பு கனிவு மிக முக்கியமானது. மற்றவர்களின் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வது அதிக சந்தோஷத்திலும், பாதிப்பு வரும் அதிக துன்பத்திலும், உயர் மன அழுத்தல் வரும் போதும் தமது உள்ளக் கிடக்கைகளை யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் என்ற நிலை தோன்றும் போது அதனைக் கேட்பதற்கு கூட நேரம் இல்லாத நிலை தோன்றிவருவது...
17.10.2011
பொன்.செல்வராசா, பா.உ கல்முனை மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவடைந்தமையால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா குறிப்பிட்டுள்ளார். கல்முனை மாநகர சபை தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த 2006ம் ஆண்டு தேர்தலின் போது ஆறு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டதாகவும்...